மாயாவதி குமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: en:Mayawati Naina Kumari
சி தானியங்கிமாற்றல்: en:Mayawati
வரிசை 108: வரிசை 108:
[[bn:মায়াবতী]]
[[bn:মায়াবতী]]
[[de:Mayawati]]
[[de:Mayawati]]
[[en:Mayawati Naina Kumari]]
[[en:Mayawati]]
[[eo:Mayawati Kumari]]
[[eo:Mayawati Kumari]]
[[fi:Mayawati]]
[[fi:Mayawati]]

08:36, 26 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

மாயாவதி நைனா குமாரி
23வது, 24வது, 30வது மற்றும் 32வது
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்[1]
பதவியில்
ஜூன் 3, 1995 – அக்டோபர் 18, 1995
மார்ச் 21, 1997செப்டம்பர் 21, 1997
மே 3, 2002ஆகஸ்ட் 29, 2003,
மே 13, 2007-
முன்னையவர்முலாயம் சிங் யாதவ்
குடியரசுத்தலைவர் ஆட்சி
குடியரசுத்தலைவர் ஆட்சி
முலாயம் சிங் யாதவ்
பின்னவர்குடியரசுத்தலைவர் ஆட்சி
கல்யாண் சிங்
முலாயம் சிங் யாதவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 15, 1956 (1956-01-15) (அகவை 68)
புதுதில்லி
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி
உயரம்200 px
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்http://bspindia.org/

மாயாவதி நைனா குமாரி (இந்தி: मायावती) ஒரு இந்திய அரசியல்வாதியும் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆவார். இதற்கு முன் மூன்று தடவை உத்தரப்பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்தார்.

1984இல் கான்ஷி ராமால் தலித் மக்களுக்காக தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி ஒரு முக்கிய அரசியல்வாதியாக இருந்தார். மே 13, 2007 மாயாவதி உத்தரப்பிரதேச முதலமைச்சர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது உத்தரப்பிரதேச நாடாளுமன்றத்தின் அமைச்சர்களில் பெரும்பான்மை மாயாவதியுடைய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தவர்கள்.

2008இல் ஃபோர்ப்ஸ் இதழின் உலகில் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மாயாவதியின் பெயர் சேர்ந்துள்ளது.

இளமைப்பருவம்

மாயாவதி என்பவர் தலித் மற்றும் பெண் என்ற இரண்டு பெரிய தடைகளை உடைத்து முன்னணிக்கு வந்தவர். இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் பிறந்து வளர்ந்தவர். 1956-ம் வருடம் சனவரி 15 அன்று இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை சாதாரண எழுத்தர். இருப்பினும் தமது அன்னையின் அரவணைப்பால் கலை மற்றும் கல்வியில் இளங்கலை பட்டப்படிப்புகளை பயின்றார். பின்னாளில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

ஹரிஜன் பற்றிய நிலை

மாயாவதி, “சிறு வயது முதலே தன்னை ஒரு தாழ்ந்த சாதியாக நம்பத்தயாராக இல்லாதவர்”.மகாத்மா காந்தியின் மீது அளவற்ற வெறுப்பும், பாபா சாகேப் அம்பேத்கர் மீது பாசமும் உடையவராக காணப்பட்டார். ஒருமுறை பள்ளி மேடையில் பேசும்போது, நாங்கள் கடவுளின் குழந்தைகள் (ஹரிஜன்) என்றால், காந்தி என்ன சாத்தானின் குழந்தையா? என்று அவரின் ஆதங்கத்தை ஆழமாக பதிவு செய்தவர். இவரது இந்த நோக்கும் போக்கும் இவரை கன்ஷிராமிடம் கொண்டு சேர்த்தது.

ஹரிஜன் என்ற சொல்லின் மீது மாயாவதிக்கு மிகுந்த வெறுப்பு இருந்தது.

அந்த வார்த்தையை பயன்படுத்தி யார் என்னை அழைத்தாலும், அதை அவமானமாக கருதுகிறேன். நான் ஒரு தலித் என்பதையே பெருமையாக நினைக்கிறேன், ஏனெனில் ஹரிஜன் என்பது எங்களை பெருமைப்படுத்தவில்லை.! எங்களுக்கு எதிரான கொடுமைகளை, அநீதியை மறைக்க பார்க்கிறது..!

-- மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி

மாயாவதி கன்ஷிராமை பார்த்த அந்த முதல் சந்திப்பிலேயே, இனிமேல் ”அவர் தான் தனது குருநாதர்”, என்று முடிவு செய்துவிட்டார். ”மான்யவர் கன்ஷிராமை, நான் எனது அரசியல் குருவாகவும், தந்தைக்கு இணையான ஒருவராகவும் மட்டுமே கருதுகிறேன்” என்று மாயாவதி குறிப்பிடுகிறார். அதனையும் மீறிய விசேஷ கவனம், உரிமை உணர்வு (Possessive) இருவருக்குமிடையே இருந்ததாக சிலர் குறிப்பிடுகின்றனர்.

முதலில் மாயாவதியின் டார்கெட் பாராளுமன்றம் தான்., ஆனால் அந்த வெற்றியை சுவைக்க அவர் 4 தேர்தல்களை மட்டுமல்ல; மீராகுமார் (இன்றைய நாடளுமன்ற அவைத்தலைவர்), ராம்விலாஸ் பஸ்வான் (முன்னாள் மத்தியஅமைச்சர்) போன்றோரையும் எதிர்த்து போராட (போட்டியிட) வேண்டியதாயிற்று.

