ஆத்திரேலியா (கண்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°S 141°E / 26°S 141°E / -26; 141
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: hu:Ausztrália (kontinens) மாற்றல்: ar:أستراليا (قارة), fi:Australia (maanosa)
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tr:Avustralya (kıta)
வரிசை 100: வரிசை 100:
[[sv:Australien (kontinent)]]
[[sv:Australien (kontinent)]]
[[th:ทวีปออสเตรเลีย]]
[[th:ทวีปออสเตรเลีย]]
[[tr:Avustralya (kıta)]]
[[uk:Австралія (континент)]]
[[uk:Австралія (континент)]]
[[vi:Châu Úc]]
[[vi:Châu Úc]]

20:40, 27 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

ஆஸ்திரேலியா கண்டம்

பரப்பளவு 8,560,000 கிமீ² (3,305,000 சதுர மைல்)
மக்கள்தொகை 29,400,000
அடர்த்தி
நாடுகள் ஆஸ்திரேலியப் பெருநிலம் மற்றும் சில அயல் தீவுகள்
Demonym ஆஸ்திரேலியன்
மொழிக் குடும்பம் ஆங்கிலம்
பெரும் நகரங்கள் சிட்னி, மெல்பேர்ண், பிறிஸ்பேன், பேர்த்
நேர வலயங்கள் GMT+10, GMT+9.30, GMT+8

புவியியல் ரீதியாக ஆஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டம் ஆகும். இது பொதுவாக ஆஸ்திரேலியப் பெருநிலத்தையே குறிக்கிறது. இதன் அயலில் உள்ள தீவுகளான டாஸ்மானியா, நியூ கினி போன்றவை இக்கண்டத்தினுள் அடங்காது. ஆனால் நிலவியல் ரீதியாக, கண்டம் என்பது பெருநிலப்பரப்போடு சேர்ந்த தீவுகளையும் உள்ளடக்கும் என்பதால், டாஸ்மானியா, நியூ கினி போன்றவையும் ஆரு தீவுகள் போன்ற அயலில் உள்ள தீவுகளையும் இக்கண்டத்தினுள் அடக்கலாம். இத்தீவுகள் கண்டத் திட்டுகளின் மேல் பரவியுள்ள கடல்களினால் பிரிக்கப்பட்டவை. ஆஸ்திரேலியா, நியூ கினி ஆகியவை அரபூரா கடல், மற்றும் டொரெஸ் நீரிணையாலும், தாஸ்மானியா பாஸ் நீரிணையாலும் பிரிக்கப்பட்டுள்ளன.

கிமு 18,000 ஆண்டுகளளவில், கடல் மட்டம் குறைந்திருந்த வேளையில், நிலத்திட்டுகள் அனைத்தும் ஒரே நிலமாக இருந்தது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, கடல் மட்டம் உயர்வின் காரணமாக தாழ்நிலப்பரப்புகள் கடலினுள் அமிழ்ந்து இன்றைய பெருநிலப்பரப்பையும், நியூ கினி மற்றும் டாஸ்மானியா என்ற இரண்டு மலைத்திட்டுக்கள் அடங்கிய தீவுகளையும் பிரித்தன.

நியூசிலாந்து நாடு ஒரே கண்டத் திட்டில் இல்லாததால், இது ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. மாற்றாக, இது மூழ்கிய கண்டமான சிலாந்தியாவினுள் அடங்கும். சிலாந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து ஓசியானியா அல்லது ஆஸ்திரலேசியாவின் பகுதிகளாகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திரேலியா_(கண்டம்)&oldid=677812" இலிருந்து மீள்விக்கப்பட்டது