புரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: be, be-x-old, kn, my, pnb, so
சி தானியங்கிஇணைப்பு: si:ප්‍රෝටීන්
வரிசை 96: வரிசை 96:
[[scn:Prutiìna]]
[[scn:Prutiìna]]
[[sh:Protein]]
[[sh:Protein]]
[[si:ප්‍රෝටීන්]]
[[simple:Protein]]
[[simple:Protein]]
[[sk:Bielkovina]]
[[sk:Bielkovina]]

04:31, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

மயோகுளோபினின் முப்பரிமாண அமைப்பின் வரைபடம். நிறமூட்டப்பட்டுள்ளவை ஆல்ஃபா திருகுசுழல்களாகும்.

புரதம் (Protein) என்பது அதிக மூலக்கூறு எடையுள்ள, அமினோ அமிலங்கள் எனப்படும் மிகச் சிறிய புரதக்கூறுகளால் இணைக்கப்பட்ட சிக்கலான கரிமச் சேர்மமாகும். அனைத்து உயிரணுக்கள் மற்றும் தீ நுண்மங்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுக்கு புரதம் இன்றியமையாததாகும். பல புரதங்கள் நொதிகளாகவோ நொதிகளின் துணையலகுகளாகவோ விளங்குகின்றன. பிற புரதங்கள் அமைப்பு மற்றும் இயக்க ரீதியான பணிகளை செய்கின்றன. எடுத்துகாட்டாக, கலசட்டகத்தை உருவாக்கும் மூட்டுகள் புரதங்களால் ஆனவை. அக்ரின், மயோசின் எனப்படும் தசைகளில் காணப்படும் புரதங்கள் தசை அசைவில் பங்கு கொள்கின்றன. நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும் பிறபொருளெதிரிகள், ஈந்தணைவிகளின் சேமிப்பு மற்றும் உயிரணுக்களுக்கிடையிலான சமிக்ஞைகளைக் கடத்தல் போன்றவை புரதங்களின் இதர பணிகளாகும்.

சில அமினோ அமிலங்கள் உயிரனங்களால் உற்பத்தி செய்யவியலாத அமினோ அமிலங்களாகும். அவை உணவு மூலமாக மட்டுமே உள்ளெடுக்கப்பட வேண்டியிருப்பதால், அவை ‘அத்தியாவசிய அமினோ அமிலங்கள்' (essential amino acids) என அழைக்கப்படுகின்றன. உட்கொள்ளப்படும் புரதங்களில் இவை காணப்படும்போது, உணவு செரிமானத்தின் போது புரதங்கள் உடைக்கப்பட்டு, இவ்வகை அமினோ அமிலங்கள் உயிரினங்களால் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். இறைச்சி வகைகள், மீன், முட்டை, பால் மற்றும் தானிய வகைகளில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இப்புரதச்சத்து உடலில் புதிய திசுக்களைக் கட்டமைப்பதற்கும், அழிந்த திசுக்களுக்கு ஈடாக புதிய திசுக்களை உருவாக்கவும் பயன்படுகிறது. உயிரினங்களில் காணப்படும் நொதிகள் (enzymes), வளர் ஊக்கிகள் (hormones), ‘ஈமோகுளோபின்’ எனும் இரத்தப் புரதம் (Hemoglobulin) போன்ற உடற் தொழிற்பாடுகளுக்கு அவசியமான கரிமச் சேர்மங்கள் யாவும் புரதங்களாலானவையாகும். நகம், முடி வளர்வதற்கும் புரதச்சத்து மிகவும் தேவை.


வெளி இணைப்புகள்

குறிப்பு: இவ்விணைய இணைப்புகள் யாவும் ஆங்கிலத்தில் உள்ளவை

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரதம்&oldid=672607" இலிருந்து மீள்விக்கப்பட்டது