உருபனியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Марфалёгія
சி தானியங்கிஇணைப்பு: ps:ګړپوهنه
வரிசை 67: வரிசை 67:
[[pl:Morfologia (językoznawstwo)]]
[[pl:Morfologia (językoznawstwo)]]
[[pnt:Μορφολογία]]
[[pnt:Μορφολογία]]
[[ps:ګړپوهنه]]
[[pt:Morfologia (linguística)]]
[[pt:Morfologia (linguística)]]
[[qu:Rimana yachay]]
[[qu:Rimana yachay]]

23:07, 12 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

உருபனியல் (morphology)் என்பது மொழியியலின் துணைத் துறைகளில் ஒன்று. இது சொற்களின் அமைப்புப் பற்றி ஆராயும் துறையாகும். சொற்றொடரியலின் மிகச் சிறிய அலகாகக் கருதப்படுகின்ற சொற்கள், வேறும் பல சொற்களுடன் ஒரு ஒழுங்கு முறையில் தொடர்புபட்டு இருப்பதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாக தொழில், தொழில்கள், தொழிலாளி என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. தமிழ் மொழி அறிந்தவர்கள் இவ்வாறான தொடர்புகளை அனுபவத்தின் வாயிலாக அறிந்து வைத்துள்ளார்கள். இந்த அநுபவத்தின் வாயிலான மொழியறிவின் மூலம் தொழில் என்பதற்கு தொழில்கள் எப்படியோ, போர் என்பதற்குப் போர்கள் என அவர்கள் அறிவார்கள். இதேபோலவே, தொழிலாளி என்ற சொல் உருவானது போல, போராளி என்ற சொல்லும் உருவாகும். இவ்வாறே அடிப்படையான சொற்கள் குறிப்பிட்ட ஒரு தொகுதி ஒழுங்கு விதிகளின் அடிப்படையின் பல்வேறு சொற்களாக உருவாகின்றன. இவ்வாறு ஒரு மொழியில், சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக உள்ள விதிகளை ஆராய்ந்து வெளிக்கொணர்வது உருபனியலின் முக்கிய நோக்கமாகும்.

வரலாறு

இந்தியாவில் மிகப் பழைய காலத்திலேயே உருபனியல் சார்ந்த பகுப்பாய்வுகள் நடைபெற்றுள்ளன. பாணினி எழுதிய சமஸ்கிருத மொழி இலக்கணமான அஷ்டாத்தியாயியும், தமிழ் மொழி இலக்கணமான தொல்காப்பியமும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பாணினி, சமஸ்கிருத சொல்லாக்கத்துக்கான 3959 விதிகளை விளக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதுபோலவே கிரேக்க - ரோமானிய மொழியியல் மரபிலும், உருபனியல் பகுப்பாய்வுகள் நடைபெற்றுள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபனியல்&oldid=692570" இலிருந்து மீள்விக்கப்பட்டது