24 மனை தெலுங்குச்செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31: வரிசை 31:
*[http://www.dinamalar.com/Supplementary/kumudam_detail.asp?news_id=292&dt=10-29-09 குமுதம்: நான் தமிழன் - இரா.மணிகண்டன் கட்டுரை தகவல்]
*[http://www.dinamalar.com/Supplementary/kumudam_detail.asp?news_id=292&dt=10-29-09 குமுதம்: நான் தமிழன் - இரா.மணிகண்டன் கட்டுரை தகவல்]



{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:சாதிகள்]]
[[பகுப்பு:சாதிகள்]]

21:46, 11 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூரும் மதுரையும் நாயக்க மன்னர்கள் வசம் வந்தது. இந்த சமயம் தெலுங்கு பேசும் திராவிட இனமக்கள் பலர் மதுரை, தஞ்சாவூர்,கோவை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரத்தொடங்கினர். இப்படி வந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் 24 மனை தெலுங்குச் செட்டியார்கள். இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் மதுரை, தேனி, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

திருமண உறவுமுறை

24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. இதில் 8 கோத்திரம் பெண் வீடு என்றும் 16 கோத்திரம் ஆண் வீடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஒரே பிரிவில் இருப்பது சகோதர உறவாக கொள்ளப்பட்டுள்ளது. இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தலைமையில்தான் இச்சாதியினரின் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

சமூகப் பிரமுகர்கள்

  • உடுமலை நாராயணகவி - திரைப்படப் பாடலாசிரியர்
  • முசிறிபுத்தன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக)
  • கே.சி.பழனிச்சாமி - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (கரூர் மக்களவைத் தொகுதி)
  • பொள்ளாச்சி ஜெயராமன் - முன்னாள் அமைச்சர், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக)
  • இ.ஜி. சுகவனம் - நாடாளுமன்ற உறுப்பினர் (கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி)
  • ரத்னவேலு - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
  • எஸ்.ஜி. விநாயகமூர்த்தி - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
  • வெங்கடேசன் - முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர்

வினோத வழிபாடு

" கோயம்புத்தூரில், 24 மனை தெலுங்குச் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிவராத்தி தினத்தன்று சுடுகாட்டுக்குச் சென்று அங்குள்ள மனித எலும்புக் கூடுகளை தோளில் அணிந்து கொண்டு, சுடுகாட்டுச் சாம்பலை உடலில் பூசிக் கொண்டு விநோதமான பூஜை மேற்கொள்ளும் பழக்கத்தை பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தப் பழக்கத்தை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் வீதம் இந்தப் பழக்கத்தை விடாமல் அவர்கள் நடத்தி வருகின்றனர்.

குலதெய்வமான அங்காள பரமேஸ்வக்கு சிவராத்தி தினத்தன்று இரவு முதலில் பூஜை செய்யப்படுகிறது. அதன் பின்னர் நள்ளிரவில் ஐந்து பேரும் கிணற்று நீரில் குளிக்கின்றனர். பிறகு கோவிலில் வைக்கப்பட்டுள்ள அரிவாளைக் கையில் எடுத்துக் கொண்டு நடனமாடியபடி, சுடுகாட்டை நோக்கிச் செல்கின்றனர். அவர்களைப் பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோரும் சுடுகாடு செல்கின்றனர்.

வழியில் கோழி போன்றவற்றை உயிருடன் கடித்து அதன் ரத்தத்தைக் குடிக்கின்றனர். சுடுகாட்டுக்குச் சென்றதும், அங்கு சாம்பலை எடுத்துத் தங்களது உடலில் தேய்த்துக் கொள்கின்றனர். இந்தப் "பூஜை முடிந்த பிறகு மீண்டும் கோவிலுக்குத் திரும்புகின்றனர். வரும் வழியில் மீண்டும் கிணற்றில் குளித்து விட்டு கோவிலில் பூஜை செய்கின்றனர்."[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்