நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 22°17′35.15″N 114°10′29.14″E / 22.2930972°N 114.1747611°E / 22.2930972; 114.1747611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பெயர் மாற்றம்
மீட்டர்கள் என்ற பயன்பாடு தவறு
வரிசை 1: வரிசை 1:
[[File:AvenueofstarsHKnight.jpg|thumb|250px|[[சிம் சா சுயி]] இல் நட்சத்திரங்களின் ஒழுங்கை ஆரம்பமாகும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் திரைப்படச் சுருளை ஆடையாக உடுத்திய '''சினிமா தேவதைச் சிலை''']]
[[File:AvenueofstarsHKnight.jpg|thumb|250px|[[சிம் சா சுயி]] இல் நட்சத்திரங்களின் ஒழுங்கை ஆரம்பமாகும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் திரைப்படச் சுருளை ஆடையாக உடுத்திய '''சினிமா தேவதைச் சிலை''']]
[[படிமம்:நட்சத்திரங்களின் ஒழுங்கை.JPG|thumb|250px|கடல்மேல் கட்டப்பட்டிருக்கும் நட்சத்திரங்களின் ஒழுங்கை காட்சி]]
[[படிமம்:நட்சத்திரங்களின் ஒழுங்கை.JPG|thumb|250px|கடல்மேல் கட்டப்பட்டிருக்கும் நட்சத்திரங்களின் ஒழுங்கை காட்சி]]
'''நட்சத்திரங்களின் ஒழுங்கை''' ''(Avenue of Stars)'' என்பது [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], [[சிம் சா சுயி]] நகரில், [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்திற்கு]] முன்பாக, கடல்மேல் கட்டப்பட்டுள்ள, ஒரு அகன்ற உலாச்சாலையாகும் இதன் நீளம் 440 மீட்டர்களாகும். இது ஹொங்கொங் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங் வாழும் மக்களை மட்டுமல்லாமல், ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் இடங்களில் ஒன்றாகும். இரவு நேரத்தில் மின்மினி மின்சார விளக்குகள் ஒழுங்கையின் நிலத்தில் மிளிர, உலாச்சாலை நெடுகிலும் பட்டொளி வீசி பார்ப்போரை பரவசப்படுத்தும். அத்துடன் ஹொங்கொங்கில் வரலாற்று புகழ்பெற்ற துறைமுகமான [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகமும்]], அக்கடல் தீவான [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] அழகியக் காட்சியை காண உலகெங்கிலும் இருந்து, ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துப்போகும் இடமும் ஆகும்.
'''நட்சத்திரங்களின் ஒழுங்கை''' ''(Avenue of Stars)'' என்பது [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], [[சிம் சா சுயி]] நகரில், [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்திற்கு]] முன்பாக, கடல்மேல் கட்டப்பட்டுள்ள, ஒரு அகன்ற உலாச்சாலையாகும் இதன் நீளம் 440 மீட்டராகும். இது ஹொங்கொங் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங் வாழும் மக்களை மட்டுமல்லாமல், ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் இடங்களில் ஒன்றாகும். இரவு நேரத்தில் மின்மினி மின்சார விளக்குகள் ஒழுங்கையின் நிலத்தில் மிளிர, உலாச்சாலை நெடுகிலும் பட்டொளி வீசி பார்ப்போரை பரவசப்படுத்தும். அத்துடன் ஹொங்கொங்கில் வரலாற்று புகழ்பெற்ற துறைமுகமான [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகமும்]], அக்கடல் தீவான [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] அழகியக் காட்சியை காண உலகெங்கிலும் இருந்து, ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துப்போகும் இடமும் ஆகும்.


