பெர்சி பைச்சு செல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Writer <!-- for more information see Template:Infobox Writer/doc --> | name = பெர்சி பைஷ் ஷெல்லி | image = Portrait...
 
சி Quick-adding category "ஆங்கில எழுத்தாளர்கள்" (using HotCat)
வரிசை 69: வரிசை 69:
[[zh-yue:雪萊]]
[[zh-yue:雪萊]]
[[zh:珀西·比希·雪莱]]
[[zh:珀西·比希·雪莱]]

[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர்கள்]]

04:41, 4 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

பெர்சி பைஷ் ஷெல்லி
பிறப்பு(1792-08-04)4 ஆகத்து 1792
ஃபீல்டு பிளேஸ், ஹோர்ஷாம், இங்கிலாந்து[1]
இறப்பு8 சூலை 1822(1822-07-08) (அகவை 29)
வியாரேக்கியோ, தஸ்கனி, இத்தாலி
தொழில்எழுத்தாளர், நாடகாசிரியர், கட்டுரையாளர், கவிஞர்
இலக்கிய இயக்கம்புனைவியல்
கையொப்பம்

பெர்சி பைச்சு செல்லி அல்லது பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley, ஆகஸ்ட் 4, 1792 – ஜூலை 8, 1822) ஒரு ஆங்கிலக் கவிஞர். புனைவியல்/கற்பனையியல் இயக்கத்தின் (romantic movement) முக்கிய கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் ஜான் கீட்ஸ் மற்றும் பைரன் பிரபு ஆகியோரின் நண்பர். இவருடைய இரண்டாவது மனைவி மேரி ஷெல்லியும் புகழ் பெற்ற புதின எழுத்தாளர்.

ஷெல்லியின் அசாத்திய கொள்கைப்பிடிப்பும், தனித்துவ வாழ்க்கைமுறையும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் புகழை அடையவிடாமல் தடுத்தன. அவருட்டைய படைப்புகள் பலமுறை புறக்கணிக்கப்பட்டன அல்லது உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டன. அவர் இறக்கும்வரை அவருடைய ரசிகர் கூட்டத்தின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டவில்லை. ஓசிமாண்டியாஸ், ஓட் டூ எ வெஸ்ட் விண்ட், டூ எ ஸ்கைலார்க், தி மாஸ்க் ஆஃப் அனார்க்கி அஃப் அனார்க்கி போன்ற தனிக்கவிதைகள் ஷெல்லியின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். ஆங்கில கவிதையுலகில் அழியாப்புகழ் பெற்றிருக்கும் இவை, இன்று வரை செவ்வியல் கவிதைத் தொகுப்புகளில் இடம் பெறுகின்றன. இவற்றைத் தவிர அடோனாய்ஸ், குயின் மாப், அலாஸ்டர், ரிவோல்ட் ஆஃப் இஸ்லாம், தி டிருயம்ஃப் ஆஃப் லைஃப் போன்ற புகழ்பெற்ற நெடுங்கவிதைகளையும், தி சென்சி, புரோமீத்தியஸ் அன்பவுண்ட் போன்ற மேடை நாடகங்களையும் ஷெல்லி எழுதியுள்ளார். முப்பதாண்டுகளே வாழ்ந்தாலும், ஆங்கில இலக்கியத்தில் ஷெல்லி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நான்கு தலைமுறைகளாக பல கவிஞர்கள் ஷெல்லியின் படைப்புகளால் உந்தப்பட்டு கவிதைகளை எழுதினர். அவரது வன்முறையற்ற போராட்ட முறைகள் கென்றி டேவிட் தூரோவின் சட்டமறுப்புக் கொள்கைக்கும் மகாத்மா காந்தியின் அறப்போர் முறைக்கும், முன்னோடியாக இருந்தது.

மேற்கோள்கள்

  1. The Life of Percy Bysshe Shelley, Thomas Medwin (London, 1847), p. 323

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சி_பைச்சு_செல்லி&oldid=624666" இலிருந்து மீள்விக்கப்பட்டது