இலங்கைச் சோனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "இசுலாமியர்கள்"; Quick-adding category "தமிழ் முசுலீம்கள்" (using HotCat)
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: zh:斯里兰卡摩尔人
வரிசை 12: வரிசை 12:
[[fr:Maures sri-lankais]]
[[fr:Maures sri-lankais]]
[[lt:Ceilono maurai]]
[[lt:Ceilono maurai]]
[[zh:斯里兰卡摩尔人]]

02:24, 3 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கைச் சோனகர் இன்றைக்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வணிக நோக்கில் அராபியாவிலிருந்து வந்த மக்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

இவர்கள் தங்களுடன் பெண்களை அழைத்து வராததால் இலங்கைப் பெண்களையே திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக இன்றுவரை திருமணமான பின்னர் ஆண்களே பெண்கள் வீடுகளில் சென்று வசிப்பதுடன், ஆண்களே பெண்களுக்கு சீதனமும் கொடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழையையே தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். அவர்கள் தமிழ்ப் பகுதிகளில் வாழ்ந்தாலும், சிங்களவர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் வீட்டுமொழி தமிழாகவே உள்ளது.

இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் கிழக்கு மாகாணமே முக்கியமானது. இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் மன்னார், புத்தளம், கொழும்பு, கண்டி, காலி, கம்பகா மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- கொழும்பு, காலி) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கைச்_சோனகர்&oldid=683509" இலிருந்து மீள்விக்கப்பட்டது