நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pnb:کتا
சி தானியங்கிஇணைப்பு: ab:Ала
வரிசை 39: வரிசை 39:
{{Link FA|no}}
{{Link FA|no}}


[[ab:Ала]]
[[ace:Asèë]]
[[ace:Asèë]]
[[af:Hond]]
[[af:Hond]]

02:23, 25 மே 2010 இல் நிலவும் திருத்தம்

வீட்டு நாய்
புதைப்படிவ காலம்:Late Pleistocene - Recent
other images of dogs
உயிரியல் வகைப்பாடு
உலகம்: யூக்கார்யோட்டா
[நல்லுயிர் (அல்) பாவுயிர்]
(Eukaryota)
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: நாய்ப் பேரினம்
பேரினம்: நாயினம்
கேனிசு (Canis)
இனம்: சாம்பல் ஓநாய்
கேனிசு லூப்பஸ்
(C. lupus)
துணையினம்: C. l. familiaris
மூவுறுப்புப் பெயர்
Canis lupus familiaris
(லின்னேயசு, 1758)

நாய் ஊனுண்ணும் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. இன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17,000 [1] ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி என் ஏ (DNA) க்களைக் கொண்டு 150,000 [2][3] ஆண்டுகளுக்கு முன்னமேயே கூட நாய்கள் பழக்கப்பட்டிருக்கலாம் என எண்ண வாய்ப்பிருக்கின்றது என்பர்.

நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களகாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும், கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி உணவாக உட்கொள்ளப்படுகிறது.

நாய்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் சில குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும். சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய ஒல்லியாய் உயரமாய் கழுத்து நீண்ட நாய், சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய். இதே போல ஞாளி,[4] எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர்,[5] கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல் என பல பெயர்கள் உள்ளன. இவற்றில் தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது. வங்கு என்பது புள்ளியுடைய நாய் (டால்மேசன் என்னும் வகையைப்போல). (இப்பெயர் கழுதைப்புலி என வழங்கும் புள்ளி கொண்ட காட்டில் வாழும் கொடிய விலங்கையும் குறிக்கும்.)

நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16-20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) கேட்க வல்லவை. நாய்களுக்கு காணும் திறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள். நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (cells) இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.

நாய்களின் வாழ்க்கை, இனப்பெருக்கம்

நாய்களின் வாழ்நாள் சுமார் 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கலாம். இது பெரும்பாலும் நாயினத்தின் வகையும், வளர்ப்பு நிலைகளையும் பொருத்தது.

மேற்கோள்கள்

  1. McGourty, Christine (2002-11-22). "Origin of dogs traced". பிபிசி. http://news.bbc.co.uk/2/hi/science/nature/2498669.stm. பார்த்த நாள்: 2007-11-27. 
  2. Vilà, C. et al. (1997). Multiple and ancient origins of the domestic dog. Science 276:1687–1689. (Also "Multiple and Ancient Origins of the Domestic Dog")
  3. Lindblad-Toh, K, et al. (2005) Genome sequence, comparative analysis and haplotype structure of the domestic dog. Nature 438, 803–819.
  4. திரிகூடராசப்பக் கவிராயர்; புலியூர்க்கேசிகன் (தெளிவுரை) (2007). திருக்குற்றாலக்குறவஞ்சி. சென்னை: பாரி நிலையம். பக். 128. "ஞாளிபோல் சுவடெடுத்துப் பூனைபோல்..." 
  5. Starostin, George. "Dravidian etymology : List with all references". The Proto-Dravidian database. The Tower of Babel. பார்க்கப்பட்ட நாள் 2007-11-27. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாய்&oldid=529215" இலிருந்து மீள்விக்கப்பட்டது