காங்கோ ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: pt:Rio Congo
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: nl:Kongo (rivier)
வரிசை 79: வரிசை 79:
[[mr:काँगो नदी]]
[[mr:काँगो नदी]]
[[new:कङ्गो खुसि]]
[[new:कङ्गो खुसि]]
[[nl:Kongo (stroom)]]
[[nl:Kongo (rivier)]]
[[nn:Kongoelva]]
[[nn:Kongoelva]]
[[no:Kongo (elv)]]
[[no:Kongo (elv)]]

18:01, 10 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

காங்கோ ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்அட்லாண்டிக் பெருங்கடல்
நீளம்4,700 கிமீ (2,922 மைல்)
ஆப்பிரிக்காவில் காங்கோ ஆறு பாயும் பகுதி

காங்கோ ஆறு (Congo River) ஆப்பிரிக்காவின் மேற்கு நடுப்பகுதியில் உள்ள ஒரு பெரிய ஆறு ஆகும். இதை முன்னர் சயர் ஆறு (Zaire River) என்று அழைத்தனர். இதன் நீளம் 4,700 கிமீ. இந்த ஆறே நைல் ஆற்றுக்கு அடுத்து ஆப்பிரிக்காவின் நீளமான ஆறு.

காங்கோ ஆறும் அதன் துணை ஆறுகளும் உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடுகளின் வழியாகப் பாய்கின்றன. இதுவே அமேசான் ஆற்றுக்கு அடுத்து கூடுதல் நீரோட்டம் உடைய ஆறு. இதன் ஆற்றோட்டம் நொடிக்கு 41,800 கனமீட்டர் (m³/s) ( நொடிக்கு 1,476,376 கன சதுர அடி (ft³/s)). இவ்வாற்றுப் படுக்கையின் பரப்பு 3,680,000 சதுர கிலோமீட்டர். காங்கோ ஆறு தான் உலகின் மிகவும் ஆழமான ஆறு. சில இடங்களில் இதன் ஆழம் 750 அடிக்கும் அதிகம்.

காங்கோ ஆறு கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவின் மலைப்பகுதிகளில் இருந்தும், டாங்கனிக்கா ஏரி, மேரு ஏரிகளில் தொடங்கி லுலாபா ஆற்றுடன் சேர்ந்து பயோமா அருவியைக் கடந்தபின் காங்கோ ஆறு என பெயர் பெறுகின்றது. துணையாறாகிய சம்பேசி ஆறுதான் காங்கோ ஆற்றின் தொடக்கம்.

காங்கோ மக்கள் குடியரசு, காங்கோ குடியரசு ஆகிய இருநாடுகளும் இவ்வாற்றின் பெயரினை அடிப்படையாகக்க கொண்டே பெயரிடப்பட்டன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கோ_ஆறு&oldid=713834" இலிருந்து மீள்விக்கப்பட்டது