இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35: வரிசை 35:
==வாக்குக் கணிப்பு==
==வாக்குக் கணிப்பு==
வாக்குக் கணிப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
வாக்குக் கணிப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

1. கட்சிகள் அல்லது குழுக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளைக் கணித்து ஆசனங்களை ஒதுக்குதல்
1. கட்சிகள் அல்லது குழுக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளைக் கணித்து ஆசனங்களை ஒதுக்குதல்

2. விருப்பத் தெரிவுகளைக் கணித்து அபேட்சகர்களைத் தீர்மானத்தல்.
2. விருப்பத் தெரிவுகளைக் கணித்து அபேட்சகர்களைத் தீர்மானத்தல்.

05:56, 23 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடாகும். எனவே இலங்கையின் உள்ளூராட்சி முறைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அமைப்புக்களாகவே நோக்குதல் வேண்டும். ஏனெனில், மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும், கடமைகளையும் செய்யும் நிறுவனங்களாகவே இவை விளங்குகின்றன.

இவ்வடிப்படையில் இலங்கையில்

  • மாகாணசபைகள்
  • மாநகரசபைகள்
  • நகரசபைகள்
  • பிரதேச சபைகள்
  • கிராம அபிவிருத்தி சபைகள் என்பன அமைந்துள்ளன.

கிராம அபிவிருத்தி சபைகள்

இலங்கையின் காணப்படும் இவ் உள்ளூராட்சி அமைப்புக்களில் கிராம அபிவிருத்தி சபைகளுக்கான அங்கத்தவர் தெரிவு மாத்திரம் பொது மக்களின் வாக்கெடுப்பின் மூலமாக நடத்தப்படுவதில்லை. குறித்த கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரால் நடத்தப்படும் கூட்டத்தில் இதன் அங்கத்தவர்கள் ஓராண்டுக்கொரு முறை தெரிவுசெய்யப்படுவர்

ஏனைய அமைப்புகளுக்கான தேர்தல்கள்

இலங்கையின் மாகாணசபைகளுக்கும் இதர உள்ளூராட்சி அமைப்புக்களான மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை என்பவற்றிற்கான அங்கத்தவர் தெரிவானது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இத்தெரிவான விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் பட்டியல் முறைக்கமைய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இங்கு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கிணங்க ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கைக்கு இணங்க அதிக விருப்புத் தெரிவு வாக்குகளைப் பெற்ற அபேட்சகர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படுவர்.

பட்டியல் அங்கத்தவர் எண்ணிக்கை

1991ம் ஆண்டு மே 11ம் திகதி இலங்கையில் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலானது 1990ம் ஆண்டு 25ம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கிணங்க நடத்தப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலின்போது நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டியது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினூடாக அல்லது சுயேட்சைக் குழுவின் மூலமாகும்.

நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் குழுவின் அல்லது குழுக்கள் முன்வைக்கும் பட்டியிலின் எண்ணிக்கையானது தேர்தல் சட்டத்திற்கிணங்க அமைந்திருத்தல் வேண்டும். அதாவது குறித்த உள்ளூராட்சி சபைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையை விட 1/3 மடங்கு அங்கத்தவர்களை மேலதிகமாகக் கொண்டதாக பட்டியல் அமைதல் வேண்டும். அதேநேரம் இத்தொகை 6 க்கு அதிகமாகாமல் அமைதல் அவசியமாகும்.

  • உதாரணம்
1) 12 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் 12 + (12இன் 1/3) 4 = 16
2) 24 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் 24+06 = 30

மேற்படி உதாரணம் 1ல் 1/3 வீதமான மேலதிகமான அங்கத்தவர்களும், உதாரணம் 2ல் மேலதிகமான 6 அங்கத்தவர்களும் கொண்டதாகப் பட்டியல் அமைக்கப்படுவதை அவதானித்தல் வேண்டும்.

மேலும் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படுகையில் 40% க்குக் குறையாத இளைஞர்கள் வேட்பாளர்களாக உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பதும் முக்கியமான விடயமாகும். தாக்கல் செய்யப்பட்ட பட்டியல் தேர்தல் ஆணையாளரால் பரிசீலிக்கப்பட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள அபேட்சகர்களுக்கு சிங்கள அகரவரிசைக்கிணங்க இலக்கங்கள் வழங்கப்படும்.

விருப்பத் தெரிவு வாக்குகள்

விருப்பத்தெரிவினை வழங்கும்போது ஒரே அபேட்சகர்களுக்கு 3 விருப்பத் தெரிவு வாக்குகளையும் அல்லது அபேட்சகர்களுக்குப் பிரித்துத் தமது விருப்பத் தெரிவுகளையும் வழங்க முடியும். (விருப்பத் தெரிவு கட்டாயமானதல்ல)

வாக்குக் கணிப்பு

வாக்குக் கணிப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

1. கட்சிகள் அல்லது குழுக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளைக் கணித்து ஆசனங்களை ஒதுக்குதல்

2. விருப்பத் தெரிவுகளைக் கணித்து அபேட்சகர்களைத் தீர்மானத்தல்.