இந்த நட்சத்திர ஒழுங்கையில் மக்கள் கூடுவதற்கான இன்னொரு சிறப்புக் காரணமும் உண்டு. அது ஹொங்கொங்கில் ஒவ்வொரு நாளும் பின்னேரம் 7:55 க்கு காட்டப்படும், உலகப் பிரசித்திப்பெற்றதும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதுமான [[கதிரியக்க மின்னொளி வீச்சு (ஹொங்கொங்)|கதிரியக்க மின்னொளி வீச்சை]]<ref>[http://news.gov.hk/en/category/businessandfinance/051121/html/051121en03016.htm Guinness world record for harbour show (21 Nov 2005)]</ref>. காண்பதற்கு மக்கள் வந்து கூடும் இடமும் ஆகும்.
இந்த நட்சத்திர ஒழுங்கையில் மக்கள் கூடுவதற்கான இன்னொரு சிறப்புக் காரணமும் உண்டு. அது ஹொங்கொங்கில் ஒவ்வொரு நாளும் பின்னேரம் 7:55 க்கு காட்டப்படும், உலகப் பிரசித்திப்பெற்றதும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதுமான [[கதிரியக்க மின்னொளி வீச்சு (ஹொங்கொங்)|கதிரியக்க மின்னொளி வீச்சை]]<ref>[http://news.gov.hk/en/category/businessandfinance/051121/html/051121en03016.htm Guinness world record for harbour show (21 Nov 2005)]</ref>. காண்பதற்கு மக்கள் வந்து கூடும் இடமும் ஆகும்.


==சிறப்பு நாட்களில்==
==சிறப்பு நாட்களில்==

15:23, 6 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

சிம் சா சுயி இல் நட்சத்திரங்களின் ஒழுங்கை ஆரம்பமாகும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் திரைப்படச் சுருளை ஆடையாக உடுத்திய சினிமா தேவதைச் சிலை
படிமம்:நட்சத்திரங்களின் ஒழுங்கை.JPG
கடல்மேல் கட்டப்பட்டிருக்கும் நட்சத்திரங்களின் ஒழுங்கை காட்சி

நட்சத்திரங்களின் ஒழுங்கை (Avenue of Stars) என்பது ஹொங்கொங்கில், சிம் சா சுயி நகரில், விக்டோரியா துறைமுகத்திற்கு முன்பாக, கடல்மேல் கட்டப்பட்டுள்ள, ஒரு அகன்ற உலாச்சாலையாகும் இதன் நீளம் 440 மீட்டராகும். இது ஹொங்கொங் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங் வாழும் மக்களை மட்டுமல்லாமல், ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் இடங்களில் ஒன்றாகும். இரவு நேரத்தில் மின்மினி மின்சார விளக்குகள் ஒழுங்கையின் நிலத்தில் மிளிர, உலாச்சாலை நெடுகிலும் பட்டொளி வீசி பார்ப்போரை பரவசப்படுத்தும். அத்துடன் ஹொங்கொங்கில் வரலாற்று புகழ்பெற்ற துறைமுகமான விக்டோரியா துறைமுகமும், அக்கடல் தீவான ஹொங்கொங் தீவின் அழகியக் காட்சியை காண உலகெங்கிலும் இருந்து, ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துப்போகும் இடமும் ஆகும்.

இந்த நட்சத்திர ஒழுங்கையில் மக்கள் கூடுவதற்கான இன்னொரு சிறப்புக் காரணமும் உண்டு. அது ஹொங்கொங்கில் ஒவ்வொரு நாளும் பின்னேரம் 7:55 க்கு காட்டப்படும், உலகப் பிரசித்திப்பெற்றதும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதுமான கதிரியக்க மின்னொளி வீச்சை[1]. காண்பதற்கு மக்கள் வந்து கூடும் இடமும் ஆகும்.

சிறப்பு நாட்களில்

ஹொங்கொங்கில் சிறப்பு நாட்களில் வண்ண வான்வெடி முழக்கம் இடம்பெறும் போது, மக்கள் வெள்ளம் இந்த நட்சத்திர ஒழுங்கை முழுதுமாக நிரம்பி, மேலும் சில கிலோ மீட்டர் தூரங்களுக்கும் மக்கள் நெரிசலை ஏற்படுத்தும். அவ்வாறான நாட்களில் இந்த உலாச்சாலை ஹொங்கொங் காவல் துறையினாரால் மக்கள் நெரிசல் கட்டுப்படுத்தலும் இடம்பெறும். இவ்வாறு மக்கள் நெரிசல் ஏற்படுவதால் இரவு நேர வண்ண வான்வெடி முழக்கத்தைக் காண மக்கள் மாலை 4:00 மணிக்கே சென்று இடம் பிடிக்கத் தொடங்கிவிடுவர். அதனால் தாமதமாக செல்வோருக்கு இந்த நட்சத்திர ஒழுங்கையின் அருகாமைக்கேனும் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

