சுதேசி இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவுப் பணி
சி Quick-adding category "இந்திய விடுதலைப் போராட்டம்" (using HotCat)
வரிசை 13: வரிசை 13:
==உசாத்துணை==
==உசாத்துணை==
*[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8646&Itemid=139 கீற்று இணையதளக் கட்டுரை]
*[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8646&Itemid=139 கீற்று இணையதளக் கட்டுரை]

[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்டம்]]

04:56, 17 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

சுதேசி இயக்கம் என்பது அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் ஆகும். இந்தியச் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் ஆங்கில ஆட்சியின்பால் கொண்ட அதிருப்தியின் காரணமாக, இவ்வியக்கத்தைச் சேர்ந்த பலரும் வெறும் விண்ணப்பங்களையும் வேண்டுகோள்களையும் அரசுக்குச் சமர்ப்பிப்பதால் பெரிய மாறுதல் எவையும் ஏற்படப் போவதில்லையென்றும், இதர பல நேரடி நடவடிக்கைளில் ஈடுபட்டுப் போராடுதல் அவசியம் என்றும் கருதிக்கொண்டிருந்தனர். அவ்வெண்ண எழுச்சியின் பிரதிபலிப்பாக 1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம், சுதேசி, தேசியக்கல்வி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுவே சுதேசி இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது.

காந்தியடிகள் காங்கிஸ் கட்சியின் தலைவரான பின், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் புதியதோர் திருப்பு முனை ஏற்பட்டது. காந்தியடிகள் அந்நியராட்சியை எதிர்க்கப் பொது மக்களை ஒன்று திரட்டி, அவர்கள் ஆதரவோடு பல போராட்டங்களை நடத்தினார். தனி நபர் சத்தியாக்கிரகம், உப்புச் சத்தியாக்கிரகம், உண்ணா நிலை அறப்போர் என்று அடுக்கடுக்காக அவர் நடத்திய போராட்டங்களில் முக்கியமான ஒன்று சுதேசி இயக்கம்.

பொதுமக்கள் அந்நிய நாட்டுப் பொருள்களை வாங்கக் கூடாது, அந்நியத் துணிகளைப் அழிக்க வேண்டும். உள்நாட்டின் உற்பத்திப் பொருள்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பது காந்தியடிகளால் உருவாக்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் உன்னத நோக்கம். அந்நாட்களில் இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் பரவியது. நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பொதுமக்களும் காங்கிரஸ்காரர்களும், தங்கள் வீட்டில் இருந்த அந்நிய நாட்டுத் துணிகளை வீதியிலே கொண்டு வந்து போட்டுக் கொளுத்தினார்கள். அப்போது தமிழகத்திலும் அந்தப் போராட்டம் வெகுஜன இயக்கமாக வீறுகொண்டு எழுந்தது. ஆனால், சுதேசி இயக்கம் தமிழ்நாட்டில் பெருத்த ஆதரவை பெறவில்லை என பிரிட்டிஷ் அரசின் அறிக்கைகள் கூறின. இந்த அறிக்கைகளுக்கு மாறாக சுதேசி இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு இருந்ததாக அதே பிரிட்டிஷ் அரசின் ரகசிய அறிக்கைகள் கூறின. குடிசைத் தொழில்களையும், கதர் துணியையும் ஊக்குவிக்கும் இயக்கமாக மட்டுமே சுதேசி இயக்கம் பலரால் பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், தூத்துக்குடியில் ஒரு நவீன தொழில் முயற்சியையும் (சுதேசிக் கப்பல் கம்பெனி), சுதேசி பண்டகசாலையையும் இந்த இயக்கம் ஏற்படுத்தியது. அதைப்போல திருநெல்வேலி, தூத்துக்குடியில் மக்கள் இயக்கங்களை உருவாக்கியது.


இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் என்றால் அந்நிய நாட்டுப் பொருள்களை அழிப்பது - அதன் அடையாளமாக அந்நியத் துணிகளுக்கு எரியூட்டுவது என்ற அளவிலேயே அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, வெள்ளையர் அரசின் ராஜத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, வெள்ளையர் நீதிமன்றத்தால் இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பெற்ற வ. உ. சிதம்பரம் பிள்ளை மட்டும் சுதேசி இயக்கம் என்றால், அது விதேசிப் பொருள்களைப் புறக்கணிப்பது மட்டுமல்ல, சுதேசி என்ற அடிப்படையில் அந்நியர்களுக்குப் போட்டியாக உற்பத்தி மண்டலங்களை உருவாக்குதல், அந்நியர்களுக்குப் போட்டியாக வர்த்தக நிறுவனங்களை நடத்துதல் என்று நாட்டு மக்களுக்கு அந்த இயக்கத்தின் இன்னொரு பக்கத்தையும் அணுகுமுறையையும் அடையாளம் காட்ட முயற்சித்தார். தனது சொத்தையே பணயம் வைத்து வெள்ளைக்காரர்களின் கப்பல் கம்பெனிகளுக்குப் போட்டியாக, சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றினை உருவாக்கினார்.

வ. உ. சி-யின் துணிச்சலும், நாட்டுப் பற்றும் ஏற்கனவே நாடு முழுவதிலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சுதேசி இயக்கத்தை, முன்னைவிட பலம் வாய்ந்ததாக்கியது. வ. உ. சிதம்பரனார் அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. சுதேசி கப்பல் நிறுவனம் சுதேசி இயக்கத்தின் ஒரு படிக்கல் ஆகும்.

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதேசி_இயக்கம்&oldid=668862" இலிருந்து மீள்விக்கப்பட்டது