வெள்ளை யானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17: வரிசை 17:





==மேலும் அறிய ==
*[[Abul-Abbas]], a white elephant gifted to [[Charlemagne]] by [[Harun al-Rashid]].
*[[Airavata]], a white elephant whom the god [[Indra]] rides.
*[[Hanno (elephant)]], the pet of [[Pope Leo X]]
*[[Seeing pink elephants]], a euphemistic term for visual [[hallucination]] arising from [[alcohol intoxication]].
*[[White elephant gift exchange]], a popular winter holiday party game in the U.S.


==குறிப்பு==
==குறிப்பு==

07:29, 25 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தாய்லாந்தின் வெள்ளை யானை ஓவியம்

வெள்ளை யானை என்பது பலர் நினைப்பது போல் பால் போன்று வெண்மையாக இருப்பதில்லை .இந்த யானைகள் இளஞ் சிவப்பு நிறத்தில் இருக்கும் .வெள்ளை யானைகளிடமிருந்து எந்த வேலையையும் வாங்க மாட்டார்கள் .ஆயினும் அதை வைத்து வளர்க்கும் பெருஞ் செலவினங்களை குறிக்கவே வெள்ளை யானை எனும் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

இந்து மதமும் பௌத்த மதமும்

இந்து மதத்தில் வெள்ளை யானை இந்திரனின் வாகனமாக கருதப்படுகிறது .இந்திரனின் வெள்ளை யானையை ஐராவடம் என அழைப்பர் .பௌத்த மதத்தில் கூட புத்தர் வெள்ளை யானையின் முதுகில் ஏறி மாயாதேவியின் கருவில் சென்றதாக ஒரு நம்பிக்கை உண்டு .எனவே புத்த மதத்தினர் வெள்ளை யானையை கடவுளாக கருதுகின்றனர்.

தாய்லாந்து

உலகில் வெள்ளை யானைகள் அதிகம் காணப்படும் நாடு தாய்லாந்து .அதனாலே தாய்லாந்திற்கு வெள்ளை யானை பூமி என்றொரு பெயரும் உண்டு .தாய்லாந்து மக்கள் வெள்ளை யானையை புனிதமாக கருதுகின்றனர் .அங்கு தங்கத் தட்டில் தான் வெள்ளை யானைகளுக்கு உணவளிக்கப்படுகிறது .மேலும் ஊர் அரசனுக்குரிய அனைத்து வசதிகளும் அவற்றிக்கும் செய்து தரப்படுகிறது.அதுமட்டுமின்றி வெள்ளை யானையை கண்டுப் பிடிப்போருக்கு வரி சலுகையளிக்கப்பட்ட அரசு நிலங்களும்பரிசாக அளிக்கப்படுகிறது .தாய்லாந்து நாட்டின் மேம்பாட்டு தந்தை என்று அழைக்கப்படும்'மொங்குட்' அரசரின் தலைமையில் வடிவமைக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் தேசியக்கொடியில் கூட வெள்ளை யானையின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

மியான்மர்(பர்மா)

தாய்லாந்து நாட்டிக்கு அடுத்தப்படியாக வெள்ளை யானைகள் அதிகம் தென்படுகின்ற நாடு மியான்மர்(பர்மா). வெள்ளை யானை வலிமையின் சின்னம். எந்த நாட்டில் வெள்ளை யானை உள்ளதோ, அந்த நாடு செழிப்பாக இருக்கும்; மக்கள் அமைதியாக வாழ்வர். எந்த அபாயமும் நாட்டிற்கு ஏற்படாது...' என்பது மியான்மர் மக்களின் நம்பிக்கை. 2001ல் இருந்து 2010 வரை மியான்மரில் நான்கு வெள்ளை யானைகள் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது .


குறிப்பு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
White elephants
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வார்ப்புரு:Symbols of Thailand

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_யானை&oldid=702769" இலிருந்து மீள்விக்கப்பட்டது