ஆத்திரேலியத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
|||
வரிசை 142: | வரிசை 142: | ||
==தமிழ் வானொலி சேவைகள்== |
==தமிழ் வானொலி சேவைகள்== |
||
==தமிழ் இதழ்கள்== |
==தமிழ் இதழ்கள்== |
||
===செய்திப் பத்திரிகைகள்=== |
|||
அவுஸ்திரேலியாவில் இரண்டு தமிழ் செய்திப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. |
|||
* [[உதயம் (பத்திரிகை)|உதயம்]] - மாதம் ஒருமுறை |
|||
* [[ஈழமுரசு (அவுஸ்திரேலியா)|ஈழமுரசு]] - மாதம் இருமுறை |
|||
இவை இரண்டும் மெல்பர்ணில் இருந்து வெளிவருகின்றன. |
|||
===சஞ்சிகைகள்=== |
|||
* [[கலப்பை (சஞ்சிகை)|கலப்பை]] - காலாண்டு சஞ்சிகை |
|||
* [[பாலம் (சஞ்சிகை)|பாலம்]] - மாத சஞ்சிகை |
|||
==தமிழ் நூலகங்கள்== |
==தமிழ் நூலகங்கள்== |
||
13:34, 3 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்
ஆஸ்திரேலியத் தமிழர் (அல்லது அவுஸ்திரேலியத் தமிழர்) எனப்படுவோர் தமிழ் பின்புலத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள். 1970ஆம் ஆண்டில் இருந்தே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்னர் தொழில் அநுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார நோக்கிலும் குடிபெயர்தல் அதிகரித்தமையின் விளைவாகவும் 1983 இலிருந்து பெருமளவில் தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.
தமிழரின் குடித்தொகை
தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின் படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது. அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் தமிழரின் குடித்தொகை விபரத்தை பின்வரும் அட்டவணையில் காணலாம்:
மாநிலம்/மண்டலம் |
1991 | 1996 | 2001 | 2006[1] |
நியூ சவுத் வேல்ஸ் | 4,994 | 9,072 | 12,087 | |
விக்டோறியா | 4,042 | 6,251 | 7,968 | |
மேற்கு அவுஸ்திரேலியா | 823 | 1,110 | 1,368 | |
குயீன்ஸ்லாந்து | 499 | 895 | 1,149 | |
தெற்கு அவுஸ்திரேலியா | 415 | 502 | 536 | |
அவுஸ்திரேலியத் தலைநகர் மண்டலம் | 381 | 618 | 751 | |
வட மண்டலம் | 154 | 158 | 126 | |
தஸ்மேனியா | 68 | 74 | 82 | |
மொத்தம் |
11,376 | 18,690 | 24,067 |
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை கலாநிதி ஆ. கந்தையா குறிப்பிடுகிறார்:
- வாழ்வதற்கு உகந்த தட்ப-வெப்ப நிலை.
- வேலை வாய்ப்பு மிகுந்த மாநிலம்.
பிறந்த நாடுகள் அடிப்படையில்
அரசின் குடித்தொகை பதிப்புகள், அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிறந்த நாடுகளையும் எண்ணிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளன:
பிறந்த நாடு |
1996 | 2001 | 2006 |
அவுஸ்திரேலியா | 1,772 | 2,420 | |
இலங்கை | 10,504 | 12,901 | |
இந்தியா | 3,721 | 5266 | |
மலேசியா | 1,309 | 1,381 | |
சிங்கப்பூர் | 599 | 788 | |
பிரித்தானியா | 198 | 176 | |
தென் ஆபிரிக்கா | 102 | 00 | |
ஐரோப்பிய நாடுகள் | 59 | 105 | |
நியூசீலாந்து | 36 | 121 | |
பீஜித் தீவுகள் | 24 | 27 | |
அமெரிக்கா/கனடா | 26 | 53 |
முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள்
1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது.
கலாநிதி ஆ. கந்தையா அவர்களின் ஆய்வின் படி, முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். இவர் இலங்கைப் பின்னணியைக் கொண்ட மலேசியத் தமிழர். 1953இல் தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டுக்கு உயர்கல்வி பெற வந்தவர். மேற்கத்திய இசையில் தேர்ச்சி பெற்ற கலைஞர். இப்போது சிட்னியில் வாழ்ந்து வருகிறார்.
தமிழ் அமைப்புகள்
தமிழ் பள்ளிகள்
தமிழ் வானொலி சேவைகள்
தமிழ் இதழ்கள்
செய்திப் பத்திரிகைகள்
அவுஸ்திரேலியாவில் இரண்டு தமிழ் செய்திப் பத்திரிகைகள் வெளிவருகின்றன.
இவை இரண்டும் மெல்பர்ணில் இருந்து வெளிவருகின்றன.
சஞ்சிகைகள்
தமிழ் நூலகங்கள்
உசாத்துணை
- கந்தையா, ஆ., கங்காரு நாட்டில் தமிழும் தமிழரும், 2004
- The Australian Bureau of Statistics
அடிக்குறிப்புகள்
- ↑ 2006 ஆம் ஆண்டு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை