நுதலெலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Bone | Name = நுதலெலும்பு | Latin = os frontale | GraySubject = 33 | GrayPage = 13...
 
வரிசை 23: வரிசை 23:

இந்தப் பொருத்துக்கு இருபுறமும் கட்குழியின் மேல் ஓரத்தில் இருந்து ஏறத்தாழ மூன்று சென்ரி மீட்டர் உயரத்தில் வட்டவடிவான மேட்டுப் பகுதி காணப்படும், இது முன்புற மேடு (frontal eminence) எனப்படும். இந்த உயர்ந்த பகுதியானது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது, இளவயதுடையோருக்கு மிக்க உயர்ந்து காணப்படும்; இந்த மேட்டிற்கு மேலே உள்ள பகுதி மிருதுவானது. முன்புற மேட்டின் கீழே காணப்படும் வரிப்பள்ளத்தைத் தொடர்ந்து [[மிகைப்பிசிர் வளைவு]] (superciliary arche) காணப்படும்; இவை மைய நோக்கி தெளிவாகக் காணப்படும், மேலும் மறு புறத்தில் உள்ள வளைவுடன் தொடுக்கப்படும் போது நெற்றிப்புடைப்பு (glabella) உருவாகிறது. இது ஆண்களில் பெரிதாகக் காணப்படும். மிகைப்பிசிர் வளைவின் கீழ் காணப்படும் வளைந்த மற்றுமொரு மேடு கட்குழி மேலோரம் (supraorbital margin) ஆகும். இது கட்குழியின் மேல் எல்லையை ஆக்குகிறது மேலும் செதிலுருவை கட்குழிப் பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இதன் மையவிலகிய பகுதி கூர்மையானதாகவும் முனைப்பாகவும், மையப்பகுதி வளைவானதாகவும் காணப்படுகிறது. மையப்பகுதிக்கும் நடுப்பகுதிக்கும் இடையே ஒரு [[பிளப்பு]] அல்லது [[துவாரம்]] காணப்படுகிறது, இதனூடே கட்குழி மேல் குருதிக்குழாய்களும், நரம்புகளும் செல்லுகின்றன. கட்குழி மேலோரம், மையவிலகிய பகுதியில் பொட்டு எலும்பு துருத்தமாக (zygomatic process) [[கன்ன எலும்பு]]டன் இணைவதன் மூலம் முடிவடைகிறது.

== மூட்டுப் பொருத்தம் ==
== மூட்டுப் பொருத்தம் ==

06:26, 11 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

எலும்பு: நுதலெலும்பு
நுதலெலும்பு வெளிமேற்பரப்பு.
இலத்தீன் os frontale
Gray's subject #33 135
Articulations பன்னிரண்டு என்புகள்: ஆப்புரு, நெய்யரி, சுவரெலும்பு (2), நாசி எலும்பு (2), மேற்றாடை எலும்பு (2), கண்ணீரெலும்பு (2), கன்ன எலும்பு (2)  
MeSH Frontal+Bone

நுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு (frontal bone) உருவத்தில் சிப்பியின் ஓடு போன்று அமைந்திருக்கும். இது இரண்டு வகையான பகுதிகளைக் கொண்டது:

  • நெற்றியை உண்டாக்கும் நிலைக்குத்தான செதிலுருப்பகுதி (squama)
  • கிடையான அல்லது கட்குழியைச்சூழவுள்ள (orbital) பகுதி; கட்குழியின் மற்றும் நாசிக்குழியின் கூரையை ஆக்குகிறது.

செதிலுருப்பகுதி (squama)

செதிலுருப்பகுதி (squama frontalis) இரு மேற்பரப்புகளை கொண்டுள்ளது: வெளிமேற்பரப்பு, உள்மேற்பரப்பு. வெளிமேற்பரப்புப் பகுதி குவிவானதாகும், இதன் கீழ் மையப்பகுதியில் முன்பொருத்துக்களின் (frontal suture) எச்சங்கள் காணப்படும், கைக்குழந்தைகளில் இந்தப் பொருத்தானது நுதல் எலும்பை இரண்டாகப் பிரிக்கின்றது, குழந்தையின் வளர்ச்சியின் போது இது படிப்படியாக மறைந்துவிடும்.

