டார்ஜீலிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 27°02′N 88°10′E / 27.03°N 88.16°E / 27.03; 88.16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
rm skypecode
வரிசை 262: வரிசை 262:
| Edition = 13th
| Edition = 13th
| Publisher= Footprint Handbooks
| Publisher= Footprint Handbooks
| ISBN = 1904777007
| ISBN = 1904777007 begin_of_the_skype_highlighting              1904777007      end_of_the_skype_highlighting begin_of_the_skype_highlighting              1904777007      end_of_the_skype_highlighting begin_of_the_skype_highlighting              1904777007      end_of_the_skype_highlighting
}}
}}
* {{Harvard reference
* {{Harvard reference

09:41, 28 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

Darjeeling
—  town  —
A panoramic view of a hill range. The upper portions of the nearer hillsides have tiled houses, while the farther hillsides and the lower portions of the nearer ones are covered with green bushes. A few coniferous trees are scattered throughout.
A view of Darjeeling from the Happy Valley Tea Estate
A view of Darjeeling from the Happy Valley Tea Estate
Darjeeling
இருப்பிடம்: Darjeeling

, West Bengal

அமைவிடம் 27°02′N 88°10′E / 27.03°N 88.16°E / 27.03; 88.16
நாடு  இந்தியா
மாநிலம் West Bengal
மாவட்டம் Darjeeling
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி Darjeeling
மக்கள் தொகை

அடர்த்தி

1,07,530 (2001)

8,548/km2 (22,139/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10.57 சதுர கிலோமீட்டர்கள் (4.08 sq mi)

2,134 மீட்டர்கள் (7,001 அடி)

குறியீடுகள்

டார்ஜீலிங் (நேபாளி: दार्जीलिंग) என்ற பெயருடன் கூடிய நகரம் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம் மாநிலத்தில் நிலை கொண்ண்டுள்ளது. டார்ஜீலிங் மாவட்டத்தின் தலை நகரமாகவும் இந்த நகரம் திகழ்கிறது.


இது மஹாபாரத் மலைத்தொடர் அல்லது இமாலயத்தை விட சற்று குறைவான சராசரி உயரம் உடையது. இந்தியாவை பிரிட்டிஷ் இந்திய அரசு ஆட்சி புரிந்த காலக்கட்டத்தில், டார்ஜீலிங்கின் மிதமான தட்பவெப்பநிலை அங்கிருந்த பிரிட்டிஷ் மக்களுக்கு கோடைகாலங்களில் கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்கான புகலிடமாக அமைந்தது, அதுவே மலைவாழிடமாக (மலை நகரம்) இது வளர்ச்சியுறுவதற்கு காரணமாக அமைந்தது. இதனால் டார்ஜீலிங் கோடைகால தலைநகரம் என்று வழங்குகிறது.


டார்ஜீலிங் அங்குள்ள தேயிலை தொழிற்சாலைக்கும் டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே நிலையத்திற்கும் உலகப்புகழ் பெற்றதாகும். இது யுனெஸ்கோ அறிவித்த உலகப் பாரம்பரியமிக்க இடங்களுள் ஒன்றாகும். ஆங்கிலேயர்கள் மேம்படுத்திய ஒரு பகுதியில், கடந்த 19 ஆம் நூற்றாண்டில் இங்கு தேயிலை பயிரிட்டார்கள். அந்த பகுதியில் தேயிலை வளர்த்தவர்கள் கருப்பு தேயிலையினுடைய தனித்தன்மை வாய்ந்த கலப்பினம் மற்றும் நொதித்தல் முறை தொழில்நுட்பங்களை மேம்படுத்தினார்கள், இம்முறையிலான அநேக கலப்பினங்கள் உலகிலேயே மிகச்சிறந்தவையாக கருதப்படுகின்றன.[1] இங்குள்ள டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே இம்மாநிலத்தில் சமவெளிப்பகுதியில் அமைந்துள்ள நகரங்களை இணைக்கிறது. இது உலக பாரம்பரியம் மிக்க இடமாக 1999 ஆம் ஆண்டில் புகழ்பெற்றது. இந்தியாவில் இயங்கிவரும் சில பழங்காலத்து புகை வண்டிகளில் எஞ்சிய ஒரு புகை வண்டி இங்கு இன்றுமியங்கி வருவதை நாம் காணலாம். நீராவி தொடர்வண்டிகளுள் ஒன்று தற்பொழுதும் இங்கு இயங்கி வருகிறது.


டார்ஜீலிங்கில் பெரும்பாலான பொதுப் பள்ளிகள், பிரிட்டிஷ் முறை கல்வியை பின்பற்றுவதால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் அண்டை நாடுகளில் இருந்தும் மாணவர்களை ஈர்க்கிறது. கலிம்போன்ங்கின் அருகே இணைந்துள்ள முக்கிய மையமான இந்நகரம், 1980 ஆம் ஆண்டிலிருந்து கூர்காலேண்ட் என்னும் தனி மாநில கோரிக்கையை முன்வைத்துள்ளது, இருப்பினும் இந்த பிரிவினை இயக்கம் தன்னாட்சி மலைக்குழு அமைப்பு காரணமாக படிப்படியாக கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது. சமீப ஆண்டுகளில் இந்நகரம், சூழ்நிலை வள ஆதாரங்களைத் தடுக்கக்கூடிய வளர்ந்துவரும் சுற்றுலா போக்குவரத்து மற்றும் மோசமாக திட்டமிடும் நகர்மயமாக்கல் ஆகியவற்றின் தேவை அதிகரிப்பு காரணமாக அழியத்தக்க சூழலுக்கான அச்சுறுத்தலை கொண்டுள்ளது.



வரலாறு

மலைப்பக்கத்தில் ஓடுகளையுடைய கூரைகளைக் கொண்ட வீடுகள்
Darjeeling view, 1880

டார்ஜீலிங்கின் வரலாறானது வங்காளம், பூடான், சிக்கிம் நேபாளம் ஆகிய மாநிலங்களுடன் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவையாகும். 19 ஆம் நூற்றாண்டின் முன்பகுதி வரை, டார்ஜீலிங்கை சுற்றியுள்ள பகுதிகளை இடைவெளிவிட்டு வங்காளம், நேபாளம், சிக்கிம் ஆகிய பேரரசுகள் ஆண்டனர்,[2] லெப்சாவினுடைய சில கிராமங்களின் பரவலான மக்கள் இதன் குடிமக்களாக இருந்தனர்.[3]1828 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த அதிகாரி ஒருவர் சிக்கிம் செல்லும் வழியில் டார்ஜீலிங்கில் தங்கியதின் விளைவாக அவர் அந்தப்பகுதி பிரிட்டிஷ் சிப்பாய்களின் உடல்நலத்திற்கு உகந்த இடமாக இருக்கும் என முடிவு செய்தார்.[4][5] 1835 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய நிறுவனம் சிக்கிமினுடைய சோக்யாலில் இருந்து சிறுபகுதியை ஒப்பந்தம் மூலம் பெற்றது. ஆர்த்தர் கேம்பெல் எனும் மருத்துவர் கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் லியூட்டெனட் நேப்பியர் ஆகியோருடன் இணைந்து அந்தப்பகுதியில் ஒரு மலைவாழிடம் நிறுவ பொறுப்பேற்று கொண்டார், மற்றும் இப்பகுதியை முன்னேற்றுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெளிநாட்டிலிருந்து குடியேறிய விவசாயிகளை வெகுவாக கவர்ந்ததால் அவர்கள் அதன் பள்ளத்தாக்குகளில் விவசாயம் செய்து வணிகத்தை பெருக்கினர். அதன் விளைவாக 1835 மற்றும் 1849 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் டார்ஜீலிங்கின் மக்கள்தொகை நூறு மடங்காக உயர்ந்தது. 1852 ஆம் ஆண்டில் ஹில் கார்ப்ஸ் என்ற அமைப்பு கட்டளைகள் மற்றும் தொடர்புகளை நிர்வகித்தது. உடல்நல மையம், சந்தை சிறைச்சாலை ஆகியவற்றை கட்டினார்கள்.[5]


