கணியான் கூத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: கணியான் என்ற பழங்குடி சாதியினரால் நிகழ்த்தப்படும் கூத்து க...
(வேறுபாடு ஏதுமில்லை)

17:55, 6 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

கணியான் என்ற பழங்குடி சாதியினரால் நிகழ்த்தப்படும் கூத்து கணியான் கூத்து எனப்படும் . மகுடம் என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை “மகுடாட்டம்” என்றும் அழைக்கப்படுகிறது. சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. அண்ணாவி, துணைப்பாடகர், மகுடம் அடிப்பவர்கள், ஜால்ரா இசைப்பவர்கள் மற்றும் பெண் வேடமிட்டு இருவர் ஆட, இக்கூத்தினை ஆறு அல்லது ஏழு கலைஞர்கள் நிகழ்த்துவர். பெண் வேடமிட்டவர்கள் அண்ணாவி பாடும்போது ஆடுவர், பாடி முடிந்து கதையை கூறும்போது அண்ணாவியின் வலது புறத்தில் ஒருவரும் இடதுபுறத்தில் ஒருவரும் நின்று தங்களது கால் சலங்கை ஒலிக்குமாறு தரையில் காலினை தட்டிக் கொண்டே இருப்பார்கள். அண்ணாவி பாடும்போதும், கதையினைக் கூறும்போதும் மகுடக்காரர்கள் இசைத்துக் கொண்டு இருப்பார்கள். இரண்டு வகையான மகுடம் இவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று மந்த ஒலியை எழுப்பும் மகுடம், மற்றொன்று உச்ச ஒலியை எழுப்பும் மகுடம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணியான்_கூத்து&oldid=661481" இலிருந்து மீள்விக்கப்பட்டது