எவரிஸ்ட் கால்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hy:Գալուա Էվարիստ
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eu:Évariste Galois
வரிசை 89: வரிசை 89:
[[eo:Évariste Galois]]
[[eo:Évariste Galois]]
[[es:Évariste Galois]]
[[es:Évariste Galois]]
[[eu:Évariste Galois]]
[[fa:اواریست گالوا]]
[[fa:اواریست گالوا]]
[[fi:Évariste Galois]]
[[fi:Évariste Galois]]

18:27, 27 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

எவரிஸ்ட் கால்வா
Évariste Galois
15வது அகவையில் கால்வா
பிறப்பு(1811-10-25)அக்டோபர் 25, 1811
பிரான்ஸ்
இறப்புமே 31, 1832(1832-05-31) (அகவை 20)
பாரிஸ், பிரான்ஸ்
தேசியம்பிரான்சு பிரெஞ்சு
துறைகணிதவியல்
அறியப்படுவதுகால்வா கோட்பாடு

எவரிஸ்ட் கால்வா (Evariste Galois, அக்டோபர் 25, 1811 - மே 31, 1832) பிரான்ஸ் நாட்டு கணிதவியலர், தன்னுடைய 19வது வயதிலேயே கணிதத்தில் ஒரு மாபெரும் சாதனையைச் செய்தவர். பல்லுறுப்புச் சமன்பாட்டை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்து இருபதாவது நூற்றாண்டின் சில பெரும் கணிதத் துறைகளுக்கு 19 வது நூற்றாண்டின் முதல் பாதியிலேயே அடிகோலியவர். ஆனால் பரிதாபமாக அரசியல் சூறாவளியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, 21 வயது முடியும் முன்னமே உயிர் துறந்தார். அவர் விட்டுவிட்டுப்போன 60-பக்க கணித சொத்து விலைமதிப்பற்றது.

கணிதமே உலகம்

கால்வா 12 வயது வரையில் தன்னுடைய அன்னையிடமே இலக்கியங்களில் பழமைச் சிறப்பு பெற்ற நூல்களைப் படித்து வந்தார். 1823 இல் 12வது வயதில் பாரிஸ் நகரத்தில் லூயி லே கிராண்ட் என்ற பள்ளியில் சேர்ந்தார். பிரான்ஸ் நாட்டு மக்கள் அப்பொழுதும் புரட்சி நாட்களை மறக்கவில்லை. கால்வா தான் காதால் கேள்விப்பட்ட அடாவடிச் செயல்களை யெல்லாம் நேரில் பார்க்க ஆரம்பித்தார். படிப்பிலோ ஓரிரண்டு ஆண்டுகளில் கால்வா வினுடைய ருசியெல்லாம் கணிதத்தில் திரும்பியது. ஆனால் பள்ளியிலோ கணிதத்திற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் லெஜாண்டரின் வடிவியல் இச்சிறுவன் வழியில் வந்தபோது அதை அனாயாசமாகப் படித்து முடித்தான். அவனுக்கு பள்ளியில் கிடைத்த இயற்கணித புத்தகத்தில்லோ அவனுடைய கூர்மையான மூளைக்கு சவாலாக ஒன்றுமே இல்லை. லெஜாண்டரைக் கரைத்துக் குடித்தவன், லக்ராஞ்ஜையும் ஏபெல்லையும் படிக்க ஆரம்பித்தான். 14, 15 வயதே ஆன இச்சிறு பையன் கணிதவல்லுனர்களுக்காக இன்னும் பெரிய வல்லுனர்கள் எழுதியதை விழுங்கி சீரணித்துக்கொண்டிருந்தான். சமன்பாடுகளின் விடுவிப்புக் கணிப்புகள், Theory of analytic functions, Calculus of functions இவையெல்லாம் அவனை வெகுவாக ஈர்த்தன. மனதிலேயே அவன் பெரிய பெரிய கணிப்புகளைப் போடக்கூடியவன். ஆசிரியர்கள் தேர்வுகளில் கணிப்புக்காகக் கேட்கும் வழிகளெல்லாம் அவனுக்கு அனாவசியமாகப் பட்டது.கோபப்பட்டான். ஆனாலும் கணிதத்தில் என்னென்ன பரிசுகள் உண்டோ அத்தனையும் அவனுக்குத்தான். கணிதத்தில் அவனுக்கிருந்த அபார சக்தியை நம்பினவர்களும் இருந்தனர்; அதை நம்பாமல் அதெல்லாம் ஒரு நடிப்பு என்றவர்களும் இருந்தனர்.