முதல்வர் மாயாவதி

1992-ம் ஆண்டு ராமஜென்ம பூமி பிரச்னைக்கு பிறகு ஏற்பட்ட குழப்பநிலையின் காரணமாக, மாயாவதி-முலாயம் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. முலாயம் தான் முதல்வர்; ஆனால் சூப்பர் சி.எம் மாயாவதியே! இதனால் ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக, ஆட்சி விரைவிலேயே கவிழ்ந்தது. ஆனால் மாயவதியோ, பாஜக-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார்., மாயாவதி. முதல் முறையாக இந்தியாவின் தலித் முதல்வரான பெருமையை பெற்றார்.

அன்றைய பிரதமர், நரசிம்மராவின் வாழ்த்து செய்தி.. சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்புக்கு உயர்ந்திருப்பது இந்திய மக்களாட்சியின் அதிசயம். அதன் பிறகு மாயாவதி அமைத்தக் கொண்ட அனைத்து கூட்டணிகளாலும், அவர் அடைந்த நன்மையே அதிகம். முலாயம் சிங், பாஜக, காங்கிரஸ் என்று மாற்றி, மாற்றி கூட்டணி அமைத்ததால், மக்கள் என்ன நினைப்பார்கள்? என்றெல்லாம் நினைக்க மாட்டார். வீட்டில் உட்கார்ந்திருப்பதை விட கொஞ்ச நாளாவது ஆட்சி செய்யலாம், என்பது மாயாவதியின் கருத்து. அதற்காக யாருடனும் கூட்டணி அமைக்க அவர் தயங்கியதே இல்லை. பிராமணர்கள், ரௌவுடிகள், நிலப்பிரபுக்கள் என்று இந்த பட்டியல் நீண்டது. உ.பி அரசியலில் தலித் மக்கள் தவிர, வேறு யாருடனும் அவர் நிரந்தரமாக கூட்டணி அமைத்ததே இல்லை.

தலித் மகள் பிம்பத்தில் விரிசல்

2002-க்கு பிறகு முலாயம் தான் லேசாக பற்றவைத்து போட்டார் வெடியை! மாயாவதியின் ஊழல் பற்றிய செய்தியை. இவ்வளவு பணம், நகை, சொத்து இதெல்லாம் மாயாவதிக்கு எப்படி வந்த்து? எங்கிருந்து வந்தது? என்றெல்லாம் கேள்விக் கணைகளால் ஊடகங்களும் துளைத்தெடுத்தன. கடைசியில் அமலாக்க பிரிவின் விசாரனைக்கு பிறகு, மாயாவதிக்கு ”உ.பி., டெல்லியில் 72 வீடுகளும், ஏராளமான பணம், நகை; மற்றும் பள சொத்துக்களை, அவர் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துளார்”, என்று அறிக்கை சமர்ப்பித்தது.இதற்கெல்லாம் மாயாவதியின் பதில் ”எல்லாவற்றுக்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது!!?” ஆனால் இன்று வரை அது வெளியிடப்படவில்லை.

மாயவதி - பிரதமர் கனவு

இத்தனை விசாரணைக்கு நடுவிலும் 2006 தேர்தலில் தனியாக நின்ற மாயாவதி 206 (மொத்தம் 422) இடங்களில் வெற்றி பெற்றார். ”எங்களுக்கு, மாயாவதி மீது நம்பிக்கை இருக்கிறது” என்று மக்கள் தீர்ப்பளித்தனர். இது 13 வருடங்களில் மிகப்பெரிய வெற்றி. யாரும் பெறாத தனிப்பெரும்பான்மை.!

2009 தேர்தலின் போதே சரியாக காய் நகர்த்தி இருந்தால் மாயாவதியின் கனவு, நினைவாயிருக்கும். கன்ஷிராம் உயிரோடு இருந்திருந்தால் அது நடந்திருக்கலாம். இவர் அதை தவறவிட்டார், என்பது அனைவரும் அறிந்ததே! ஆனாலும் 50-களின் முற்பகுதியில் இருக்கும் மாயாவதிக்கு வயது இருக்கிறது! 2014-ல் கூட சாதிக்கலாம். 2019-ல் கூட அந்த நிகழ்வு நடக்கலாம்.!!

இதல்லாம் நடக்க மாயாவதிக்கு தேவை! இந்தியாவில் எப்போது பேசப்படும், ஆனால் செயல்படுத்தப் படாத 3வது அணியை சரிசெய்வது! சிறந்த கூட்டணியை உருவாக்குவது!! எல்லாருடனும் சமரசமாக செல்வது (பிஜேபி, காங்கிரஸ்) தவிர.!! மிக முக்கியம் சிறந்த கனிவான தலைமை பண்பு... இதில் மக்கள் ஆதரவை நான் சொல்லவில்லை, ஏனென்றால் மக்கள் என்றுமே அவர் பக்கம் தான்...

மேற்கோள்கள்

  1. UP CM's & their terms. Retrieved on March 30, 2007.

2. மாயவதி - தமிழில் வலைப்பூ

3. மாயாவதி - கிழக்கின் புத்தகம்

4. [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாவதி_குமாரி&oldid=564284" இலிருந்து மீள்விக்கப்பட்டது