நெசவுத் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12: வரிசை 12:
பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம் பல படிகளை உள்ளடக்கியது....
பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம் பல படிகளை உள்ளடக்கியது....


1. பஞ்சடித்தல் ( ஜின்னிங்)
:1. பஞ்சடித்தல் (ஜின்னிங்)
2. நூல் தயாரிப்பு ( ஸ்பின்னிங் )
:2. நூல் தயாரிப்பு (ஸ்பின்னிங் )
3. நூலை பதப்படுத்துதல் , சாயப்படுத்துதல் மற்றும் நெசவிற்கு தயார்படுத்துதல் ( புராஸஸிங்,டையிங் மற்றும் வீவிங் பிரிபரேசன்..)
:3. நூலை பதப்படுத்துதல், சாயப்படுத்துதல் மற்றும் நெசவிற்கு தயார்படுத்துதல் (புராஸஸிங்,டையிங் மற்றும் வீவிங் பிரிபரேசன்)


1. பஞ்சடித்தல் ( ஜின்னிங்)
1. பஞ்சடித்தல் ( ஜின்னிங்)

03:15, 29 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

ஆடைகளை உற்பத்தி செய்வதற்கு உதவும் நுட்பம் நெசவுத் தொழில்நுட்பம் ஆகும். பஞ்சு உற்பத்தி, விசைத்தறி பயன்பாடு, சாயமிடல் போன்ற செயல்பாட்டு நுட்பங்கள் நெசவுத் தொழில்நுட்பத்தில் அடங்கும். இது ஒரு பழந்தமிழர் தொழில்நுட்பம் ஆகும்.

பல்வேறு பிரிவுகள்

நெசவுத்தொழில்நுட்பம் பண்டைய காலந்தொட்டே தமிழர்களின் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. நெசவுத்தொழில்நுட்பத்தை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம்..

1. இயற்கையான பஞ்சுத்துணி நெசவுகள் (காட்டன் / பருத்தி இழை, சணல், மூங்கில் மற்றும் பல)
2. செயற்கை இழை பஞ்சுத்துணி நெசவுகள் (பாலியஸ்டர், விஸ்கோஸ், மற்றும் பல)
3. மிருக உரோம நெசவு (வுல் எனப்படும் ஆட்டிழை மற்றும் பல)

பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம்

பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம் பல படிகளை உள்ளடக்கியது....

1. பஞ்சடித்தல் (ஜின்னிங்)
2. நூல் தயாரிப்பு (ஸ்பின்னிங் )
3. நூலை பதப்படுத்துதல், சாயப்படுத்துதல் மற்றும் நெசவிற்கு தயார்படுத்துதல் (புராஸஸிங்,டையிங் மற்றும் வீவிங் பிரிபரேசன்)

1. பஞ்சடித்தல் ( ஜின்னிங்)

விவசாயிகளிடமிருந்து வாங்கிய பஞ்சில ( raw cotton) கொட்டைகளும் (seeds) , பல வித தூசிகளும ( foreign matters) கலந்திருக்கும்..இந்த கொட்டைகளை நீக்குவதே இந்தப்படியின் முதல் நோக்கம்....இதன் மூலம் ஓரளவிற்கு கொட்டைகளும் , பஞ்சும் தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டு பஞ்சு பொதிகளாக்கப்பட்டு (bale) நூற்பாலைகளுக்கு(spinning mills) அனுப்பப்படும்...


2. நூல் தயாரிப்பு ( ஸ்பின்னிங் )

ஸ்பின்னிங் எனப்படும் நூற்பு தொழில்நுட்பம் மிக மிக எளிதானது…….அவற்றை மிக எளிதாக தமிழில் சொல்வதென்பது பல சிக்கல்களை உள்ளடக்கியது…காரணம் மிகப்பல சொற்களுக்கு தமிழ் வார்த்தைகளை தேடுவதில் உள்ள சிரமம்தான்……இது போன்ற சிரமம் உள்ள காரணத்தால் மிகப்பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளே மில்களில் அதாவது பஞ்சாலைகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன…….நான் இங்கே தனித்தனி பகுப்புகளுக்கும் ( டிபார்ட்மென்ட் ) உள்ள பொதுவான வேலைகள் பற்றி மட்டுமே பதிவிட எண்ணியிருக்கிறேன்………..மிகப்பெரிய பதிவாகையால் நேரம் கிடைக்கும்போது அதை அப்டேட் செய்வதாக உத்தேசம்….அதனால் பாதியில் விட்டுவிட்டேன் என்று கோபப்பட வேண்டாம் நண்பர்களே!!

முதலில் நூல்களை அதன் இயல்புக்கு தகுந்தவாறு எவ்வாறு பகுப்பது என்பது மிக முக்கியம். நூல்களை(yarn) பொதுவாக கவுன்ட்(count) என்ற காரணியால் பகுப்பார்கள்…பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான நூல்கள் தேவை….நீங்கள் கடையில் சென்று போர்வையும் , மேலாடையும் வாங்குகிறீர்கள்…இரண்டும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இல்லையே..பிறகு வேறுபாடு எதில்…..? அங்கேதான் இந்த நூலின் கவுன்ட் (yarn count) வருகிறது….அந்தந்த நூலின் வெயிட்டுக்கு ( weight ) தகுந்தாற்போல் அந்த கவுன்ட் பிக்ஸ் செய்ய்ப்படுகிறது…நல்ல கனமான நூல் (coarser count) போர்வைக்கும் மெல்லிசான நூல் (finer count ) மேலாடைக்கும் பயன் படுத்தப்படுகிறது!!

ஆக , அந்த கவுன்ட் எப்படி வரையறுக்கப்படுகிறது…..அந்த கவுன்ட்களில் பலவிதங்கள் உண்டு….ஆனாலும் அதிகமாக புழக்கத்தில் உள்ள ஆங்கில கவுன்ட் (English count ) முறையையே நாம் எடுத்துக்கொள்வோம்….இங்கே எல்லாவற்றையும் பேசினால் குழப்பமே மிஞ்சும்!!! ஆங்கில கவுன்ட் அல்லது இங்கிலீஷ் கவுன்ட்…..( English count - Ne ) இந்த வகை கவுன்ட் முறையில் பொதுவாக நூலின் நீளம் “யார்ட்” (yard) என்ற அளவையில்தான் ( 1மீட்டர் - 1.09 யார்ட்) அளக்கப்படுகிறது…….அதே போல் நூலின் எடை பவுன்ட் (pound) என்னும் அளவையில் தான் குறிப்பிடப்படுகிறது…( 1 கிலோ கிராம் = 2.2 பவுன்ட் ) ஆக , ஒரு பவுன்ட் நூலை எடுத்து எடை போட்டு , அதில் எத்துனை 840 யார்ட் நீளமுள்ள நூல்கள் இருக்கிறதோ அதுவே அந்நூலின் கவுன்ட் ….இன்னும் விரிவாகச் சொன்னால் 10 என்பது ஒரு நூலின் கவுன்ட் என்றால், அதே நூலை ஒரு பவுன்ட் எடுத்து நீளத்தை அளந்தோமானால் மொத்த நீளம் 8400 யார்ட்ஸ் என்பதாம்…..என்ன புரிஞ்ச மாதிரி இருக்குதா?????? எதற்கும் கீழே ஆங்கிலத்தில் கொடுத்து விடுகிறேன்..

English Count (Ne) = No. of 840 yards in 1 pound of yarn!!!!!!!!!!!

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெசவுத்_தொழில்நுட்பம்&oldid=565834" இலிருந்து மீள்விக்கப்பட்டது