டார்ஜீலிங் பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின் பகுதியாக மாறிய சில ஆண்டுகளுக்கு பிறகு 1849 ஆம் ஆண்டில்,[4] சிக்கிம் மாநிலத்துடன் நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து640 சதுர மைல்கள் (1,700 km2) 1850 இல் சிக்கிமிடமிருந்து அதன் நிலப்பகுதியை பிரிட்டிஷ் தன்னுடன் இணைத்துக்கொண்டது.[5] 1864 ஆம் ஆண்டில் பூட்டானிய ஆட்சியாளர்களுடன் கையெழுத்தான உடன்படிக்கையைத் தொடர்ந்து மலைப்பகுதி முழுவதும் மற்றும் கலிம்போன்ங் ஆகியவை பிரிட்டிஷ்க்கு விட்டுகொடுத்தது. 1866 ஆம் ஆண்டில் பரப்பளவு சார்ந்து, டார்ஜீலிங் மாவட்டம் தற்பொழுது உள்ள வடிவத்தையும் அளவினையும் சார்ந்த கற்பிதத்தைப் பெற்றது.1,234 சதுர மைல்கள் (3,200 km2)[5] ஸ்காட்லாந்து சமயப்பரப்பாளர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை மக்களுக்கான பள்ளிகள், நல்வாழ்வு மையங்கள் ஆகியவற்றை அமைத்து, கல்விக்கு புகழ் பெற்ற இடப்பகுதியாக இதை வளர்த்தனர். 1881 ஆம் ஆண்டில் திறக்கப்பெற்ற டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே அப்பகுதியினுடைய வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தியது.[6] 1899 ஆம் ஆண்டில் டார்ஜீலிங்கானது மிகப்பெரிய நிலச்சரிவால் ஆட்டம் கண்டது (இது ”டார்ஜீலிங் அழிவுகள்” எனப்படுகிறது), இது அந்நகரம் கடுமையாக சேதமடையவும் மற்றும் அதன் மக்கள்தொகை வெகுவாக பாதிக்கவும் காரணமாக அமைந்தது.[7][8]


உயர்ந்த வட்டமான நடைமேடை மீது சில பேர் மட்டும் சுற்றி நிற்கக்கூடிய அளவிற்கான சதுரத்தூபி. பின்னணியில் மலைச்சிகரங்கள் காணலாம்.
Darjeeling War Memorial


பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், டார்ஜீலிங் முதலில் “வரைமுறையற்ற மாவட்டமாக” இருந்தது, மற்றும் பிரிட்டிஷ் இந்திய அரசின் குறைந்த பொருளாதார வளர்ச்சியுற்ற மாவட்டங்களுக்கு பொருந்தக்கூடிய நிர்வாகத்திட்டத்தினுடைய, பிரிட்டிஷ் இந்திய அரசின் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு நாட்டின் பிற பகுதிகள் தன்னிச்சையாக உட்பட்ட போதிலும் டார்ஜீலிங் அவற்றிற்கு உட்படாததாகவே விளங்கியது. பின்னர் 1919 ஆம் ஆண்டில், இப்பகுதியை “பிற்படுத்தப்பட்ட பகுதி” ஆக அறிவித்தது.[9]டார்ஜீலிங்கை பிரிட்டிஷ் ஆண்ட காலக்கட்டத்தில் அதன் மேல்தட்டு குடியினர், ஒவ்வொரு கோடைகாலத்திற்கும் டார்ஜீலிங்கிற்கு வந்தனர். இந்திய குடியுரிமையாளர்களான கல்கத்தாவின் துணை மாநிலங்களின் செலவந்தரான அரசர்கள் மற்றும் நில உரிமையாளர்களான ஜமீன்தார்கள் ஆகியோரும் டார்ஜீலிங்கிற்கு வருவது வெகுவாக அதிகரித்தது.[10]இந்நகரம் தொடர்ந்து சுற்றுலா தலமாக வளர்ச்சியடைந்து, ”மலைகளின் ராணி” என்று சிறப்பாக குறிப்பிடும்படி மாறியது.[11]இந்நகரம் தொலைவில் அமைந்ததாலும், குறைந்த மக்கள்தொகை காரணமாக இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வு நடக்கவில்லை. இருப்பினும், இது 1934 ஆம் ஆண்டில் வங்காளத்தின் கவர்னராக இருந்த, சர் ஜான் ஆண்டர்சன் என்பவர் மீது புரட்சியாளர்கள் மேற்கொண்ட படுகொலை முயற்சியில் தோல்வியைக் கண்டது.[12]

ஒரு பெண் காய்கறிகளினுடைய குவியல் இடையே அமர்ந்திருத்தல்.
A woman selling vegetables at a market in Darjeeling


1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, டார்ஜீலிங் மேற்கு வங்கம் மாநிலத்துடன் இணைந்தது. பின்னர் டார்ஜீலிங்கினுடைய மலை நகரங்களான குர்சியாங், கலிம்போன்ங் மற்றும் டெராய் பகுதியின் சிலபாகங்களை சேர்த்து டார்ஜீலிங் தனி மாவட்டமாக நிறுவப்பெற்றது. 1950 ஆம் ஆண்டில் சீன மக்கள் குடியரசு திபெத்தை தன்னுடன் சேர்த்துக்கொண்ட பிறகு, ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகள் டார்ஜீலிங் மாவட்டத்தில் வந்து வாழத்துவங்கினர். பல்வேறு இனம் சார்ந்த மக்கள்தொகை காரணமாக சமூக-பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்தன, மற்றும் 1980 ஆம் ஆண்டில் இன எல்லை சார்ந்து கூர்காலேண்ட் மற்றும் கம்டபூர் ஆகிய தனி மாநிலங்கள் உருவாக்குவதற்கான கோரிக்கையும் பரவலாக எழுந்தது.