இந்தப் பொருத்துக்கு இருபுறமும் கட்குழியின் மேல் ஓரத்தில் இருந்து ஏறத்தாழ மூன்று சென்ரி மீட்டர் உயரத்தில் வட்டவடிவான மேட்டுப் பகுதி காணப்படும், இது முன்புற மேடு (frontal eminence) எனப்படும். இந்த உயர்ந்த பகுதியானது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது, இளவயதுடையோருக்கு மிக்க உயர்ந்து காணப்படும்; இந்த மேட்டிற்கு மேலே உள்ள பகுதி மிருதுவானது. முன்புற மேட்டின் கீழே காணப்படும் வரிப்பள்ளத்தைத் தொடர்ந்து மிகைப்பிசிர் வளைவு (superciliary arche) காணப்படும்; இவை மைய நோக்கி தெளிவாகக் காணப்படும், மேலும் மறு புறத்தில் உள்ள வளைவுடன் தொடுக்கப்படும் போது நெற்றிப்புடைப்பு (glabella) உருவாகிறது. இது ஆண்களில் பெரிதாகக் காணப்படும். மிகைப்பிசிர் வளைவின் கீழ் காணப்படும் வளைந்த மற்றுமொரு மேடு கட்குழி மேலோரம் (supraorbital margin) ஆகும். இது கட்குழியின் மேல் எல்லையை ஆக்குகிறது மேலும் செதிலுருவை கட்குழிப் பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இதன் மையவிலகிய பகுதி கூர்மையானதாகவும் முனைப்பாகவும், மையப்பகுதி வளைவானதாகவும் காணப்படுகிறது. மையப்பகுதிக்கும் நடுப்பகுதிக்கும் இடையே ஒரு பிளப்பு அல்லது துவாரம் காணப்படுகிறது, இதனூடே கட்குழி மேல் குருதிக்குழாய்களும், நரம்புகளும் செல்லுகின்றன. கட்குழி மேலோரம், மையவிலகிய பகுதியில் பொட்டு எலும்பு துருத்தமாக (zygomatic process) கன்ன எலும்புடன் இணைவதன் மூலம் முடிவடைகிறது.

மூட்டுப் பொருத்தம்

பிறப்பின் போது நுதல் எலும்பு

நுதல் எலும்பு 12 எலும்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது: ஆப்புரு, நெய்யரி, சுவரெலும்பு (2), நாசி (2), மேற்றாடை (2), கண்ணீரெலும்பு (2), கன்ன எலும்பு (2).

முளையவியல்

நுதல் எலும்பு, நரம்பு முகட்டுக் கலங்களில் (neural crest cells) இருந்து உருவானதென கருதப்படுகிறது.[1][2]

என்பாக்கம்

வலப்பகுதிக்கு ஒரு மையமும், இடப்பகுதிக்கு ஒரு மையமுமாக சவ்வில் உள்ள இரு முதன்மை என்பாக்கு மையங்களில் இருந்து நுதல் எலும்பு உருவாகிறது, இரண்டாம் மாத கருவளர்ச்சி நிறைவின் போது என்பாக்கம் ஆரம்பமாகிறது. கட்குழி மேல் ஓரத்தின் மேலே உள்ள என்பாக்கு மையத்தில் இருந்து மேற்புறம் நோக்கியும் பிற்புறம் நோக்கியும் என்பாக்கம் நிகழ முறையே செதிலுருப் பகுதியும் கட்குழிப் பகுதியும் உருவாகின்றன. பிறப்பின் போது இந்த என்பு இடது, வலது என இரு பகுதிகளாக முன் பொருத்து (frontal suture) மூலம் பிரிக்கப்பட்டு இருக்கும், இது எட்டு வருடங்களில், கீழ்ப்பகுதியைத் தவிர, இணைந்து தனி எலும்பாகிவிடும், எனினும் சிலரில் மிகவும் அரிதாக இவை இணைவதில்லை.

உசாத்துணைகள்

  1. Kirby, ML; Waldo, KL. Circulation (1990) 82:332-340.
  2. Msx2 and Twist cooperatively control the development of the neural crest-derived skeletogenic mesenchyme of the murine skull vault. ; http://lib.bioinfo.pl/pmid:14597577; (2003)

வார்ப்புரு:Gray's உடற்கூறியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுதலெலும்பு&oldid=573360" இலிருந்து மீள்விக்கப்பட்டது