எழுத்துப்பெயர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: az:Transliterasiya
சி தானியங்கிமாற்றல்: fi:Siirtokirjoitus
வரிசை 23: வரிசை 23:
[[es:Transliteración]]
[[es:Transliteración]]
[[fa:حرف‌نویسی]]
[[fa:حرف‌نویسی]]
[[fi:Translitterointi]]
[[fi:Siirtokirjoitus]]
[[fr:Transcription et translittération]]
[[fr:Transcription et translittération]]
[[gl:Transliteración]]
[[gl:Transliteración]]

04:08, 16 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

எழுத்துப்பெயர்ப்பு (transliteration) என்பது ஒரு மொழியின் சொல்லை மற்றொரு மொழியின் ஒலிப்பு முறைக்கும் எழுத்து அமைப்புக்கும் தக்கபடி எழுதுவதாகும். ஒவ்வொரு மொழியின் ஒலிப்பு முறையும் எழுத்து அமைப்பும் (Orthography) வேறுபடுவதனால் இது தேவைப்படுகிறது. எழுத்துப்பெயர்ப்பு ஒரு மொழியின் சொற்களின் அல்லது எழுத்துகளின் ஒலிக் குறியீட்டை, முயன்றவரை அதே ஒலியுடன், இன்னொரு மொழியில் எழுதுவதாகும். இதன் மூலம் முதல் குறிப்பிட்ட மொழியின் ஒலிக்குறியீட்டை அறிந்த ஒருவர், இரண்டாவது குறிப்பிட்ட மொழியின் எழுத்துக்கள் மூலம் வாசிக்கவும், புரிந்துகொள்ளவும் முடியும்.

இக்கடினமான குறிக்கோளை அடைய எழுத்துப்பெயர்ப்பு செய்யப்படும் மொழியின் எழுத்துகளையும், அதன் ஒலிகளையும் மட்டுமல்லாது, எழுதப்படும் மொழியின் எழுத்துகளையும், அதன் ஒலிகளையும், எழுத்துப்பெயர்ப்பாளர் செம்மையாக அறிதல் வேண்டும். எழுத்துப்பெயர்ப்பின் எதிர்மறை வடிவம் ஒலிபெயர்ப்பு ஆகும். ஒலிப்பெயர்பில், ஒரு மொழியின் ஒலிகளை (எழுத்துகளை அன்று) மற்றொரு மொழியின் எழுத்துகளோடு முகப்புதல் வேண்டும்.

எழுத்துப்பெயர்க்கும் மொழியின் வார்த்தைகளை ஒலித்தலும், எழுதுவதும் ஒன்றாகவே இருந்து, அதே ஒலிகளுக்கான எழுத்துக்கள் எழுதப்படும் மொழியில் இருந்தால், எழுத்துப்பெயர்ப்பும், ஒலிப்பெயர்ப்பும் ஒப்புமையாக அமையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்துப்பெயர்ப்பு&oldid=668120" இலிருந்து மீள்விக்கப்பட்டது