உலகப் பாரம்பரியக் களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: az:Dünya irsi
சி தானியங்கிஇணைப்பு: ml:ലോകപൈതൃകസ്ഥാനം
வரிசை 117: வரிசை 117:
[[lv:UNESCO Pasaules mantojuma objekts]]
[[lv:UNESCO Pasaules mantojuma objekts]]
[[mk:Список на светско културно и природно наследство на УНЕСКО]]
[[mk:Список на светско културно и природно наследство на УНЕСКО]]
[[ml:ലോകപൈതൃകസ്ഥാനം]]
[[mn:Дэлхийн өв]]
[[mn:Дэлхийн өв]]
[[mr:जागतिक वारसा स्थान]]
[[mr:जागतिक वारसा स्थान]]

12:45, 11 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

உலக பாரம்பரியக் களம் என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும். இது, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம். யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு, நாடுகளின் பொதுக் குழுவினால் தெரிவு செய்யப்படும் 21 பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும்.

மனித இனத்தின் பொதுப் பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும். சில களங்களின் மேம்பாட்டுக்காக உலக பாரம்பரிய நிதியத்தில் இருந்து நிதி உதவி வழங்கப்படுவதும் உண்டு. 16 நவம்பர் 1972 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத் திட்டத்தை இதுவரை 184 நாடுகள் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளன.

2007 ஆம் ஆண்டு நிலைவரப்படி இது வரை 851 களங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 142 நாடுகளில் அமைந்துள்ள இக்களங்களில், 660 பண்பாட்டுக் களங்களும், 166 இயற்கைசார் களங்களும், 25 கலப்பு இயல்புக் களங்களும் அடங்குகின்றன.

புவியியற் பகுதிகள் அடிப்படையில் பாரம்பரியக் களங்களின் பரம்பலைக் கீழுள்ள அட்டவணையிற் காணலாம்.

வலயம் இயற்கை பண்பாடு கலப்பு மொத்தம் %
ஆபிரிக்கா 33 38 3 74 9%
அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் 3 58 1 62 7%
ஆசியா-பசிபிக் 45 126 11 182[1] 21%
ஐரோப்பாவும் வட அமெரிக்காவும். 51 358 7 416 49%
லத்தீன் அமெரிக்காவும் கரிபியனும் 34 80 3 117 14%


உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்

வார்ப்புரு:Link FA

  1. ரஷ்யா மற்றும் மங்கோலியாவில் உள்ள Uvs Nuur Basin இங்கே ஆசியா-பசிபிக் வலயத்துள் அடக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகப்_பாரம்பரியக்_களம்&oldid=628523" இலிருந்து மீள்விக்கப்பட்டது