நல்ல சமாரியன் உவமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fa:سامری نیکوکار
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sr:Прича о добром Самарићанину
வரிசை 54: வரிசை 54:
[[pt:Bom samaritano]]
[[pt:Bom samaritano]]
[[ru:Притча о добром самарянине]]
[[ru:Притча о добром самарянине]]
[[sr:Прича о добром Самарићанину]]
[[sv:Den barmhärtige samariern]]
[[sv:Den barmhärtige samariern]]
[[uk:Притча про доброго самарянина]]
[[uk:Притча про доброго самарянина]]

05:10, 28 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

"நல்ல சமாரியன்" From a collection of public domain Christian clip art.

நல்ல சமாரியன் கிறிஸ்தவ விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள ஒரு உவமையாகும். இது இயேசு கூறிய உவமயாகும். நான்கு நற்செய்திகளில் லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) மட்டுமே காணப்படுகிறது. உண்மை அன்பே கடவுளின் சட்டத்தை நிறைவேற்றுவதாகும் அன்றி எழுத்திலுள்ளவற்றை நிறைவேற்றல் மட்டுமில்லை என்பது அடிப்படை கருத்தாகும்.

பின்னனி

இயேசு இவ்வுவமைய கூறுவதற்கான பின்னனி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இயேசு போதித்துக்கொண்டிருக்கும் போது, திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று எழுதியுள்ளது" என்றார். இயேசு, "சரியாகச் சொன்னீர் அப்படியே செய்யும் அப்பொழுது வாழ்வீர்" என்றார்.

அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு மறுமொழியாகக் கூறிய உவமை நல்ல சமாரியன் உவமையாகும்.

உவமை

ஒருவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.மறுநாள் இருதெனாரியத்தை (நாணயம்) எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும் இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.

கருத்து

பரிவு அன்பு என்பவேயன்றி ஒருவனது திருச்சட்ட அறிவோ பதவியோ நிலையான வாழ்வை அளிக்காது என்பது முக்கிய கருத்தாகும். அக்காலத்தில் யூதர் சமாரியரை தாழ்ந்த வகுப்பினராக நடத்தினர்.இயேசு இங்கு சமாரியனை பயன்படுத்தியது எல்லோரும் சமன் என்ற கருத்தையும் வழியுறுத்துகிறது. இன்று கலாச்சாரங்களுக்கு ஏற்றபடி சமாரியனின் கதாபாத்திரம் மாற்றி பாவிக்கப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்


உசாத்துணை

வெளி இணப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_சமாரியன்_உவமை&oldid=705301" இலிருந்து மீள்விக்கப்பட்டது