பச்சை பின்னணியில் ஒரு செவ்வகக்கொடி, அதற்கு கீழே கிடைநிலையாக மூன்று மஞ்சள் கோடுகள், அதன் மேலே இடப்பக்கத்தில் மூன்று மஞ்சள் நட்சத்திரங்கள் முக்கோண வடிவில் உள்ளது, மற்றும் அதன் மேல் வலது மூலையில் மஞ்சள் நிறமுடைய வாள் உள்ளது.
The GNLF flag


இந்த சிக்கல்கள் கூர்கா தேசிய விடுதலை முன்னணி (GNLF) என்ற அமைப்பால் 40 நாள்கள் நடந்த போராட்டத்திற்கு பிறகு உச்சத்தை அடைந்தது, இக்காலத்தில் நகரில் நிகழ்ந்த வன்முறைகள், அம்மாநில அரசாங்கத்தை அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு இந்திய இராணுவத்தை அழைக்கும் நிலைக்கு தள்ளியது. சுபாஷ் கிஷ்சிங் என்பவரின் தலைமைப்பொறுப்பின் கீழ் டார்ஜீலிங் கூர்கா மலை அமைப்பு (DGHC) நிறுவப்பெற்றதால், அரசியல் நெருக்கடிகள் வெகுவாக குறைந்தன. இந்த DGHC என்கிற அமைப்புக்கு மாவட்டத்தை ஆளக்கூடிய பகுதி தன்னாட்சி அதிகாரங்கள் அளிக்கப்பெற்றன. அதற்கு பிறகு இதன் பெயர் ”டார்ஜீலிங் கூர்கா தன்னாட்சி மலை அமைப்பு” (DGAHC) என வழங்கியது. தற்பொழுது டார்ஜீலிங் அமைதியாக இருந்தபோதிலும், கூர்கா ஜன்முக்தி மோர்சா என்கிற அரசியல் கட்சியின் ஆதரவால், தனி மாநிலம் குறித்த சிக்கல் தற்பொழுதும் சுணக்கமாக காணப்படுகிறது.[13]


புவியியல்

தொலைவிலிருந்து பார்க்கும் கோணத்தில் பனியானது மலைச்சிகரங்களை போர்த்தியுள்ளது, அவற்றின் முன்னணியில் மலைக்காடுகள் உள்ளது.
Mount Kanchenjunga and Darjeeling seen from Tiger Hill
தொலைவிலிருந்து பார்க்கும் கோணத்தில் பனியானது மலைச்சிகரங்களை போர்த்தியுள்ளது.
Mount Kanchanjangha as viewed from Darjeeling


டார்ஜீலிங் கூஹும் என்ற இடத்திலிருந்து தெற்குநோக்கி தொடர்ந்து அமைந்துள்ள, டார்ஜீலிங்-ஜலப்ஹார் மலைத்தொடரின் மீதுள்ள டார்ஜிலிங் இமலாயன் மலைப்பகுதியின் ஏற்றத்தில் அமைந்துள்ளது.6,710 அடி (2,050 m)[14]இந்த மலைத்தொடரானது கடப்பஹர் மற்றும் ஜல்ப்பஹர் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு படுத்துள்ளது போல் Y-வடிவில் அமைந்துள்ளது. இதன் இரு கைகளும் அப்சர்வேட்டரி மலையினுடைய வடக்கு நோக்கி விரிவடைந்து காணப்படுகிறது. இதன் வட-கிழக்கு கைப்பகுதியின் சரிவுகள் திடீரென்று லெபான்ங் கிளைக்குன்றில் முடிவடைகிறது, இதன் வட-மேற்கு கைப்பகுதி வடக்கு முனை வழியாக கடந்து பள்ளத்தாக்கின் அருகில் உள்ள டக்வெர் தேயிலை தோட்டத்தில் முடிவடைகிறது.[2]


டார்ஜீலிங் சதார் உட்பிரிவின் முக்கிய நகரமாகவும், மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. டார்ஜீலிங் மலைகள் மஹாபாரத் மலைத்தொடர் அல்லது லெஸ்ஸர் இமாலயாவின் பகுதியாக அமைந்துள்ளது. இங்குள்ள மணலின் தன்மையானது முக்கியமாக மணற்கற்கள் மற்றும் உருள்திரள்கள் கலந்த முறையில் காணப்படுகிறது, இது இமாலயத்தின் பெரிய மலைத்தொடரினுடைய முகடுகளிலிருந்து சிதறிய துண்டுகளாலும் மற்றும் உறைந்த நிலையிலும் காணப்படுகிறது. இருப்பினும், இந்த மண்ணானது பெரும்பாலும் மோசமான தொகுப்பாகவும் (மழைக்காலங்களில் நீரை தேக்கிவைக்க முடியாத ஊடுருவும் தன்மையுடைய வண்டல்களாகும்) மற்றும் விவசாயத்திற்கு பொருந்தாத தன்மையுடையதாகவும் கருதப்படுகிறது. இந்த பகுதியிலுள்ள செங்குத்தான மலைச்சரிவுகளுடன் இளகிய தன்மையுடைய மண்ல்மேடுகள், பருவமழை காலங்களில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுக்கு காரணமாகிறது. இந்திய மதிப்பீட்டுச் செயலகத்தின் கருத்தை பொறுத்த அளவில், இந்த நகரம் நில அதிர்ச்சி மண்டலம் IV இன் கீழ் வருகிறது, (இந்த முதல் வரையிலான அளவை நிலநடுக்கம் நிகழ்கின்ற வாய்ப்பு அதிகமான நிலையை குறிக்கிறது) இந்திய மற்றும் இரஷ்யன் நிலவியல் பலகைகளினுடைய அருகமைந்த குவிய எல்லையை இது கொண்டுள்ளதால் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த மலைகள் உயர்ந்த மலைசிகரங்களையும், பனி உறைந்த இமாலயன் மலைத்தொடர்களையும் தழுவியிருக்கிறது, தொலைவிலுள்ளதை காண்பதற்காக நகரத்தின் மேலே கோபுரம் உள்ளது. உலகின் மிகப்புகழ் வாய்ந்த மூன்றாவது மிக உயரமான மலைச்சிகரமான கன்ஜென்ஜங்காவை (8,598 மீ அல்லது 28,208 அடி) இங்கிருந்து பார்க்க முடியும். பகல்வேளையில் மேகங்களற்ற நேரத்தில், நேபாளத்தின் எவரெஸ்ட் மலை29,035 அடி (8,850 m)யையும் பார்க்க முடியும்.[15]


இப்பகுதியில் பல தேயிலை தோட்டங்கள் உள்ளன. டார்ஜீலிங் நகரம், அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெருகிவரும் மரஎரிபொருள், மரக்கட்டைகள் தேவை காரணமாகவும், வாகனப்போக்குவரத்து அதிகரித்ததன் காரணமாக ஏற்படும் காற்று மாசடைதல் மூலமும் காடழித்தல் நிலையை சந்தித்து வருகின்றன.[16] டார்ஜீலிங்கை சுற்றியுள்ள தாவரவளங்களில் மிதவெப்ப, இலையுதிர் காடுகள் உள்ளிட்டவற்றின் நெட்டிலிங்கம், பிர்ச், கருவாலிமரம் மற்றும் என்றும் பசுமைமாறா இலம்,ஈர ஆல்பைன் காலநிலையினை உடைய ஊசியிலை மரங்கள் ஆகியவை அடங்கும். அடர்த்தியான பசுமைமாறா காடுகள் இந்நகரத்தை சுற்றிலும் அமைந்துள்ளது, இங்கு பல்வேறு வகையிலான அரிய பகட்டு வண்ண மலர்களும் காணப்படுகிறது. லாயிட்ஸ் தாவரவியல் தோட்டத்தில் பொதுவான மற்றும் அரிய வகை தாவரவளங்கள் பாதுகாக்கப்படுகின்றன, இங்குள்ள பத்மஜா நாயுடு இமாலயன் விலங்கியல் பூங்கா அழியக்கூடிய நிலையிலுள்ள இமாலய உயிரினங்களை பாதுகாப்பதிலும், இனவிருத்தி செய்தலிலும் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது.[17]

காலநிலை

சில மனிதர்கள் ஈரமான சாலையில் குடையுடன் நடந்து செல்கின்றனர்.தெருவின் ஏதோ ஒரு பக்கத்திலுள்ள கடைகள்.
A Darjeeling street, taken in heavy rain