முதல் ஆய்வுக்கட்டுரை

17 வது வயதில் ரிச்சர்ட என்ற கணித ஆசிரியர் அவனுடைய கணிதத்திறமையை நன்கு உணர்ந்து ஊக்கப்படுத்தி அவனை வகுப்பிலும் பள்ளியிலும் உயர்த்திப்பேசினார். அவருடைய ஊக்குவிப்பினால் மற்றவர்கள் அவனை வெறும் கெட்டிக்காரனாக மட்டும் பார்க்காமல், பெரிய கணித மேதையாகவும் பார்க்கத்தொடங்கினர். 1829, மார்ச் 1 ம் தேதி அவனுடைய முதல் ஆய்வுக்கட்டுரை (தொடரும் பின்னங்களைப் பற்றியது) பிரசுரிக்கப்பட்டது. ஆனால் பள்ளியில் கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டுதான் இருந்தன. அவை ஒன்றும் தான் ஒரு கணிதவியலர் ஆகிவிடவேண்டும் என்ற அவனுடைய கொள்ளை ஆசையை அணைக்கமுடியவில்லை. உண்மையில் அவன் ஏற்கனவே ஒரு கணிதவியலர் ஆகிவிட்டிருந்தான்; மற்றவர்களுக்குத்தான் அது புரியவில்லை.

தோல்விமேல் தோல்வி

16வது வயதில் எகோல் பாலிடெக்னிக் என்ற சிறந்த ஆய்வுக்கூடக்கல்லூரியில் சேர்வதற்காக தேர்வுகளில் உட்கார்ந்தான். இக்கல்லூரிதான் பிரெஞ்சுப் புரட்சிகாலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிற்காலத்தில் அத்தனை பிரென்சு நாட்டு கணித அறிவியலர்களையெல்லாம் உற்பத்தி செய்து உலகத்துக்கு அளித்தது. ஆனால் கால்வா அத்தேர்வில் தோல்வியடைந்தான். 18வது வயதில் அதே தேர்வுக்கு மறுபடியும் உட்கார்ந்தான். அவனுடைய கால் தூசிக்குச் சமமில்லாத கணித ஆசிரியர்களெல்லாம் அவனுடைய தேர்வுத் தாள்களை மதிப்பிட்டு அவனை மறுபடியும் தோல்வியடையச் செய்தனர். அந்தத் தேர்வில்தான் அவனுடைய விதி நிர்மாணிக்கப்பட்டது. எல்லாவற்றையும் மனதிலேயே கணிக்கக்கூடிய அவனுக்கு, தன்னை நேர்முகத்தேர்வு நடத்திய ஆசிரியர்களின் கணித இயலாமையையும் அவர்களுடைய பிடிவாதத்தையும் நேருக்குநேர் பார்த்தபோது, கையில் தனக்குப் பயன்படாதிருந்த சாக்கட்டியையே அவர்மேல் தூக்கியெறிந்து கொஞ்சநஞ்சம் இருந்த வாய்ப்பையும் இழந்தான்.

இச்சமயம் தான் அவனுடைய தந்தையார் இறந்தார். 1827 இல் அவர் ஒரு மேயராக இருந்தார். அரசியல் காரணமாக அவரை ஒரு அவதூறில் சிக்கவைத்து கடைசியில் அவர் தற்கொலை செய்துகொள்ளும்படியான சூழ்நிலையை உண்டாக்கிவிட்டனர். இதெல்லாம் சேர்ந்து கால்வாவை உலகத்தின்மேலேயே வெறுப்பேற்படும்படிச் செய்துவிட்டது.

பிரெஞ்சு அகாடெமி

கோஷி என்பவர்தான் அக்காலத்தின் மிகப்பெரிய கணித வல்லுனர். பிரெஞ்சு அகாடெமிக்காக அவர் கால்வாவினுடைய ஆய்வுகளை தரம் பார்த்து மதிப்பிடவேண்டியவர். இதற்காக கால்வா தான் அதுவரை கண்டுபிடித்ததையெல்லாம் திரட்டி அகாடெமிக்கு அனுப்பியிருந்தான். அவனுடைய துரதிர்ஷ்டம் அவர் அவனுடைய ஆய்வுக்கட்டுரைகளைத் தொலைத்துவிட்டாரா அல்லது அவர் அவைகளைப் படித்துத் தரம் பார்த்து பிரசுரிக்காமல் விட்டாரா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன..

1829 ஆண்டு டிசம்பர் 29, அவனை பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அவன் தனிமையிலேயே உழைக்கவேண்டியிருந்தது. மூன்று ஆய்வுக்கட்டுரைகள் எழுதி பிரென்சு அகடெமிக்கு அனுப்பினான். இயற்கணிதச்சமன்பாடுகளைப்பற்றிய மிக உயர்ந்த ஆய்வுகள் அவை. இதை அவன் அனுப்பியிருந்தது 'கணிதத்தில் சிறந்த பரிசு' ஒன்றுக்காக.அகடெமியின் காரியதரிசி ஃபொரியர் அக்கட்டுரைகளை தன் வீட்டுக்கு எடுத்துச்சென்றார். ஆனால் கட்டுரைகளைப்பார்ப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். உரிய காலத்தில் அவருடைய காகிதங்களைத் தேடித் துழாவினார்கள். கால்வாவினுடைய கட்டுரைகள் கிடைக்கவில்லை!

