இலங்கை பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இலங்கைப் பிரதமர் பட்டியல்: பட்டியல் பிரிக்கப்பட்டது
வரிசை 11: வரிசை 11:
*[[இலங்கைப் பிரதமர்களின் பட்டியல்]]
*[[இலங்கைப் பிரதமர்களின் பட்டியல்]]


== இவற்றையும் பார்க்கவும் ==
* [[இலங்கை சனாதிபதி]]
* [[இலங்கை சனாதிபதி]]



09:16, 21 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கை பிரதமர் இலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.

இலங்கையின் பிரதம மந்திரிப் பதவி 1948 ஆம் ஆண்டில் இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்த போது உருவாக்கப்பட்டது. பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பைப் போன்ற அரசியலமைப்பு இலங்கையிலும் நடைமுறையில் இருந்தது. அதனால் இலங்கையிலும் பிரத மந்திரியே நாட்டின் அதியுயர் தலைமைப் பதவியைக் கொண்டிருந்தார். இலங்கை 1972 இல் குடியரசான போதும் பிரதம மந்திரியே நாட்டின் தலைவராக இருந்தார். ஆனால் இவ்வமைப்பு 1978இல் மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி பதவி அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதன்படி சனாதிபதி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருக்க வழிகோலப்பட்டது. அத்துடன் ஒருவர் இரு தடவைகள் மட்டுமே சனாதிபதி பதவியில் இருக்கலாம். பிரதமர் மந்திரி சனாதிபதியால் நியமிக்கப்பட்டார். பிரதமர் அமைச்சரவைக்குத் தலைவராக இருந்தார். சனாதிபதி இறக்கும் போது பிரதமர் தற்காலிக சனாதிபதியாவார். பாராளுமன்றம் புதிய சனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வரையில் அல்லது புதிய சனாதிபதி தேர்தல் நடக்கும் வரையில் தற்காலிக சனாதிபாதி பதவியில் இருக்கலாம்.

இலங்கையின் தற்போதய பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நவம்பர் 21, 200 இல் தெரிவு செய்யப்பட்டார்.

வரலாறும் அதிகாரங்களும்

மேலும் காண்க

உசாத்துணை

  • இலங்கைப் பாராளுமன்றம் - பாராளுமன்றக் கையேடு, பிரதமர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_பிரதமர்&oldid=671977" இலிருந்து மீள்விக்கப்பட்டது