டார்ஜீலிங்கின் மிதவெப்ப காலநிலையானது ஐந்து முற்றிலும் வேறுபட்ட காலநிலைகளைக் கொண்டுள்ளது அவையாவன: இளவேனில், கோடை, இலையுதிர், குளிர் மற்றும் மழைக்காலங்கள் என்பனவாகும். கோடைகாலம் (மே முதல் ஜூன் வரை நீடித்திருக்கும்) மிகக்குறைவான காலப்பகுதியாகும், இக்காலக்கட்டத்தில் அரிதாக கடக்கக்கூடிய அதிகபட்ச வெப்பநிலை 25 °C (77 °F) ஆகும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலம் செறிவான கனமழைக்குரிய பண்பைக்கொண்டதாகும். இதன் காரணமாக அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள், டார்ஜீலிங்கை நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டித்துவிடுகிறது. குளிர்காலத்தில் மிதமான வெப்பநிலை காணப்படுகிறது5–7 °C (41–45 °F). எப்பொழுதாவது வெப்பநிலையானது உறைநிலைக்கு கீழே வரும்; பனிப்பொழிவு அரிதாக காணப்படும். மழை மற்றும் குளிர்காலங்களில், டார்ஜீலிங் அடிக்கடி உறைபனி மற்றும் மூடுபனி போர்த்தியது போல் காணப்படும். இதன் ஆண்டு சராசரி வெப்பநிலையானது12 °C (54 °F); இதன் மாத சராசரி வெப்பநிலைகளில் இருந்து பெறப்படுகிறது5–17 °C (41–63 °F).[18] இதன் சராசரி ஆண்டு வீழ்படிவு 281.8செ.மீ. (110.9 அங்குலம்) ஆகும், மிக அதிகபட்சமான வீழ்படிவு ஜூலை மாதத்தில் பதிவானது (75.3 செ.மீ. அல்லது 29.6 அங்குலம்) ஆகும்.[18]


நகர நிர்வாகம்

தெரு மக்கள் கூட்டத்துடன் நிறைந்து உள்ளது, நீலம் மற்றும் பச்சை தோரணங்கள் தெருவின் குறுக்கு நெடுக்காக கட்டப்பட்டுள்ளது மற்றும் விளம்பர பதாகைகளால் கட்டிடங்கள் ஒப்பனை செய்யப்பட்டுள்ளது.
A political rally taking place in Darjeeling


டார்ஜீலிங் நகரமானது டார்ஜீலிங் நகராட்சியையும், அதன் பட்டபாங்க் தேயிலை தோட்டத்தையும் ஒருங்கே கொண்டுள்ளது.[19]1850 ஆம் ஆண்டில் நிறுவிய, டார்ஜீலிங் நகராட்சி அந்நகரம் சார்ந்த பகுதிகளின்10.57 km2 (4.08 sq mi) நகர நிர்வாகத்தை பாதுகாத்து வருகிறது.[19] இந்த நகராட்சி டார்ஜீலிங் நகரத்தினுடைய 32 வட்டங்களின் ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுத்த நகர்மன்ற உறுப்பினர்களையும் அத்துடன் மாநில அரசு தேர்ந்தெடுத்த சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. நகராட்சியின் மன்றஉறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களிலிருந்து ஒருவரை அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கின்றனர்;[2] இந்த அவைத்தலைவரே நகராட்சியின் செயற்குழு தலைவராகவும் இருப்பார். கூர்கா தேசிய விடுதலை முன்னணி (GNLF) தற்பொழுது நகராட்சி அதிகாரத்தில் உள்ளது. டார்ஜீலிங் மாவட்டத்தினுடைய கூர்கா-ஆதிக்கம் நிறைந்த மலைப்பகுதிகள் அனைத்தின் அதிகார எல்லையும், 1988 ஆம் ஆண்டிலிருந்து அப்பொழுது உருவான டார்ஜீலிங் கூர்கா தன்னாட்சி மலை அமைப்பினுடைய வரம்பின் கீழ் அமைந்துள்ளது. DGHC ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மலைப்பகுதியின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட சில அலுவல்களை நிர்வகிக்கக்கூடிய அதிகாரம் வழங்கப்பெற்றுள்ளது. இந்த நகரம் டார்ஜீலிங் மக்களவை தொகுதியுடன் இணைந்துள்ளது மற்றும் இங்கிருந்து ஒரு உறுப்பினர் இந்தியப் பாரளுமன்றத்தின் மக்களவைக்கு (கீழ் அவை) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[20]

இங்கிருந்து மேற்குவங்க மாநில சட்டப்பேரவையின், விதான் சபைக்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஜஸ்வந்த் சிங் வெற்றிபெற்றார், அதற்கு முன்பாக 2006 தேர்தலில் மாநில சட்டசபைக்கான இடத்தை GNLF வெற்றி பெற்றது. டார்ஜீலிங் நகரம் மாவட்ட காவல்துறையின் (இது மாநில காவல்துறையின் ஒரு பகுதியாகும்) அதிகார வரம்பின் கீழ் அமைந்துள்ளது; ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் நகரத்தின் பாதுகாப்பு மற்றும் சட்ட அலுவல்களை மேற்பார்வையிடுகிறார். டார்ஜீலிங் நகராட்சி பகுதியின் இரண்டு காவல்நிலையங்கள் டார்ஜீலிங் மற்றும் ஜோர்பன்களோ ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.[21]

பிற பயனுள்ள சேவைகள்

மலைப்பக்கத்தில் உள்ள சில வீடுகள், ஒரு நீர் கால்வாயானது மலையின் அடிவாரம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.
A sewer running behind houses


டார்ஜீலிங்கின் பெரும்பான்மையான நீர் தேவையை இயற்கை நீர்ஊற்றுகள் வழங்குகின்றன. இந்நீரானது சென்சால் ஏரியில் (நகரத்திலிருந்து 10 கி.மீ இல் அல்லது 6.2 மைல்கள் (10.0 km) தென்கிழக்கில்) சேமிக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் நகரத்திற்கு வழங்கப்படுகிறது. வறட்சியான காலங்களில், நீரூற்றுக்களின் நீர் பற்றாக்குறையாக இருக்கும் பொழுது, அருகிலுள்ள சிறிய கோன்ங் கோலா என்னும் வற்றாத நீரோடையிலிருந்து நீரானது குழாய்கள் மூலம் உறிஞ்சப்பெற்று வழங்கப்படுகிறது. இருப்பினும் நீர்வழங்கலுக்கும் மற்றும் அதன் தேவைக்கும் இடையே ஒரு நிதானமான இடைவெளி நிலவிவருகிறது; இந்நகரத்தினுடைய 50% குடியிருப்புகள் நகராட்சி நீர்வழங்கல் முறையில் இணைந்துள்ளன.[2] இந்நகரம் பாதாளச்சாக்கடை திட்டத்தின் மூலம் வீடுகளிலிருந்து பெறப்படும் கழிவுகள் மற்றும் ஐம்பது சமூக கழிப்பிடங்களின் கழிவுகளை சேகரிக்கின்றது. இக்கழிவுகள் பிறகு ஆறு மையக் கழிவுதொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு இறுதியாக ஜோராஸ் (நீர்வழிகள்) என்னும் இயற்கை நீர்நிலை மூலமாக வெளியேற்றப்படுகிறது; சாலையோர வடிகால்கள் மூலமும் கழிவுகள் மற்றும் அசுத்தநீர் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. டார்ஜீலிங் நகராட்சி தினமும் 50 டன்கள் (110,200 lb) திடக்கழிவுகளைப் பெற்று, அவற்றை அருகிலுள்ள அப்புறப்படுத்தும் தளங்கள் மூலம் வெளியேற்றுகிறது.[2]


மின்சாரம் மேற்குவங்க மாநில மின்வாரியத்தால் வழங்கப்படுகிறது, மற்றும் மேற்குவங்க தீயணைப்பு துறை நகரத்திற்கான அவசரகால சேவைகளை வழங்கிவருகிறது.

