ஹொங்கொங் காவல் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9: வரிசை 9:
அத்துடன் உலகில் பாதுகாப்புமிக்க நகரங்களில் ஹொங்கொங்கும் ஒன்று எனும் நற்பெயர் சான்றினையும் ஹொங்கொங் காவல்துறையினர் வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் உலகில் பாதுகாப்புமிக்க நகரங்களில் ஹொங்கொங்கும் ஒன்று எனும் நற்பெயர் சான்றினையும் ஹொங்கொங் காவல்துறையினர் வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


==தமிழில் முறையீடு மற்றும் படிமம்==
ஹொங்கொங்கின் மக்கள் தொகை 2009ம் ஆண்டின் கணக்கின் படி 7,003,700 ஆகும். <ref>[http://www.google.co.uk/#hl=en&xhr=t&q=hong+kong+population&cp=13&pf=p&sclient=psy&aq=0&aqi=&aql=&oq=hong+kong+pop&pbx=1&fp=6e7438af88efd7c8 Population, Hong Kong]</ref> இதில் 95% வீதமானோர் ஹொங்கொங்கர் ஆகும். மிகுதியான 5% வீதமானோரே எனைய சமூகத்தினர். இதில் [[இந்தி]], [[நேபாளம்|நேபாளி]], போன்ற இனத்தவர்கள் விகிதாசாரப்படி 1% வீதத்திற்கும் குறைவானதாகும். தமிழர்களின் என்னிக்கை தசமப் புள்ளிகளில் தான் உள்ளது. இருப்பினும் தமிழர்களால் கூட தமிழில் எழுதி ஹொங்கொங் காவல்துறையினருக்கு முறையீடு செய்யக்கூடிய சட்டம் இங்கு உள்ளது. தமது முறையீடுகளின் போது, [[ஆங்கிலம்|ஆங்கிலமோ]], [[கண்டோனீசு]] மொழியோ தெரியாவிட்டாலும், தமிழ் மொழிப்பெயர்ப்பாளர் வழங்கப்படுகிறது. அதேவேளை இணைத்தின் ஊடாகவும் பன்மொழியில் முறையிடக் கூடிய வசதிகளையும் ஹொங்கொங் காவல் துறை கொண்டுள்ளது. தமிழில் முறையிடவும் முடியும். <ref>[http://www.police.gov.hk/info/doc/cif/Pol%20852%20-%20Crime%20Information%20Forms%20-%20(Tamil).pdf குற்றத் தகவல் படிமம்]</ref> எந்த ஒரு முறையீட்டையும் அசட்டை செய்வதோ, புறக்கணிப்பதோ ஹொங்கொங் காவல் துறையிடன் காண்பதற்கில்லை. மின்னஞ்சல் வழி தொடர்புக்கு என்றாலும் கட்டாயம் பதில் வரும்.
ஹொங்கொங்கின் மக்கள் தொகை 2009ம் ஆண்டின் கணக்கின் படி 7,003,700 ஆகும். <ref>[http://www.google.co.uk/#hl=en&xhr=t&q=hong+kong+population&cp=13&pf=p&sclient=psy&aq=0&aqi=&aql=&oq=hong+kong+pop&pbx=1&fp=6e7438af88efd7c8 Population, Hong Kong]</ref> இதில் 95% வீதமானோர் ஹொங்கொங்கர் ஆகும். மிகுதியான 5% வீதமானோரே எனைய சமூகத்தினர். இதில் [[இந்தி]], [[நேபாளம்|நேபாளி]], போன்ற இனத்தவர்கள் விகிதாசாரப்படி 1% வீதத்திற்கும் குறைவானவர்களாகும். தமிழர்களின் எண்ணிக்கை தசமப் புள்ளிகளில் தான் உள்ளது. இருப்பினும் தமிழர்கள் தமிழில் எழுதி ஹொங்கொங் காவல்துறையினருக்கு முறையீடு செய்யக்கூடிய சட்டம் இங்கு உள்ளது. எந்த ஒரு மொழியினரும் தமது முறையீட்டின் போதும் விசாரனைகளின் போதும் மொழிப்பெயர்ப்பாளர் கட்டாயம் வழங்கப்படுகிறது. தமிழர்களுக்கு தமிழ் மொழிப் பெயர்ப்பாளர்கள் நிச்சயம் வழங்கப்படும். அதேவேளை இணைத்தின் ஊடாகவும் பன்மொழி முறையீட்டு வசதிகயையும் ஹொங்கொங் காவல் துறை வழங்குகிறது. அதில் தமிழில் முறையிடக் கூடிய வசதியும் உள்ளது.<ref>[http://www.police.gov.hk/info/doc/cif/Pol%20852%20-%20Crime%20Information%20Forms%20-%20(Tamil).pdf குற்றத் தகவல் படிமம்]</ref> எந்த ஒரு முறையீட்டையும் அசட்டை செய்வதோ, புறக்கணிப்பதோ ஹொங்கொங் காவல் துறையிடன் காண்பதற்கில்லை. மின்னஞ்சல் வழி தொடர்புக்கு என்றாலும் கட்டாயம் பதில் வரும்.