அமைவிடம்

இந்த நட்சத்திர ஒழுங்கையின் அமைவிடம் ஹொங்கொங், கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பில், கவுலூன், சிம் சா சுயி எனும் நகரில் அமைந்துள்ளது. ஹொங்கொங்கில் தமிழர்கள் அடிக்கடி கூடும் இடமான சுங்கிங் கட்டத்திலிருந்து சில மீட்டர்கள் தூரம் மட்டுமே உள்ளது.

சட்டம்

படிமம்:வெண்சுருட்டு புகைத்தல் தடை.JPG
புகைத்தலுக்கான குற்றக்காசு HK$5000.00

இந்த நட்சத்திர ஒழுங்கை உலாச்சாலையில் உலாவுவோர், புகைப்பிடிக்கக் கூடாது. ஈருருளி போன்ற வண்டிகளை ஓட்டிக்கொண்டோ, தள்ளிக்கொண்டோ என்றாலும் போக அனுமதியில்லை. செல்லப்பிராணிகளான நாய்களை இங்கு அழைத்துச்செல்ல முடியாது. அவற்றை மீறினால் தண்டக் காசு அறவிடப்படும். ஆனால் மாற்று வழுவுள்ளோர் தமது வண்டிகளில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வெண்சுருட்டு புகைத்தால், அதற்கான தண்டக் காசு HK$5000.00 ஆகும். இருப்பினும் சட்டங்களை மீறினால் நடக்கும் என்ன நடக்கும் எனும் விழிப்புணர்வு பெற்றவர்களாகவே இம்மக்கள் உள்ளனர். இதனை அறிந்த தென்னாசிய மக்கள் கூட இச்சட்டங்களை இங்கு மதித்து நடப்பவர்களாக இருப்பதைக் காணலாம்.

ஹொங்கொங் நாட்டு மக்களை பொருத்த வரையில், அவர்கள் இந்த நாட்டை காதலிப்பவர்களாகவே உள்ளனர். இங்கு அநேகமான இடங்களில் "I LOVE HONG KONG", "WE LOVE HONG KONG" எனும் வாசங்களை காணலாம். ஹொங்கொங்கில் வளர்ந்து வரும் இளம் சமுதாயமானது, (ஹொங்கொங்கில் வளரும் தமிழ் குழந்தைகள் உட்பட) தூய்மைப் பேனல் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்களாகவும், ஹொங்கொங் சட்டங்களை மதிக்க வேண்டும் எனும் மனப்பான்மை கொண்டவர்களாவும் வளர்ந்து வருவதைக் காணலாம்.

தூய்மை பேனல்

ஹொங்கொங்கில் ஏனைய இடங்களைப் போன்றே, இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையிலும் 100% வீதத் தூய்மை பேனலைப் பார்க்கலாம். குளிர்களி, சில பொறியல் வகை சிற்றுணவுகள் அழகுக்கடைகள் இந்த உலாச்சாலையில் இருக்கின்றன. அவ்வுணவு வகைகளை வாங்கி உற்கொள்வோர், அதன் எச்சங்களை அதற்கான குப்பைத் தொட்டிகளில் கன்னியமாக போட்டுச்செல்வதைக் காணலாம். எவரும் எச்சில் துப்புவதை ஏனும் காண்பதற்கில்லை. இன்னும் கூறப்போனால், இந்த குப்பைத் தொட்டிகள் கூட கலைநயத்துடன் அழகாகவும், சுத்தமாகவும், துர்நாற்றம் வீசததாகவும் உள்ளன.