இந்நகரம் அடிக்கடி மின் தடையாலும் மற்றும் நிலையில்லாத மின்னழுத்தத்தாலும் பாதிக்கப்படுகிறது, இதனால் அநேக வீடுகளில் மின்னழுத்த நிலைப்படுத்தி பரவலாக பயன்படுத்தப்படுகிறது.  பெரும்பாலும் அனைத்து துவக்கப்பள்ளிகளும் தற்பொழுது டார்ஜீலிங் கூர்கா தன்னாட்சி மலை அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. நகராட்சியை சுற்றிலும் உள்ள படிவழிகள் உள்ளிட்ட அனைத்து வகையான சாலைகளின் மொத்த நீளமும் நகராட்சியுடன் இணைந்துள்ளது;90 km (56 mi) இவற்றை நகராட்சி நிர்வகிக்கின்றது.[2]


பொருளாதாரம்

மலைபக்கத்தில் படிமுறை வரிசையாக வளர்ந்துள்ள புதர்கள்.
Darjeeling Tea Plantation


டார்ஜீலிங்கின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு பெறும் இரு துறைகளாவன சுற்றுலா மற்றும் தேயிலை தொழிற்சாலை ஆகியனவாகும். டார்ஜீலிங் தேயிலையானது அதன் கருப்பு தேயிலை காரணமாக பரவலான புகழ்பெற்று விளங்குகிறது,[1] குறிப்பாக யூ.கே மற்றும் முந்தைய பிரிட்டிஷ் பேரரசை உருவாக்கிய நாடுகளில் சிறப்பாக கவனத்தில் கொள்ளப்படுகின்றது. இங்குள்ள தேயிலை தொழிலானது சமீப ஆண்டுகளில் இந்தியாவின் பிற பகுதிகளான நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து தயாரிக்கப்படும் தேயிலை காரணமாக போட்டியை சந்திக்க வேண்டியுள்ளது.[22] பரவலாகக் காணப்படும் தொழிலாளர் சிக்கல்கள், தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் மற்றும் தேயிலை தோட்டங்கள் மூடப்படுதல் ஆகியவை முதலீடு மற்றும் உற்பத்தியை வெகுவாக பாதிக்கின்றன.[23] பல்வேறு தேயிலை தொழிற்சாலைகள் தொழிலாளர் கூட்டுறவு முறையில் இயங்கிக் கொண்டிருந்தாலும், எஞ்சியவை சுற்றுலாப்பயணிகளின் உறைவிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.[23] தேயிலை தோட்டங்களில் 60% க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெண்களாக இருக்கின்றனர்.


இந்த மாவட்டத்தினுடைய காடுகள் மற்றும் பிற இயற்கை வளங்கள் பெருகிவரும் மக்கள்தொகை காரணமாக வெகுவாக பாதிக்கப்படுகின்றன.[19] சுதந்திரத்திற்கு பிறகு இந்நகரம் கல்வி, தொடர்புத்துறை மற்றும் விவசாயம் ஆகியவற்றில் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது, குறிப்பாக விவசாயத்தில் உருளைக்கிழங்கு, ஏலக்காய், இஞ்சி மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. நகரத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கான வாழ்வாதாரத்தின் முக்கிய வழியாக படிமுறை சரிவுகளில் பயிரிடுதல் உள்ளது மற்றும் இதன் மூலமாகவும் நகரத்திற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்படுகிறது.[சான்று தேவை]


கோடை மற்றும் இளவேனிற் காலங்கள் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த புகழ்பெற்றதாகும், இதன்மூலம் அநேக டார்ஜீலிங் மக்கள் நேரிடையாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர், பலர் உணவுவிடுதிகளை சொந்தமாகவோ வைத்திருக்கவோ அல்லது அதில் பணியாற்றவோ செய்கின்றனர். அநேக மக்கள் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் அதன் வழிகாட்டிகளாக பணியாற்றி பொருளீட்டி வாழ்கின்றனர்.[சான்று தேவை] டார்ஜீலிங் பாலிவுட் மற்றும் பெங்காலி திரைப்படங்களுக்கான திரைப்படத்தளமாகவும் புகழ்பெற்றுள்ளது; அங்கு படமாக்கப்பட்ட சில திரைப்படங்களாவன; ஆராதனா (1969) என்னும் படத்தின் சிறப்பான பாடலாகிய மேரே சப்னோ கி ராணி என்னும் பாடல் ராஜேஷ் கண்ணா மற்றும் ஷர்மிளா தாகூர் ஆகியோர் நடிக்க டார்ஜீலிங் இமாலயன் இரயில்வேயில் படமாக்கப்பட்டது; சத்யஜித்ரேவும் அவரது படமான கன்சென்ஜுங்காவுக்காக (1962) இங்கு படப்பிடிப்பு நடத்தியுள்ளார், அவரது ’ஃபெலுடா தொடர்கள்’, கதை, டார்ஜிலிங் ஜோம்ஜோமாட் (டார்ஜிலிங்கின் ராஸல் டாஸல்) ஆகியவற்றின் படப்பிடிப்பும் இந்நகரத்தில் நடத்தப்பெற்றன; மற்றும் மிகச் சமீப காலத்தில் ஷாருக்கானை நட்சத்திரமாக கொண்ட மே ஹூ நா என்ற திரைப்படமும் இங்கு படமாக்கப்பட்டது. மாவட்ட தலைநகரான டார்ஜிலிங்கில் பலர் அரசு அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். பொருளாதாரத்திற்கான சிறிய பங்களிப்பானது வங்காளம், சிக்கிம், திபெத் ஆகியவற்றினுடைய பழமையான கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் மூலம் கிடைக்கிறது.[சான்று தேவை]


போக்குவரத்து

ஒரு இரயில், நீராவியால் இழுக்கப்படும் தொடர்வண்டி, இருபுறமும் கட்டிடங்கள் வரிசையாக உள்ள சாலையின் அருகே ஓடிக்கொண்டிருக்கிறது, சில மனிதர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர்.
The "Toy Train" approaching Darjeeling


சிலுகுரி என்னும் இடத்திலிருந்து டார்ஜீலிங் நகரத்தின் 50 மைல்கள் (80 கி.மீ) தொலைவைடார்ஜீலிங் இமாலயன் இரயில்வே (”பொம்மை இரயில்” என்னும் புனைபெயர் கொண்டது) மூலம் அடையமுடியும், அல்லது இரயில் பாதையை தொடர்ந்து வரும் ஹில் கார்ட் சாலை (தேசிய நெடுஞ்சாலை 55) வழியாகவும் செல்லலாம். டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே ஒரு 60 cm (24 அங்) குற்றகலப்பாதை இரயில்வே ஆகும். இது 1999 இல் யுனெஸ்கோவால் உலக பாரம்பரியம் மிக்க இடம் என அறிவிக்கப்பட்டுள்ளது, உலகிலேயே இந்த பெருமையை பெற்ற இரண்டாவது இரயில்வேயாக இதுமட்டுமே விளங்குகின்றது.[6] முறையான பேருந்து சேவைகள் மற்றும் வாடகை வண்டிகள் ஆகியவை டார்ஜீலிங்குடன் சிலிகுரி மற்றும் அதன் அருகமைந்த நகரங்களான குர்சியாங், கலிம்போன்ங், மற்றும் கங்டாக் ஆகிய நகரங்களை இணைக்கிறது.