==சுருக்கப்பார்வை==
==சுருக்கப்பார்வை==

06:40, 24 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

ஹொங்கொங் காவல்துறையின் சின்னம்
ஹொங்கொங் காவல்துறையினரின் மரியாதைச் செலுத்தல் நிகழ்வு ஒன்று

ஹொங்கொங் காவல்துறை அல்லது ஹொங்கொங் காவல் படை (Hong Kong Police Force or Hong Kong Police) என்பதனை சுருக்கமாக HKP என்றும் HKPF என்றும் குறிப்பர். ஹொங்கொங்கில் சட்ட ஒழுங்கைப் பேணுவதில், தலைச்சிறந்ததும் பாரியதுமான பணியை ஹொங்கொங் காவல்துறை செய்துவருகின்றது. ஹொங்கொங் காவல்துறை ஹொங்கொங்கின், பாதுகாப்பு இலாகாவின் கீழ் இயங்கும், ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணியகத்தின் பிரதானத் துறையாகும். அத்துடன் ஹொங்கொங் காவல்துறை உலகின் இரண்டாவதும் ஆசியாவின் முதலாவதுமான தற்கால காவல்துறை முகவரமைப்பு முறைமையைக் கொண்டியங்குகிறது.

சிறப்பு

ஹொங்கொங் காவல்துறை வண்டி

ஹொங்கொங் காவல்துறையை கடமைத்தவறாமை, ஒழுங்கமைப்பு, நன்னடத்தை, சட்ட ஒழுங்கைக்காப்பாற்றுதல் போன்றவற்றில் துரிதமாக இயங்கும் ஒரு சிறந்த காவல்துறையாக விளங்குகின்றது. அதாவது மேற்கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஹொங்கொங்கில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஊடகத்துறையில் பணியாற்றிய பன்னாட்டு புகழ்பெற்ற நியூசிலாந்தைச் சேர்ந்த கெவின் சின்கிலேயர் (Kevin Sinclair) முதல் அமெரிக்காவின் நீதி திணைக்களத்தின் கூட்டரசு புலனாய்வுப் பெட்டகம் (Federal Bureau of Investigation) மற்றும் சர்வதேச குற்றத் தடுப்பு பிரிவான இன்டர்போல் (INTERPOL) வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அத்துடன் ஆசியாவிலேயே சிறந்த காவல்துறை "Asia's Finest" எனும் சிறப்பும் ஹொங்கொங் காவல் துறைக்கு உண்டு. [1][2][3]

அத்துடன் உலகில் பாதுகாப்புமிக்க நகரங்களில் ஹொங்கொங்கும் ஒன்று எனும் நற்பெயர் சான்றினையும் ஹொங்கொங் காவல்துறையினர் வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் முறையீடு மற்றும் படிமம்

ஹொங்கொங்கின் மக்கள் தொகை 2009ம் ஆண்டின் கணக்கின் படி 7,003,700 ஆகும். [4] இதில் 95% வீதமானோர் ஹொங்கொங்கர் ஆகும். மிகுதியான 5% வீதமானோரே எனைய சமூகத்தினர். இதில் இந்தி, நேபாளி, போன்ற இனத்தவர்கள் விகிதாசாரப்படி 1% வீதத்திற்கும் குறைவானவர்களாகும். தமிழர்களின் எண்ணிக்கை தசமப் புள்ளிகளில் தான் உள்ளது. இருப்பினும் தமிழர்கள் தமிழில் எழுதி ஹொங்கொங் காவல்துறையினருக்கு முறையீடு செய்யக்கூடிய சட்டம் இங்கு உள்ளது. எந்த ஒரு மொழியினரும் தமது முறையீட்டின் போதும் விசாரனைகளின் போதும் மொழிப்பெயர்ப்பாளர் கட்டாயம் வழங்கப்படுகிறது. தமிழர்களுக்கு தமிழ் மொழிப் பெயர்ப்பாளர்கள் நிச்சயம் வழங்கப்படும். அதேவேளை இணைத்தின் ஊடாகவும் பன்மொழி முறையீட்டு வசதிகயையும் ஹொங்கொங் காவல் துறை வழங்குகிறது. அதில் தமிழில் முறையிடக் கூடிய வசதியும் உள்ளது.[5] எந்த ஒரு முறையீட்டையும் அசட்டை செய்வதோ, புறக்கணிப்பதோ ஹொங்கொங் காவல் துறையிடன் காண்பதற்கில்லை. மின்னஞ்சல் வழி தொடர்புக்கு என்றாலும் கட்டாயம் பதில் வரும்.

