யூலியசு சீசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sco:Julius Caesar
சி தானியங்கிஇணைப்பு: si:ජුලියස් සීසර්
வரிசை 132: வரிசை 132:
[[sco:Julius Caesar]]
[[sco:Julius Caesar]]
[[sh:Gaj Julije Cezar]]
[[sh:Gaj Julije Cezar]]
[[si:ජුලියස් සීසර්]]
[[simple:Julius Caesar]]
[[simple:Julius Caesar]]
[[sk:Gaius Iulius Caesar]]
[[sk:Gaius Iulius Caesar]]

03:41, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

யூலியசு சீசர் (ஜூலை 12 அல்லது ஜூலை 13, கி. மு. 100 - மார்ச் 15, கி. மு. 44) ரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராவார். ரோம் நாட்டை ரோமானியப் பேரரசாக மாற்றியமைத்ததில் மிக முக்கிய பங்காற்றியவராவார்.

யூலியசு சீசர் சாதாரண குடும்பத்தில் ஔரெலியாவின் மகனாக கி.மு.100 வது ஆண்டில் பிறந்தார். ஸுபுரா யென்ற உரோம நகரப்பகுதியில் ஒரு சாதாரண வீட்டில் வளர்ந்தார். சீசரின் தந்தையை விட அவர் தாயின் கவனிப்பில் தான் வளர்ந்தார். சீசரின் கல்வி அவரின் ஏழாம் வயதில் இலத்தீன், கிரேக்க மொழிப் பாடங்களுடன் துவங்கியது. கிரேக்க, இலத்தீன் இலக்கணம், கணித இயல், எழுத்துத்திறன் முதலியவற்றை சீசரும், அவன்ரின் தங்கைகளும் வீட்டிலேயே கற்று அறிந்தனர். பன்னிரண்டு வயதில் இலக்கியம், கவிதைகள் இவற்றையும் சீசர் கற்றிருப்பார். சீசரின் ஆசிரியர் பெயர் "மார்க்குஸ் அந்தோனியுஸ் க்னிஃபொ". அவர் எகிப்திய நாட்டிலுள்ள அலெக்சான்ரிய நகரத்தில் கிரேக்கம், இலத்தீன் மொழிகளை நன்கு கற்றுணர்ந்தார்.

யூலியஸ் சீசர் கான்சல் கொர்னெலியுஸ் மகள் கொர்னெலியாவை கி.மு. 84 ஆம் ஆண்டில் கல்யாணம் செய்துக் கொண்டார். கொர்னெலியாவும், சீசரும் அன்புடன் இல்வாழ்க்கை நடத்தி வந்தனர். கான்சல் கொர்னெலியுஸ், சுல்லா என்ற பெயருடைய கயவனால், பதவியில் இருந்துத் துரத்தப்பட்டார். சுல்லா தனக்குப் பிடிக்காதவர்கள், செல்வாக்கு உள்ள குடும்பத்தில் திருமணம் செய்திருந்தால் அவர்கள் தன் மனைவியரை விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று கட்டளையிட்டார். யூலியஸ் சீசர் தவிர மற்ற அனைவரும் அவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். சீசர் தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று உணர்ந்து தலை மறைவானார்.

கடைசியில், சுல்லா சீசரின் தைரியத்தை மெச்சி, சீசரும்,கொர்னெலியாவும் சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டார். சீசர் தன் பத்தொன்பதாம் வயதில், படைவீரனாகச் சேர்ந்தார். தெர்முஸ் என்ற உரோமப்படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார். அம்முற்றுகை வெற்றி அடைய, அவருக்கு ஒரு கப்பல் படை தேவைப்பட்டது. சீசரின் முயற்ச்சியால், கப்பல் படையுடன் தெர்முஸ் மிதிலின் நகரை வென்றார். சீசர் “Corona Civica” என்ற வெற்றி முடியை அணியும் உரிமையைப் பெற்றார். கி.மு.78 ஆம் ஆண்டில், சுல்லா உரோமை நகரில் காலமானார். உடனே சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.


சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்ததும் தன் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார். கி.மு. 69ஆம் ஆண்டில் சீசரின் மனைவி கொர்னெலியா காலமானார். கி.மு. 67ஆம் ஆண்டில் சுல்லாவின் பேத்தி பொம்பெயாவை மணந்து கொண்டார். அதே ஆண்டில், மிகவும் முக்கியமான ஆப்பியன் வழியை (Appian Way) சீர்திருத்தும் பொறுப்பை ஏற்றார். இந்தப்பணியில் அவர் கற்றது கல்லியா நாட்டில் வெற்றி அடையத் துணை செய்தது. உரோமப் பேரரசின் படைவலம் ஓங்க, ஆப்பியன் வழிப் பேருதவி செய்தது. ஆப்பியன் வழியும், மற்றும் உரோமையர் கட்டிய பாலங்களும், இன்றும் நிலைத்திருக்கின்றன.


ஏறக்குறைய அதே சமயத்தில், பொம்பெய் (Pompeius Magnus) என்ற படைத்தலைவர் கடற்கொள்ளையரை அடக்கி மத்தியத்தரைக் கடலில் உரோமை அரசின் செல்வாக்கை நிலை நாட்டினார். மேலும், ஆசியா மைனர், சிரியா நாட்டையும் உரோமையின் அதிகாரத்துக்கு அடியில் கொண்டு வந்தார். பொம்பெயின் செல்வாக்கும், போர்த்திறமையும் வளர்ந்தது. சீசர் தன் அரசியல் செல்வாக்குக்கு, பொம்பெய் ஒரு சவாலாக வருவார் என்பதைச் சீக்கிரம் கண்டுணர்ந்தார்.












வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூலியசு_சீசர்&oldid=672571" இலிருந்து மீள்விக்கப்பட்டது