வரலாறு

"நட்சத்திரங்களின் ஒழுங்கை" உலாச்சாலை

1982 இல் "புதிய உலக மேம்படுத்தல் கூட்டுத்தாபனம்" அல்லது "புதிய உலகக் குழுமம்" என அழைக்கப்படும் நிறுவனம், சிம் சா சுயி கிழக்கில், கடலையொட்டிய நிலப்பரப்பில். ஒரு உலாச்சாலையை நிறுவியிருந்தது. 2003 ஆம் ஆண்டு இந்த உலாச்சாலையை மேலும் மேம்படுத்தி, ஹொங்கொங் சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் நட்சத்திரங்களின் ஒழுங்கை அமைக்கும் திட்டத்தை "இந்த நிறுவனம் முன்வைத்தது. இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை கட்டுமானப் பணிக்கான செலவு HK$40 மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்றும் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை ஹொங்கொங் சுற்றாலா சபை, ஹொங்கொங் சுற்றுலா சபை ஆணையம், முசுப்பாற்றல் மற்றும் பண்பாட்டு சேவை திணைக்களம், ஹொங்கொங் அரசு மற்றும் ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபை போன்றனவும் இணைந்து பொறுப்பேற்றன.

இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 2004 ஏப்பிரல் 28 ஆம் திகதி பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. எனினும் அதற்கு முதல் நாளான 27 ஆம் திகதி, ஹொங்கொங் அரச தலைவர்கள் மற்றும் ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபையினரின் தலைமைத்தாங்கலின் கீழ் வைபவ ரீதியான திறப்பு விழா இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்புத் தகவல்கள்

படிமம்:புரூஸ் லீயின் வெங்கலச் சிலை.JPG
நட்சத்திரங்களின் ஒழுங்கையில் வைகப்பட்டிருக்கும் புரூசு லீயின் வெங்கலச் சிலை
புரூசு லீயின் நினைவுத் தடம்
யக்கிச்சானின் நினைவுத் தடம்
யெட் லீயின் நினைவுத் தடம்

இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை, உல்லாசப் பயணிகளைக் கவரும் வேறு சில இடங்களையும் அருகாமையில் கொண்டுள்ளது. அதாவது இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையை அண்மித்தே ஹொங்கொங் கலை அருங்காட்சியகம், ஹொங்கொங் பண்பாட்டு மையம், வான்வெளி அருங்காட்சியம், ஹொங்கொங்கின் பழமையான நினைவு சின்னங்களில் ஒன்றான சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம் போன்றனவும் உள்ளன. அத்துடன் புதிய உலக மையக் கட்டடமும் இந்த உலாச்சாலையை அண்மித்தே உள்ளது.

இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையின் நிலத்தில், ஹொங்கொங்கின் பிரசித்திப்பெற்ற சினிமா நட்சத்திரங்களின் நூற்றாண்டு வரலாற்றை நினைவு கூறும் வகையில், பல நட்சத்திரங்களின் தடங்கள் பொதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹொலிவூட் திரைப்படங்களிலும் நடித்து, உலகப்புகழ் பெற்ற நட்சத்திரங்களான புரூசு லீ, யக்கிச்சான், யெட் லீ போன்றவர்களின் தடங்களும் உள்ளடக்கம். அவற்றின் அந்நட்சத்திரங்களின் கையெழுத்தும் பொதிக்கப்பட்டுள்ளன.

கை தடம் பதித்து பெற முடியாத முன்னாள் நட்சத்திரங்களின் நினைவுத் தடங்களில், பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கை தடமோ, கையெழுத்தோ இருக்காது. எடுத்துக்காட்டாக புரூசு லீயின் தடத்தில் அவரின் பெயர் மட்டுமே உள்ளது.

அத்துடன் புரூசு லீயின் நினைவாக, ஒரு வெங்கலச் சிலையும் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் புரூசு லீயின் நினைவு பொருற்கள் விற்பனையகம் ஒன்றும் உள்ளது.

