இலங்கை பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21: வரிசை 21:

1994 ஆகஸ்ட் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கமைத்த சந்தர்ப்பத்தில் சந்திரிக்கா குமாரதுங்க பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். 1994 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சந்திரிக்கா அரசாங்க காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியாக விஜேதுங்க இருந்த போதிலும் கூட விஜேதுங்கவின் ஒத்துசெல் போக்குநிலை காரணமாகப் பிரச்சினைகள் எழவில்லை.

==ஆதாரம்==
* 1978 இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு

08:29, 21 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கையில் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பிலும், 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பிலும் பிரதம மந்திரி அதிகாரமிக்கதோர் பதவியாக காணப்பட்டிருந்தது. இருப்பினும் 1978ம் ஆண்டில் இலங்கையில் நிறைவேற்றதிகாரமிக்க சனாதிபதிப் பதவி அறிமுகமானதையடுத்து இலங்கை பிரதமர் பதவி அதிகாரமற்ற ஒரு அலங்கார நிலையையே அடைந்திருந்தமை அவதானிக்கத்தக்கதாகும். இந்த அடிப்படையில் 1978ம் ஆண்டு இரண்டாம் குடியரசில் பிரதமரின் நிலை தொடர்பாக பின்வருமாறு சுருக்கமாக அவதானிக்கலாம்.

நியமனம்

  • அரசியலமைப்பின் படி இலங்கை சனாதிபதியே பிரதமரைத் நியமனம் செய்வார்.
  • அரசியலமைப்பின் 43(3) உறுப்புரைப்படி பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் ஆதரவு உள்ளவரை சனாதிபதி பிரதமராகத் தெரிவு செய்வார். (இதன்படி ஆளும்கட்சியின் சிரேஸ்ட அங்கத்தவரொருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கருதலாம்.)

அதிகாரங்களும், கடமைகளும் குறைக்கப்பட்டுள்ள நிலை

1978க்கு முன்னர் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அரசியலமைப்புடன் ஒப்புநோக்கும் போது 1978ம் ஆண்டு அரசியலமைப்பின்படி பிரதமரின் அதிகாரங்களும், கடமைகளும் குறைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இங்கு சனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும், கடமைகளையும் நிறைவேற்ற பிரதமரின் ஆலோசனை அவசியமில்லை. பிரதமரின் ஆலோசனை தேவை எனக் கருதினால் மட்டுமே சனாதிபதி பிரதமரின் ஆலோசனையைப் பெறலாம். எவ்வாறாயினும் பிரதமரின் ஆலோசனைப்படி சனாதிபதி நடக்க வேண்டும் என்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை.

அதிகாரங்களை வகைப்படுதல்

பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசியலமைப்பின்படி அவரின் அதிகாரங்களை வகைப்படுத்துவதும் கடினம்.

பதில் கடமை

அரசியலமைப்பின்படி ஜனாதிபதி சுகவீனமுற்றால், நாட்டிலிருந்து வெளியே சென்றால், அல்லது வேறு காரணங்களுக்காக ஜனாதிபதி கடமையாற்ற முடியாது என்றிருந்தால் ஜனாதிபதிக்கு பதில் கடமையாற்ற பிரதமர் நியமிக்கப்படலாம்.

பிரதமர் அமைச்சரவையின் தலைவரல்ல.

பிரதமர் அமைச்சரவையின் தலைவரல்ல. அதேநேரம், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என்பதில்லை. 2ம் குடியரசு அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பின் இன்றுவரை சனாதிபதி பிரதமருக்கு மந்திரிசபைப் பொறுப்புக்களை வழங்கியமைனால் அவர் அமைச்சரவைக்குச் செல்கிறார். (பிரதமருக்கு அமைச்சரவைப் பொறுப்புக்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை.)

முரண்பாடுகள்

சனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக கூடியசந்தர்பங்களில் இருந்ததினால் அதிகாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் எழவில்லை. இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக அமையுமிடத்து பிரதமரது கடமைகள், அதிகாரங்கள் தொடர்பான புதிய முரண்பாடுகள் தோன்ற இடமுண்டு.

1994 ஆகஸ்ட் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கமைத்த சந்தர்ப்பத்தில் சந்திரிக்கா குமாரதுங்க பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். 1994 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சந்திரிக்கா அரசாங்க காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியாக விஜேதுங்க இருந்த போதிலும் கூட விஜேதுங்கவின் ஒத்துசெல் போக்குநிலை காரணமாகப் பிரச்சினைகள் எழவில்லை.

ஆதாரம்

  • 1978 இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_பிரதமர்&oldid=671941" இலிருந்து மீள்விக்கப்பட்டது