சியா இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be-x-old:Шыізм; cosmetic changes
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26: வரிசை 26:
தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.
தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.


==முஹர்ரம் ==
== மொஹரம் ==
சன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு [[மொஹரம்]] ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம். இந்த ஊர்வலத்தை நடத்துவோர் ஷியா முஸ்லிம்கள்.
சன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு [[மொஹரம்]] ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம். இந்த ஊர்வலத்தை நடத்துவோர் ஷியா முஸ்லிம்கள்.



07:12, 6 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

சர்வதேச அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது இஸ்லாம். ஏற்றத் தாழ்வு இல்லாத, பூவுலகில் எவரும் அடையச் சாத்தியமான வாழ்க்கையை முன்னிறுத்தும் இஸ்லாம், முன்னெப்போதையும்விட இப்போது அதிகம் பேசப்படுகிறது.


மக்கள்தொகை

காம்பியாவில் இருந்து இந்தோனேசியா வரை 55 முஸ்லிம் நாடுகள் உள்ளன. இவற்றில் மட்டும் 180 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்தோனேசிய முஸ்லிம்களின் மக்கள்தொகை 19 கோடி.

ஐரோப்பிய நாடுகளிலும் வடஅமெரிக்க நாடுகளிலும் கணிசமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மேற்கு ஐரோப்பாவில் பிரான்ஸில் அதிகபட்சமாக, ஏறத்தாழ 60 லட்சம் பேர் வாழ்கின்றனர். அமெரிக்காவில் 30 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் பணிபுரிகின்றனர்.

மதச்சார்பற்ற நாடுகளில் இந்தியாவில்தான் அதிகளவில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்திய முஸ்லிம்களின் தொகை 12 கோடி என்கிறது அரசு. இருபது கோடியை எட்டும் என்கின்றனர் முஸ்லிம்கள். முஸ்லிம்களிடையே பல உட்பிரிவுகள் இருக்கின்றன. இரு பெரும் பிரிவுகளில் ஒன்று சன்னி, மற்றது ஷியா. 90 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். எஞ்சிய பத்து சதவீதத்தினரான ஷியா முஸ்லிம்கள், "சிறுபான்மையினரில்' சிறுபான்மையினர். ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான்.

வேறுபாடு

அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது குர்ஆன், அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளும் ஏற்றுக் கொள்கின்றன. முஹம்மது நபிகளாருக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில்தான் தொடங்கியது பிரச்சினை.

முஹம்மது நபிகளாரின் நெருங்கிய தோழரும் மாமனாருமான அபுபக்கரை, முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஷியா பிரிவினரோ, முஹம்மது நபிகளின் மற்றொரு தோழரும் மருமகனுமான அலியே பெருமானாரின் வாரிசு என்கின்றனர். இதில் தொடங்கிய சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. சன்னிகளுக்கும் ஷியாக்களும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே!

தொழுகைக்கான அழைப்பில் (பாங்கு) சிறிய வித்தியாசம். "அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம்.

தொழுகையில் கொஞ்சம் வித்தியாசம். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை.

ஜகாத்

தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.

முஹர்ரம்

சன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு மொஹரம் ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம். இந்த ஊர்வலத்தை நடத்துவோர் ஷியா முஸ்லிம்கள்.

ஈரான்

ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் ஒரே நாடு ஈரான். சன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வந்துள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் ஈரானியப் புரட்சியாளர் அயதுல்லா கொமேனி. ""ஷியாவோ, சன்னியோ... முதலில் எல்லோரும் முஸ்லிம்கள்; எதற்காக வீண் சண்டை என்று அவர் எழுப்பிய அர்த்தம் பொதிந்த கேள்வி, சண்டையாளர்களின் மனதைத் தொட்டது; அமைதி ஏற்பட்டது.

முஸ்லிம் நாடுகளிலேயே முற்போக்கு நாடாக இன்றளவில் சுட்டிக் காட்டப்படுவது ஈரான். அந் நாட்டுத் திரைப்படங்கள் உலகப் புகழ்பெற்றவை. பெண்கள் ராணுவத்தில் பங்குபெறும் அளவுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது அங்கு! பல வகைகளிலும் துடிப்புடன் முன்னேறி வருகிறது ஈரான். ஈரானுக்கு அடுத்தபடியாக, இராக், லெபனான், பாகிஸ்தான் என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.