கால்வா வழ்க்கையையே வெறுத்து, அரசியலில் முழுமூச்சுடன் இறங்கினான்.பல்கலை வாழ்க்கை அத்துடன் முடிந்தது.

கணிதத்தின் சிகரத்தை அண்டுவார் இல்லை

உயர்தர இயற்கணிதத்தில் சொந்தத்தில் ஒரு வகுப்பு நடத்தினான். 19 வயது இளைஞன், அக்காலத்துக் கணிதக் கண்டுபிடிப்புகளில் முதல்வன், கற்பனை எண்களைப்பற்றிய ஒரு புதுக்கோட்பாட்டையும், சமன்பாட்டுகளை விடுவிக்க புதுப்புது வழிகள்,எண்கள் கோட்பாடு, elliptic functions , இவைகளைப் பற்றி தான் சொந்தமாகக் கண்டுபிடித்ததையெல்லாம் சொல்லிக்கொடுக்க வகுப்பு நடத்துகிறான், அழைப்பு விடுகிறான் ஆனால் வருவார் யாருமில்லை.

கால்வா கோட்பாடு

ஒரு கடைசி முயற்சியாக அகெடெமிக்கு ஒரு பெரிய ஆய்வுநூலை -- சமன்பாடுகளை விடுவிப்பதைப் பற்றியது, தற்காலத்தில் கால்வா கோட்பாடு என்று பிரசித்திபெற்றது -- அனுப்பிவைத்தான். அதைப்படித்து தரம் பார்க்கும் பொறுப்பு புவாசான் (Poisson) என்ற கணிதவியலரிடம் சென்றது. அவர் அதை எவ்வளவு ஆழ்ந்து படித்தாரோ தெரியாது. அவருடைய விமரிசனத்தில் 'இது ஒன்றும் புரிகிறமாதிரி இல்லை' என்று எழுதிவிட்டார்.

அரசியல் ஏற்றத்தாழ்வுகள்

மே 9, 1831 ஒரு முறையும், ஜூலை 14, 1831 இல் மற்றொரு முறையும் கைது செய்யப்பட்டான். 1789, 1793 புரட்சிகளின் ஞாபகார்த்தமாக நடந்த ஒரு விழாவில் அவன் கையில் கத்தியுடன் அரசரைக் கொல்வதாக சப்தம் எடுத்துக்கொண்டதாக முதன் முறை கைது செய்யப்பட்டு பின்னால் விடுவிக்கப்பட்டான். இரண்டாவது முறை காரணமே இல்லமல் அவனைக் கைது செய்து இரண்டு மாதம் சிறையில் வைத்திருந்து விட்டனர். ஆனால் மே 29, 1832 அன்று இரவு எல்லா குடியரசுவாதிகளுக்கும் எழுதிய கடிதத்தில் தான் யாரோ இரண்டு நபருடன் கத்திப்போர் புரியவேண்டியிருக்கிறதென்றும் எல்லோரிடமும் விடைபெறுவதுபோல் எழுதியிருக்கிறான். ==

கணித உயில்

அன்றிரவுதான், மணிக்கணக்கில் உட்கார்ந்து தான் கண்டுபிடித்த அத்தனை கணிதக்கண்டுபிடிப்புகளையும் ஒரு 60-பக்கக்கட்டுரையாக எழுதி கணித உலகத்துக்கு தன் உயிலையே எழுதி வைத்தான். 14 ஆண்டுகளுக்குப்பிறகு, லியொவில் journal de mathematique pure et appliques என்ற ஆய்வுப்பத்திரிகையில்,இதை பிரசுரிக்கும்போது எழுதுகிறார்:"இதை ஏற்கனவே அகெடெமியில் பிரசுரிக்காமல் விட்டதற்குக்காரணம் ஒருவேளை கால்வாவினுடைய சுறுக்க நடையினால் ஏற்பட்ட குழப்பமாகத்தன் இருக்கவேண்டும்". கால்வாவினுடைய முக்கிய தேற்றங்களில் ஒன்று:

"இயற்கணிதப்பல்லுறுப்புச்சமன்பாடு ஒன்றினுடைய கால்வா குலம்(Galois Group) என்று சொல்லக்கூடியது தீர்வுடைகுலமாக (Solvable Group)இருந்தால், இருந்தால்தான்,அதற்கு தனிமன்களால் (radicals) தீர்வு கிடைக்கும்."

துணை நூல்கள்

•E.T. Bell. Men of Mathematics. 1937, 1965. Simon & Schuster, New York. ISBN 0-671-46401-9

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=எவரிஸ்ட்_கால்வா&oldid=677760" இலிருந்து மீள்விக்கப்பட்டது