சுருக்கப்பார்வை

வழிக்காட்டும் காவல்துறை பணியாளர் (மக்களுக்கு வழிக்காட்டுதலும் ஹொங்கொங் காவல்துறையினரின் கடமைகளில் ஒன்றாகும்.)

ஹொங்கொங்கிற்கு தூங்காத நகரம் எனும் பெயரும் உண்டு. ஹொங்கொங்கில் பல இடங்களில் இரவு பகல் எனும் வேறுப்பாடு இல்லாமல் மக்கள் நெரிசல் காணப்படும். இவ்வாறான சூழ்நிலையில் எவரும் எந்த இடத்திற்கும் எங்கும் அச்சமின்றி செல்லும் நிலை உண்டு. இரவு நேரங்களில்இரவு கூடலகம், இரவு சொகுசகங்கள், ஆடலகங்கள் போன்றவற்றில் அறைக்குறை ஆடையுடன் ஆடும் பெண்களும் அதே உடையுடன் இரவு பன்னிரெண்டு மணிக்கும் தன்னந்தனியே எங்கும் செல்லக்கூடிய அளவிற்கு, பெண்களுக்கான பாதுகாப்பும் ஹொங்கொங் எங்கும் உள்ளது. ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் 999 இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தால் அடுத்தக் கணமே ஹொங்கொங் காவல்துறை அங்கே சூழ்ந்துவிடும். ஹொங்கொங் காவல் துறையினரின் சிறப்புகளில் பிரதானமானது, ஒரு பிரச்சினை நடந்தப்பின் அவ்விடத்திற்கு செல்லும் வழக்கம் அல்லாமல், ஒரு பிரச்சினை நடக்கும் முன்பே அதனை தடுத்து நிறுத்த முனைவதாகும். எனவே எவர் எந்த நேரத்தில் புகார் கொடுத்தாலும், சிறிய பிரச்சினை என்றாலும் கூட அடுத்த சில நிமிடங்களில் வீதியை சுற்றி வலைத்து காவல் துறை நிரம்பிவிடும்.

அதேவேளை ஹொங்கொங் காவல்துறையின் முறைத்துக்கொண்டும் விறைத்துக்கொண்டும் அதிகாரம் பெற்ற சண்டியர்கள் போல் மக்களிடம் நடந்துக்கொள்ளமாட்டார்கள். எந்த ஒரு குற்றவாளியையும் மடக்கி பிடிக்க முற்படுபவரே தவிர தாக்கமாட்டார்கள். தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனும் முறைமை இருந்தாலும், எவர் மீதும் தாக்குதல் தொடுத்த நிகழ்வுகளை காண்பதற்கில்லை. அதேவேளை காவல்துறை தாக்கினால் அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யமுடியும் எனும் சட்டமும் ஹொங்கொங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹொங்கொங் வாழ் மக்கள் மத்தியில் காவல்துறை என்றால் அச்சம் எனும் நிலையல்லாமல் மதிக்கத்தக்க ஒரு துறையாகவே பார்க்கப்படுகிறது. இந்த மதிப்பு நிலை ஹொங்கொங்கில் ஹொங்கொங் சீனமக்களுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் வாழும் கனேடியர், அமெரிக்கர், ஐரோப்பியர் மத்தியிலேயே பெரிதும் காணப்படுகின்றது என்பதே தனிச்சிறப்பாகும்.

வரலாறு

ஹொங்கொங் காவல்துறை பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 1844 மே, முதலாம் திகதியே உருவாக்கம் பெற்றதாகும். 32 காவல்துறையினரை மட்டுமே கொண்டு ஹொங்கொங் காவல்துறை படைப்பிரிவு தோற்றம் பெற்றதாகும். ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபத் அம்மையாரின் (Elizabeth II) காலத்தில் 1967 கலவரத்தை அடக்கியதற்காக பிரித்தானியாவின் அரசப் பட்டையம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஹொங்கொங் காவல்துறையை "ஹொங்கொங் அரச காவல்துறை படை" எனும் பெயர் வழக்கில் ஏற்பட்டது. பிரித்தானியா ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிப்பு நிகழ்வான ஹொங்கொங் ஆட்சியுரிமை மாற்றத்தின் பின்னர் தொடர்ந்தும் ஹொங்கொங் காவல்துறை அப்பெயரை பயன்படுத்திவருகின்றது. [6]

காவல்துறையினரின் கடமைகள்

காவல்துறையினரின் ஊதியம்

காவல்துறையினரின் பணிநேரம்

காவல்துறை குறித்த மக்கள் பார்வை

எடுத்துக்காட்டாக சில சம்பவங்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hong Kong Police Force
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்கொங்_காவல்_துறை&oldid=701978" இலிருந்து மீள்விக்கப்பட்டது