பாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11: வரிசை 11:
[[பகுப்பு:தமிழ்நாட்டில் வாழ்ந்த வள்ளல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் வாழ்ந்த வள்ளல்கள்]]
[[பகுப்பு:தமிழர் வரலாறு]]
[[பகுப்பு:தமிழர் வரலாறு]]



[[en:Vēl Pāri]]

00:25, 11 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

பாரி பறம்புமலையை ஆட்சி செய்த மன்னன். கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவர். இவர் குறுநிலமன்னர்களில் ஒருவர் ஆவார். பாரி வேளிர்குலத்தைச் சார்ந்தவர்; எனவே, இவரை 'வேள்பாரி' என்றும் அழைப்பர். பாரி பறம்பு மலையையும் அதனைச்சூழ்ந்த நாட்டையும் ஆண்டவர். இந்தப் பறம்புநாடு முந்நூறு(300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை இக்காலத்தில் 'பிரான்மலை' என்று வழங்குகின்றது. அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும். இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு. பிறான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகில் உள்ளது. பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது.அப்படி இருந்தப்போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தண்மையே.கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர். இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராக சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர்.

புலவர் கபிலர் பாரியின் நண்பர். திருச்சியிலிருந்து மதுரை செல்லும்வழியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; 'பொய்யாநாவிற்கபிலர்' என்று புகழப்படுபவர்.இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர்.

பாரி தமிழ்வேந்தர் மூவராலும் வஞ்சித்துக் கொல்லப்பட்டான். பாரிக்கு இருமகளிர் உண்டு.அங்கவை சங்கவை ஆகியோர் இவரது மகள்கள் ஆவர். பாரியை ஒளவைப் பெருமாட்டியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

வள்ளல்கள் எல்லோரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான்ஏறிவந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலால் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தன்ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ்பெற்ற சுந்தரர் -'திருத்தொண்டத்தொகை' என்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவர்- பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப்பற்றிய பாடல்கள் 'புறநானூறு' என்னும் சங்கத்தொகை நூலில் உள்ளன. அவற்றை இனிக்காணலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரி&oldid=628317" இலிருந்து மீள்விக்கப்பட்டது