முகில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gu:વાદળ
சி தானியங்கிஇணைப்பு: krc:Булут
வரிசை 83: வரிசை 83:
[[kk:Бұлттар]]
[[kk:Бұлттар]]
[[ko:구름]]
[[ko:구름]]
[[krc:Булут]]
[[ku:Ewr]]
[[ku:Ewr]]
[[la:Nubes]]
[[la:Nubes]]

18:50, 4 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

Stratocumulus perlucidus clouds, as seen from an aircraft window.

முகில் என்பது புவியில் மேற்பரப்புக்கு மேல், வளிமண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள் அல்லது உறைந்த பளிங்குத் துகள்கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு தொகுதியாகும். வேறு கோள்களைச் சுற்றியும் முகில்கள் காணப்படுகின்றன. அண்டவெளியில் விண்மீன்களுக்கு இடைப்பட்ட வெளியில் காணப்படும் துகள் கூட்டங்களையும் முகில்கள் என அழைப்பதுண்டு. வானிலையியலில், முகில்கள் பற்றிய ஆய்வுத்துறை முகில் இயற்பியல் எனப்படுகின்றது.

புவியில் ஒடுங்கும் பொருள் நீராவி ஆகும். இது, பொதுவாக 0.01 மிமீ விட்டம் கொண்ட மிகச் சிறிய பனித் துளிகளை உண்டாக்குகிறது. இது கண்ணுக்குத் தெரியாத அளவு கொண்டது ஆயினும் பல கோடிக் கணக்கான துளிகள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும்போது அவற்றைக் கண்ணால் பார்க்கமுடிகிறது. இதுவே முகில் எனப்படுகின்றது. செறிவானதும், ஆழமானதுமான முகில்கள் 70%-95% வரையான கண்ணுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட ஒளிக் கற்றைகளை தெறிக்கும் தன்மை வாய்ந்தவை. இதனால் முகில்களின் மேற்பக்கமாவது வெண்ணிறமாகத் தெரிவதுண்டு. முகில் சிறுதுளிகள் ஒளியைச் சிதறச் செய்யும் திறன் கொண்டவை. இதனால் முகிலின் ஆழம் அதிகமாகும்போது உட்புறங்களில் ஒளி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக முகிலின் கீழ்ப்பகுதிகள் சாம்பல் நிறமாகவோ, கருநிறமாகவோ இருப்பதுண்டு.


  • வானத்தில் கார்மேகங்களின் வண்ணக்கோலங்கள்.



"https://ta.wikipedia.org/w/index.php?title=முகில்&oldid=550730" இலிருந்து மீள்விக்கப்பட்டது