இந்தியாவில்

இந்தியாவில் ஷியாக்கள் எண்ணிக்கை சொற்பம்தான். உத்தரப் பிரதேசம், காஷ்மீரில் கொஞ்சம், ஆந்திரம், தமிழகத்தில் கொஞ்சம் என சிதறி வாழ்கின்றனர்.

தமிழகத்தில் ஷியாக்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரம்தான். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம்விளக்கு மசூதிதான் இதன் தலைமையகம். தமிழக அரசின் தலைமை ஷியா காஜி ஜி.ஏ. அஸ்கரியின் அலுவலகம் இங்குதான் உள்ளது.

சென்னையில் 10 மசூதிகள், வேலூர் தொரப்பாடி, கிருஷ்ணகிரி, ஜெகதேவி, வந்தவாசி என சொற்பமான இடங்களில்தான் வாழ்கின்றனர். இவர்களது தாய்மொழி உருது. தமிழ், ஓரிருவருக்குத்தான் பரிச்சயம்.

சமூகநிலை

தமிழகத்தில், ஷியா முஸ்லிம்களின் மசூதிக்கு சன்னி முஸ்லிம்களும், சன்னி முஸ்லிம்களின் மசூதிக்கு ஷியாக்களும் செல்கிறார்கள்; தொழுகிறார்கள். சில இடங்களில் திருமண உறவும் இவர்களுக்கிடையே உண்டு.

""ஷியா மசூதிக்கு சன்னி முஸ்லிம்கள் வரக்கூடாது என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம். இப்போ அப்படி இல்ல. நெலம மாறிடுச்சு.. நாங்களும் அவங்க மசூதிக்குப் போறோம். அவங்களும் எங்க மசூதிக்கு வர்றாங்க... என்கிறார் மக்பூல் அலி. ஷியா முஸ்லிம்கள் சென்னையில் நடத்தும் ஹூசைனி அறக்கட்டளையின் செயலர் இவர்.

நூறு சதவீதம் கல்வி பெற்ற சமுதாயம் அல்ல. இருந்தாலும் சன்னி முஸ்லிம்களைவிட இவர்களது படிப்பறிவுச் சதவீதம் பரவாயில்லை. 80 சதவீதம் படித்தவர்கள். பெண் கல்விக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

சென்னையில் உள்ள ஷியா முஸ்லிம்களால் ஹூசைனி அறக்கட்டளை ஒன்று நடத்தப்படுகிறது. 1944-ல் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளையின் சார்பில் சென்னை ராமாவரம் பகுதியில் பள்ளிக்கூடமும் சிறுவர் இல்லமும் நடத்தப்படுகின்றன. ஏழை மாணவர்களுக்கும் விதவைகளுக்கும் இந்த அறக்கட்டளை மூலம் தாராள உதவிகள் அளிக்கப்படுகின்றன.

சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினர் என்பதால், தங்களுக்கு அரசியலிலோ சமூகத்திலோ உரிய அங்கீகாரம் இல்லை என்ற ஆதங்கம் இவர்களுக்கு உண்டு. வஃக்பு வாரியத் தலைவர் பதவி இல்லாவிட்டாலும் துணைத் தலைவர் பதவியையாவது ஷியா முஸ்லிம்களுக்குத் தரலாமே என்று ஆதங்கப்படுகிறார் ரியாசத் அலி. அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று, தற்போது ஆயிரம் விளக்கு மசூதியின் மேலாளராக இருப்பவர் இவர்.

""நாங்கள் ஆன்மிகவாதிகள்; தியாகத்தையே இஸ்லாத்தின் அடிப்படையாகக் காண்கிறோம். அஹிம்சை, மனிதநேயம், சகோதரத்துவம் ஆகியவைதான் எங்களுக்கு ஆதாரம். சத்தியத்துக்கென்று ஒரு சக்தி உண்டு. அந்த சக்தி ஷியாக்களுக்கு வலு தரும். அரசியலில் எங்களுக்கு நாட்டமில்லை என்கிறார் நஜப் அலி மிர்ஸா. காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மறைந்த தாவூது அலி மிர்ஸாவின் மகன் இவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியா_இசுலாம்&oldid=589516" இலிருந்து மீள்விக்கப்பட்டது