லேண்ட் ரோவர் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள், அப்பகுதியின் செங்குத்தான சரிவுகளில் பயணிக்க எளிமையாக இருப்பதால் போக்குவரத்துக்கு புகழ்பெற்றவையாக உள்ளன. இருப்பினும், மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவுகள் காரணமாக சாலை மற்றும் இரயில்பாதை தொடர்புகள் அடிக்கடி இடையூறுக்கு உள்ளாகின்றன. டார்ஜீலிங்கிற்கு அருகமைந்த சிலுகுரிக்கு, மிக அருகாமையிலேயே பாக்டோரா விமானநிலையம் உள்ளது.93 km (58 mi) இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ் மற்றும் கிங்ஃபிஷர் ரெட் ஆகிய மூன்று முக்கிய விமான சேவை நிறுவனங்கள் டார்ஜீலிங்குடன் டெல்லி, கல்கத்தா மற்றும் கௌஹாத்தி ஆகியவற்றை இணைக்கிறது. இதன் அருகமைந்த மிகப்பெரிய இரயில்நிலையம் நியூ ஜல்பைகுரி இரயில்நிலையம் ஆகும், இது பெரும்பாலும் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. நகரத்துக்குள் உள்ள இடங்களுக்கு, வழக்கமாக மக்கள் நடந்தே செல்கின்றனர். வசிப்பிடங்களில் உள்ளோர் குறைந்த தூர பயணத்திற்கு மிதிவண்டி, இருசக்கர வாகனம் மற்றும் வாடகை கார்கள் மூலம் பயணிக்கின்றனர். டார்ஜீலிங் கயிற்றுப்பாதை 1968 முதல் 2003 வரை இயங்கிவந்தது, ஒரு விபத்தில் நடந்த நான்கு பேரின் உயிரிழப்புக்கு பிறகு இது நிறுத்தப்பட்டது.[24][25]


மக்கட்தொகை

மலைப்பக்கமுள்ள சில வீடுகள், அந்த மலையின் மேலே சில மரங்கள் வளர்ந்துள்ளன.
Concrete/brick and timber houses in the town


டார்ஜீலிங் நகர்ப்புற தொகுதியானது (இது பட்டபோங் தேயிலை தோட்டத்தையும் உள்ளடக்கியதாகும்), 109,163 மக்கள்தொகை கொண்ட நிலப்பரப்பாகும், இதன் நகராட்சி பகுதியில் உள்ள மக்கள் தொகை 107,530 ஆகும். இந்நகரத்திற்கு ஒவ்வொருநாளும் வந்து செல்லும் மக்கள், குறிப்பாக சுற்றுலா பயணிகளை உள்ளடக்கிய மக்கள்தொகை சராசரியாக 20,500 - 30,000 ஆக இருக்கிறது.[2] இதன் நகராட்சி பகுதியின் மக்கள்தொகை அடர்த்தி ஒரு கி.மீ2 பரப்பளவுக்கு 10,173 பேர் ஆகும்.[19] இதன் பாலினவிகிதம் 1000 ஆண்களுக்கு 1,017 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது,[19] இது தேசத்தின் சராசரி விகிதமான 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்கிற விகிதத்தை விட உயர்ந்ததாகும்.[26] இங்குள்ள மிகப்பெரிய சமயங்களாக முறையே இந்து, பௌத்தம் மற்றும் கிறித்துவம் ஆகிய சமயங்கள் உள்ளன.[27] மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக நேபாளத்தை பின்னணியாகக் கொண்ட கூர்கா இனத்தினர் உள்ளனர். உள்நாட்டு இனக்குழுக்களில் டமாங்குகள், லெப்சாக்கள், பூட்டானியர்கள், ஷெர்பாக்கள் மற்றும் நியூவர்கள் ஆகியோர் அடங்குவர்.

டார்ஜீலிங்கில் வசிக்கக்கூடிய பிற சமூகத்தினர்களில் மார்வாரிகள், ஆங்கிலோ-இந்தியர்கள், சீனர்கள், பீஹாரிகள், திபெத்தியர்கள் மற்றும் பெங்காலிகள் ஆகியோர் அடங்குவர்.
பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள் நேபாளி, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகியனவாகும்.[28]


டார்ஜீலிங் கடந்த நூற்றாண்டில், குறிப்பாக 1970 களில் கணிசமான மக்கள்தொகை வளர்ச்சியை அடைந்துள்ளது.

1990 களில் இதன் ஆண்டு வளர்ச்சி விகிதம் 45% ஆக உயர்ந்தது, இது தேசிய, மாநில, மாவட்ட சராசரி விகிதங்களை விட அதிகமானதாகும்.[2] இது குடியேற்ற நகரமாக வடிவமைக்கப்படும்பொழுது 10,000 பேர்களை மட்டுமே மக்கள்தொகையாக கொள்வதற்குரிய நகரமாக வடிவமைக்கப்பட்டது மற்றும் இதன் தொடர்சியான வளர்ச்சியானது பரந்த உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.  இப்பகுதியானது நில அமைப்பு வரையறைகள் மற்றும் நிலையற்ற இயற்கைசூழல் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகொண்டுள்ளதால் சுற்றுச்சூழல் சிக்கல்களால் பாதிப்படையக்கூடிய இடமாக உள்ளது.[2] இப்பகுதியை சுற்றியுள்ள மலைகள் தம் பண்பிழத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள், சுற்றுலாத் தலமாக விளங்கும் டார்ஜீலிங்கின் அழகை வெகுவாக பாதிக்கின்றது.[16] 


கலாச்சாரம்

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு சிறிய சிவுப்பு கூரை கொண்ட வெள்ளைக்கோவிலில் வழிபடுகின்றனர்.கோவிலின் முன்பாக பல வண்ணக்கொடிகள் உள்ளன, தோரணங்கள் அக்கோவிலின் இருமருங்கிலும் குறுக்காக கட்டப்பட்டுள்ளன.
Colourful flags with Buddhist text around a Hindu temple.
நான்கு மாடிக்கட்டிடத்தின் வலப்பக்கமுள்ள ஒரு இரண்டு மாடிக்கட்டிடம்.ஒரு கூடைபந்து மைதானம் முன்னணியில் உள்ளது மற்றும் அதன் ஒரு பக்கத்தில் ஒரு சோடி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.பனிமூட்டம் நிறைந்த சூழலின், பின்னணியில் மரங்கள் உள்ளன.
Tibetan Refugee Self Help Center


முக்கிய சமய விழாக்களாக தீபாவளி, கிறிஸ்துமஸ், தசரா, ஹோலி போன்றவை உள்ளன, இவை தவிர்த்து பல்வேறு இனஞ்சார்ந்த மக்களால் தனித்துவம் வாய்ந்த உள்ளூர் விழாக்களும் நகரத்தில் கொண்டாடப்படுகின்றன.

