கரும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: kn:ಕಬ್ಬು
சி தானியங்கிஇணைப்பு: arz:قصب السكر
வரிசை 47: வரிசை 47:


[[ar:قصب السكر]]
[[ar:قصب السكر]]
[[arz:قصب السكر]]
[[bg:Захарна тръстика]]
[[bg:Захарна тръстика]]
[[bn:আখ]]
[[bn:আখ]]

21:07, 9 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

கரும்பு
வெட்டப்பட்ட கரும்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Saccharum

Species

Saccharum arundinaceum
Saccharum bengalense
Saccharum edule
Saccharum officinarum
Saccharum procerum
Saccharum ravennae
Saccharum robustum
Saccharum sinense
Saccharum spontaneum

கரும்பு சர்க்கரை உற்பத்திக்கு முக்கியமாகப் பயன்படும், உண்பதற்கு இனிக்கும் ஒரு இடை தட்ப வெட்ப நிலைத் தாவரம் ஆகும். நீண்ட தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாகவும் கரும்பு வளரும். பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன. சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500 - ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் சீனாவுக்குப் பரவியது. சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். கி.பி. 636 -ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.


தமிழர் பண்பாட்டில் கரும்பு

கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்று தமிழர் கருதுவர். ஆகையால், தைப்பொங்கல் போன்ற விழா நாட்களில் கரும்பு பகிர்ந்து மகிழ்வது வழமை.

கரும்பு என ஆரம்பிக்கும் தமிழ் பெயர்கள்:
கரும்பு, கரும்பமுதம், கரும்பமுது, கரும்பரசி, கரும்பழகி, கரும்பிசை, கரும்பூராள், கரும்பெழிலி, கரும்பு, கரும்புநகை, கரும்புமொழி, கரும்புவில், கரும்புவிழி.

கரும்புடன் தொடர்புடைய பழமொழிகள்:

  • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
  • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
  • கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?
கரும்பு

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்பு&oldid=535132" இலிருந்து மீள்விக்கப்பட்டது