வான்குடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய பக்கம்: thumb|upright|விரியும் வான்குடைகள் '''வான்குடை''' (பார...
 
சி வான் குடை, வான்குடை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:59, 6 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

விரியும் வான்குடைகள்

வான்குடை (பாராசூட், parachute) வளிமண்டலத்தில் ஒரு பொருளின் நகர்வின் வேகத்தை பின்னிழு விசையை உருவாக்கிக் குறைக்கப் பயன்படும் ஒரு கருவி. வான்குடைகள் மெலிதான ஆனால் உறுதியான பொருட்களால் செய்யப்படுகின்றன. முன்னர் பட்டினால் செய்யப்பட்டன, இப்போது நைலான் செயற்கை இழையினால் செய்யப்படுகின்றன. வளிமண்டலத்தில் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் இறுதி செங்குத்து திசைவேகத்தினை (Terminal Vertical Velocity) குறைந்தபட்சம் 75 சதவிகிதம் குறைக்குக்கூடிய கருவிகள் மட்டுமே வான்குடைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

பாராசூட் என்ற சொல் “பாரா” மற்றும் ”சூட்” என்ற இரு பிரெஞ்சு சொற்களிலிருந்து தோன்றியது. “பாரா” என்றால் “தயாராகுதல்” என்று பொருள்; “சூட்” என்றால் ”விழு” என்று பொருள். வான்குடைகள் மக்கள், சரக்குகள், உணவு, வெடிகுண்டுகள் என பலதரப்பட்ட பொருட்களை வான்வெளியிலிருந்து பூமிக்குக் கொண்டு வர பயன்படுத்தப்படுகின்றன. மிதவை வான்குடைகள் (drogue parachutes) மீள்விண்கலம் போன்ற வானூர்திகள் தரையிறங்கும் போது பக்கவாட்டு முடுக்கத்தைக் குறைக்க பயன்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்குடை&oldid=606900" இலிருந்து மீள்விக்கப்பட்டது