லெப்சாக்களும், பூட்டானியர்களும் ஜனவரி மாதத்தில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர், திபெத்தியர்கள் தங்கள் புது வருடத்தை (லோசர் ) ”பேயாட்டாம்” என்கிற ஆட்டத்துடன் பிப்ரவரி-மார்ச்சில் கொண்டாடுகின்றனர். மகா சங்கராந்தி , ராம நவமி , சோட்ரூல் டுயுசென் , புத்த ஜெயந்தி , தலாய்லாமாவின் பிறந்தநாள் மற்றும் டென்டாங் லகோ ரம்ஃபாட்  போன்ற பிற விழாக்களுள், சில உள்ளூர் கலாச்சாரத்தோடு பொருந்தக்கூடியதாகவும் மற்றும் சில விழாக்கள் இந்தியாவின் பிற பகுதிகளாகிய நேபாளம், பூடான் மற்றும் திபெத்தியர்களின் கலாச்சாரத்தோடு தொடர்புடைய விழாக்களாகவும் உள்ளன. 
டார்ஜீலிங் களியாட்டம் என்னும் விழாவானது டார்ஜீலிங் முனைப்பாளர்கள் என்றறியப்படும் குடியுரிமை சமூக இயக்கத்தால் துவங்கப்பெற்றது, ஒவ்வொரு ஆண்டின் குளிர்காலத்திலும் நடைபெறும் பத்து நாள் கொண்டாட்டங்களில் டார்ஜீலிங் மலைகளின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் உயர்தரமான இசை ஆகியவற்றினை மையமாகக் கொண்ட உயர்தரமான சித்திரப்படங்களும் இடம்பெறும்.[29]  


டார்ஜீலிங்கின் புகழ்பெற்ற உணவு மோமோ ஆகும், இது பன்றியிறைச்சி,மாட்டிறைச்சி மற்றும் காய்கறிகள் உள்ளடக்கிய பூரணத்தை பிசைந்த மாவு கொண்டு மூடி நீராவியில் வேகவைத்து கொழுக்கட்டை போன்று சமைக்கப்படுவதாகும் மற்றும் இது நீர்போன்ற சூப்புடன் பரிமாறப்படுகிறது. முன்பே சமைக்கப்பெற்ற நூடுல்ஸை கொண்டு அடைக்கப்பட்ட சிற்றுண்டி வகையான வை-வை பொதியிலிருந்து அப்படியே சாப்பிடுவதற்கும் அல்லது சூப் வடிவில் சாப்பிடுவதற்கும் உரியதாகும். சுர்பீ எனப்படும் ஒருவகை கடினமான பாலடைக்கட்டியானது பசுக்கள் அல்லது யாக் மாடுகளின் பாலிலிருந்து உருவாக்கப்படுகிறது, இது சிலபொழுது மென்று தின்பதற்கு உகந்தது. துக்பா என்றழைக்கப்படும் நூடுல்ஸ் மாதிரியான உணவு, சூப் வடிவில் பரிமாறப்படுவதும் டார்ஜீலிங்கில் புகழ்பெற்றதும் ஆகும். "ஆலு டம்" என்பது மிகப்புகழ்பெற்ற சிற்றுண்டி வகையாகும், இது உருளைக்கிழங்கினை வேகவைத்து மிளாகாய் தூள், உணபதற்குரிய நிறம், மஞ்சள்தூள் ஆகியவற்றினை சேர்த்து வளமூட்டப்பெற்று சாறுடன் கூடிய கெட்டியான குழம்பாகவோ அல்லது சில நேரம் நீர்த்ததாகவோ சமைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் ஆச்சார் மற்றும் உருளைகிழங்கு வற்றல் அல்லது பிற சிற்றுண்டிகளுடன் சாப்பிடப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு வகைகளையுடைய உணவினை வழங்குவதற்கென்றே இந்திய, பன்னாட்டளவிலான மற்றும் சீன சமையல் பாரம்பரியமுடைய உணவுவிடுதிகள் மிகுதியான எண்ணிக்கையில் இங்கு அமைந்துள்ளன.

புகழ்பெற்ற டார்ஜீலிங் தேயிலை தோட்டங்களில் இருந்து சேகரிக்கப்பெற்று தயாரிக்கப்படும் தேயிலை மிகச்சிறந்த பானம் ஆகும். அதுபோல காபியும் சிறந்த பானமாகும்.  ”ரக்‌ஷி” மற்றும் ஜஹாத் மற்றும் டோங்பா” ஆகியவைகளும் மக்களால் விரும்பப்படும் பானங்களாகும், அது போலவே ஷாங் பானமும் விரும்பப்படுகிறது, இவை அனைத்தும் உள்ளூரிலேயே கிடைக்கக்கூடிய பானங்களாகும். ஷாங், சாமை என்னும் தினையிலிருந்து உருவாக்கப்படும்  உள்ளூர் பீர் வகையாகும்.


டார்ஜீலிங்கின் பெரும்பாலான கட்டிடடங்கள் குடியேற்ற கட்டிடக்கலை பண்புகளைக் கொண்டுள்ளது; பெரும்பாலான மோக் தியோடர் குடியிருப்புகள், கோதிக் தேவாலயங்கள், ராஜ்பவன் (ஆளுநர் மாளிகை), தோட்டக்காரர்கள் மன்றம் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இவற்றிற்கு உதாரணங்களாய் திகழ்கின்றன.

புத்த மடங்கள் பகோடா முறை கட்டிடக்கலையை பிரதிபலிக்கின்றன. டார்ஜீலிங் இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ஆர்வலர்களுக்கான மதிப்புமிக்க இடமாகவும் , இசை மையமாகவும் குறிப்பிடப்படுகிறது. 
இங்கு வாழும் பொதுமக்களின் பொதுவான பொழுதுபோக்காக  பாடுதல் மற்றும் இசைக்கருவிகளை இசைத்தல் ஆகியவை அமைந்துள்ளது, இவர்கள் தங்கள் கலாச்சார வாழ்வில் இசையின் பங்கு மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் அடைகின்றனர்.[30]


கல்வி

டார்ஜீலிங்கில் உள்ள பள்ளிகள் மாநில அரசினாலோ அல்லது தனியாராலோ மற்றும் சமய நிறுவனங்கள் மூலமாகவோ இயக்கப்படுவனவாக உள்ளன.