அத்துடன் யக்கிச்சானின் நினைவு பொருற்கள் விற்பனையகம் ஒன்றும், ஹொங்கொங்கில் பிரசித்திப் பெற்ற இன்னொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நினைவு பொருற்கள் விற்பனையகம் ஒன்றும் உள்ளது. மொத்தம் மூன்று நினைவு பொருற்கள் விற்பனையங்கள் உள்ளன.

மேலும் திரைப்பட துறைச் சார்ந்த படப்பிடிப்பாளர் சிலை, மின்விளக்கு பிடிக்கும் உதவியாளர் சிலை, படப்பிடிப்பின் போது நடிகைகள் அமருவதற்கான வெங்கல அமர்கை, மற்றும் திரைப்படப் பிடிப்புகளின் போது பயன்படும் உபகரணங்களின் மாதிரி சிலைகள், தூபிகள் என, இந்த நட்சத்திர ஒழுங்கை நெடுகிலும் வைக்கப்பட்டுள்ளன. நட்சத்திரங்களின் ஒழுங்கை ஆரம்பப் பகுதியில் ஒரு திறந்தவெளி அரங்கம் ஒன்றும் உள்ளது. சில நேரங்களில் பல கலை நிகழ்ச்சிகளும் இந்த திறந்தவெளி அரங்கில் இடம் பெறும். இந்த திறந்தவெளி அரங்கின் முன்பாக உள்ள கட்டடத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சியின் ஊடாக, ஹொங்கொங் நட்சத்திரங்கள் தொடர்பான நிகழ்வுகளை காண்பித்த வண்ணமே இருக்கும்.

ஹொங்கொங் தீவின் அகலப்பரப்பு காட்சி

இந்த நட்சத்திர ஒழுங்கையில் இருந்து பார்த்தால் விக்டோரியா துறைமுகத்தின் எதிரே அக்கடல் நிலப்பரப்பான ஹொங்கொங் தீவின் கட்டடங்களின் அழகியக் காட்சி காண்போரின் கண்களை கொள்ளைகொள்ள வைக்கும். இரவு நேர காட்சி, கட்டடங்களின் வண்ண மின்விளக்கு அலங்காரங்களுடன் மிளிரும். ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள் இந்த அருமையானக் காட்சியை, அநேகமானோர் காணத் தவறுவதில்லை. இதனால் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை ஹொங்கொங்கில் காண்போர் கவரிடங்களில், சிறப்பான இடங்களில் ஒன்றாகும்.

சிம் சா சுயி நட்சத்திரங்களின் ஒழுங்கையில் இருந்து ஹொங்கொங் தீவின் காண்போர் கண்கவர், இரவு நேர அகலப்பரப்பு காட்சி

மேலதிகத் தகவல்கள்

நட்சத்திரங்களின் ஒழுங்கையின் தொடர்ச்சியாக, மணிக்கூட்டு கோபுரம் பக்கம் செல்லும் உலாச்சாலை நெடுகிலும் நிழல்படப் பிடிப்பாளர்கள் கூவியழைப்பார்கள். HK$10.00 இலிருந்து HK$60.00 டொலர்கள் வரை நிழல்படத்தின் அளவிற்கு ஏற்ப அறவிடுவார்கள். இரண்டு நிமிடத்தில் நிழல் படத்தைப் பெற்றுக்கொள்ளலாம். 20 நிமிடங்களில் ஒரு நபரை கதிரையில் இருத்தி விட்டு, கண்முன்னேயே மாதிரிப் படத்தை HK$90 டொலார்களுக்கு வரைத்து கொடுக்கும் ஓவியக் கலைஞர்களும் உள்ளனர்.

அத்துடன் உலாச்சாலையின் சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம் முன்பாக விக்டோரியா துறைமுகத்தை ஒரு சுற்று சுற்று வருவதற்கான உல்லாசப் படகும் சேவையும் உள்ளது. அதற்கான கட்டணம் வயதுவந்தோர் HK$350.00, சிறியோர் HK$270.00 டொலர்களாகும்.

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்சத்திரங்களின்_சாலை&oldid=661395" இலிருந்து மீள்விக்கப்பட்டது