சிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ne:सिंह (जनावर)
சி தானியங்கிஇணைப்பு: ab:Алым
வரிசை 54: வரிசை 54:
{{Link FA|pl}}
{{Link FA|pl}}


[[ab:Алым]]
[[af:Leeu]]
[[af:Leeu]]
[[am:አንበሳ]]
[[am:አንበሳ]]

01:46, 25 மே 2010 இல் நிலவும் திருத்தம்

அரிமா
ஏறு ( ஆண் சிங்கம்)
பெண் சிங்கம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பா. லியோ
இருசொற் பெயரீடு
பாந்த்தரா லியோ
(லின்னேயசு, 1758)
ஆப்பிரிக்காவில் சிங்கங்களின் பரவல்
வேறு பெயர்கள்
பெலிசு லியோ
(லின்னேயசு, 1758)

சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கத்தைத் தமிழில் அரிமா என்றும் குறிப்பாக ஆண் சிங்கத்தை ஏறு என்றும் கூறுவது வழக்கம். குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.[2] ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. அரிமா பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு (வரிப்புலிக்கு) அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் அரிமா 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது. இதன் வாழிடங்களை கீழே உள்ள படங்கள் காட்டுகின்றன.

இந்தியாவில் கீர் காட்டில் அரிமாக்கள் வாழிடங்கள்

வாழிடமும் இயல்புகளும்

சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை. பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் அரிமா கூட்டமாக வாழும் இயல்புடையது. மான், பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகள் (ஓநாய், கழுதைப் புலி முதலானவை) எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன.

நன்கு உண்ட அரிமாக்கள் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. அவ்வாறு இருக்கையில் அருகில் இரை வரினும் பொதுவாக அவற்றைத் தாக்காது.

சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். 1990களில் அரிமாக்களின் எண்ணிக்கை 100,000 வாக்கில் இருந்தும் இன்று ஏறத்தாழ 16,000-30,000 வரை தான் உள்ளனவாகக் கணித்துள்ளார்கள்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Nowell & Bauer (2004). Panthera leo. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a lengthy justification of why this species is vulnerable
  2. திரிகூடராசப்பக் கவிராயர்; புலியூர்க்கேசிகன் (தெளிவுரை) (2007). திருக்குற்றாலக்குறவஞ்சி. சென்னை: பாரி நிலையம். பக். 128. "ஆளிபோற் பாய்ந்தசுரும் பிசைகேட்கும் திரிகூடத தமலர் நாட்டில்" 

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கம்&oldid=529201" இலிருந்து மீள்விக்கப்பட்டது