பள்ளிகளில் முக்கிய பயிற்று மொழிகளாக ஆங்கிலம் மற்றும் நேபாளி மொழிகள் உள்ளன, அவற்றுடன் தேசிய மொழியான இந்தியும் அதிகாரபூர்வ மாநில மொழியான பெங்காலியும் கூட வலியுறுத்தப்பட்டுள்ளது.  இந்த பள்ளிகள் ICSE, CBSE ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடனோ  அல்லது மேற்குவங்க இடைநிலைக்கல்வி வாரியத்துடனோ இணைக்கப்பெற்றுள்ளன. பிரிட்டிஷினருக்கான இந்தியாவின் கோடைகால பாதுகாப்பிடமாக டார்ஜீலிங் விளங்கியதால், விரைவிலேயே டார்ஜிலிங் ஈடன், ஹார்ரோவ் மற்றும் ருக்பி போன்ற பள்ளிகளை மாதிரியாகக்கொண்ட பொதுப்பள்ளிகள் நிறுவுவதற்கான இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது, அது போன்றே பள்ளிகளும் அங்கு நிறுவப்பெற்று அவற்றில் பிரிட்டிஷ் அதிகாரிகளின் குழந்தைகள் பெறுவதற்குரிய தனிச்சிறப்பான கல்வியும் வழங்கப்பட்டது. 
இங்குள்ள கல்வி நிறுவனங்களான புனித. ஜோசப் கல்லூரி (பள்ளித் துறை), லாரிடோ கான்வென்ட், புனித பால்ஸ் பள்ளி மற்றும் மவுண்ட் ஹார்மன் பள்ளி ஆகியவை தலைசிறந்த கல்வியளிக்கக்கூடிய புகழ்பெற்ற மையங்களாகும்.[31] டார்ஜீலிங்கில் உள்ள தங்கும் வசதியுடன் கூடிய மூன்று கல்லூரிகளான—புனித ஜோசப் கல்லூரி, லாரிடோ கல்லூரி, சாலெசியன் கல்லூரி ஆகியனவும் மற்றும் டார்ஜீலிங் அரசு கல்லூரி—ஆகிய அனைத்தும் சிலுகுரியில் உள்ள வடக்குவங்க பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றுள்ளது.



குறிப்புகள்

  1. 1.0 1.1 "Champagne among teas". Deccan Herald (The Printers (Mysore) Private Ltd.). 2005-06-17 இம் மூலத்தில் இருந்து 2007-02-21 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20070221074118/http://www.deccanherald.com/deccanherald/jun172005/living1150492005616.asp. பார்த்த நாள்: 2006-07-18. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Khawas, Vimal (2003). "Urban Management in Darjeeling Himalaya: A Case Study of Darjeeling Municipality". The Mountain Forum. பார்க்கப்பட்ட நாள் 2006-05-01. தற்பொழுது கீழ்கண்ட தளங்களில் இணைய ஆவணங்கள் உள்ளது URL . 7 ஜூன் 2006 இல் மீட்டெடுக்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "urbanmanagement" defined multiple times with different content
  3. "Darjeeling Tea". h2g2, BBC. 2005-05-12. பார்க்கப்பட்ட நாள் 2006-08-17.
  4. 4.0 4.1 "The History of Darjeeling — The Queen of Hills". Darjeeling Police. பார்க்கப்பட்ட நாள் 2009-03-11.
  5. 5.0 5.1 5.2 5.3 "History of Darjeeling". Official webpage of Darjeeling District. பார்க்கப்பட்ட நாள் 2009-11-10.
  6. 6.0 6.1 "Mountain Railways of India". UNESCO World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 2006-04-30.
  7. (Gerard 1990, p. 258)
  8. (Lee 1971)
  9. Chakraborty, Subhas Ranjan (2003). "Autonomy for Darjeeling: History and Practice". Experiences on Autonomy in East and North East: A Report on the Third Civil Society Dialogue on Human Rights and Peace. Mahanirban Calcutta Research Group. பார்க்கப்பட்ட நாள் 2006-08-13. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  10. Shringla, T.T. (2003). "Travelogues: Toy Train to Darjeeling". India Travelogue. பார்க்கப்பட்ட நாள் 2006-06-08.
  11. Chattopadhyay, S.S. (January 2005). "Return of the queen". Frontline 22 (01). http://www.hinduonnet.com/fline/fl2201/stories/20050114006111400.htm. பார்த்த நாள்: 2006-07-30. 
  12. "Darjeeling Hills plunges into the Independence Movement". Official webpage of Darjeeling district. பார்க்கப்பட்ட நாள் 2009-11-19.
  13. "Constitution of Gorkha Janmukti Morcha". பார்க்கப்பட்ட நாள் 2009-05-18.
  14. "District Profile". Official Webpage of Darjeeling District. பார்க்கப்பட்ட நாள் 2009-11-10.
  15. "Darjeeling". Encyclopædia Britannica. Encyclopædia Britannica Premium Service. பார்க்கப்பட்ட நாள் 2006-07-26.
  16. 16.0 16.1 TERI (2001). "Sustainable Development in the Darjeeling Hill Area" (PDF). Tata Energy Research Institute, New Delhi. (TERI Project No.2000UT64). p. 20. பார்க்கப்பட்ட நாள் 2006-05-01.
  17. "Himalayan Tahrs, Blue sheep for Darjeeling Zoo arrive from Japan". The Hindu. 2009-10-29. பார்க்கப்பட்ட நாள் 2009-11-10.
  18. 18.0 18.1 "Weatherbase entry for Darjeeling". Canty and Associates LLC. பார்க்கப்பட்ட நாள் 2006-04-30.
  19. 19.0 19.1 19.2 19.3 19.4 Directorate of Census Operations, West Bengal (2003). "Table-4 Population, Decadal Growth Rate, Density and General Sex Ratio by Residence and Sex, West Bengal/ District/ Sub District, 1991 and 2001". Archived from the original on 2005-08-27. பார்க்கப்பட்ட நாள் 2006-04-30.
  20. "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-10-02.
  21. Directorate of Census Operations, West Bengal (2003). "Table-3 District Wise List of Statutory Towns (Municipal Corporation, Municipality, Notified Area and Cantonment Board), Census Towns and Outgrowths, West Bengal, 2001". பார்க்கப்பட்ட நாள் 2006-04-30.
  22. "Darjeeling tea growers at risk". BBC News. 2001-07-27. http://news.bbc.co.uk/2/hi/business/1456988.stm. பார்த்த நாள்: 2006-05-08. 
  23. 23.0 23.1 Haber, Daniel B (2004-01-14). "Economy-India: Famed Darjeeling Tea Growers Eye Tourism for Survival". Inter Press Service News Agency. http://www.ipsnews.net/africa/interna.asp?idnews=21909. பார்த்த நாள்: 2006-05-08. 
  24. "Darjeeling ropeway mishap kills four". Page One. The Statesman. 2003-10-20. பார்க்கப்பட்ட நாள் 2007-06-30.
  25. Mookerjee, Soma (2007-06-22). "Darjeeling Ropeway to open again". Bengal. The Statesman. பார்க்கப்பட்ட நாள் 2007-06-30.
  26. "India at a Glance: Sex Ratio". Census of India, 2001. பார்க்கப்பட்ட நாள் 2009-11-19.
  27. "Basic data sheet, District Darjiling" (PDF). Census of India, 2001. பார்க்கப்பட்ட நாள் 2009-11-19.
  28. "People And Culture". Official webpage of Darjeeling District. பார்க்கப்பட்ட நாள் 2009-11-19.
  29. Chattopadhyay, S.S. (December 2003). "The spirit of Darjeeling". Frontline 20 (25). http://www.hinduonnet.com/fline/fl2025/stories/20031219000306600.htm. பார்த்த நாள்: 2006-05-01. 
  30. Rasaily DP, Lama RP. "The Nature-centric Culture of the Nepalese". The Cultural Dimension of Ecology. Indira Gandhi National Centre for the Arts, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 2006-07-31.
  31. "Educational Institutes". Official webpage of Darjeeling district. பார்க்கப்பட்ட நாள் 2009-11-19.


குறிப்புகள்


வெளி இணைப்புகள்

இந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம்.
டார்ஜீலிங் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி



வார்ப்புரு:Darjeeling வார்ப்புரு:Darjeeling District வார்ப்புரு:GeoSouthAsia வார்ப்புரு:Featured article

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்ஜீலிங்&oldid=584099" இலிருந்து மீள்விக்கப்பட்டது