விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27: வரிசை 27:
இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட பெயர் '''நுங்கு1.JPG''' என்பதாகவும், கட்டுரையில் குறிப்பிட்ட படிமத்திற்கு வழங்கப்பட்ட பெயர், '''குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு''' என்று இருப்பதையும் காணலாம். அத்துடன், கட்டுரையில் படம் அமந்திருக்கும் இடம், படிமத்தின் அளவு என்பனவும் குறிப்பிட்ட வார்ப்புருவில் மாற்றியமைக்கப் படலாம்.
இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட பெயர் '''நுங்கு1.JPG''' என்பதாகவும், கட்டுரையில் குறிப்பிட்ட படிமத்திற்கு வழங்கப்பட்ட பெயர், '''குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு''' என்று இருப்பதையும் காணலாம். அத்துடன், கட்டுரையில் படம் அமந்திருக்கும் இடம், படிமத்தின் அளவு என்பனவும் குறிப்பிட்ட வார்ப்புருவில் மாற்றியமைக்கப் படலாம்.
==மேலும் பார்க்க==
==மேலும் பார்க்க==
[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Upload கோப்பைப் பதிவேற்று]
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Upload கோப்பைப் பதிவேற்று]
[[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/படம் சேர்ப்பது எப்படி]]
* [[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/படம் சேர்ப்பது எப்படி]]
[[விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி]]
* [[விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி]]





14:36, 29 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

உங்களது சொந்தப் படிமங்களையோ, அல்லது வேறு ஒருவருக்கு சொந்தமான படிமங்களை குறிப்பிட்ட அந்த நபரின் அனுமதியுடனோ விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யலாம். உங்களுக்கு சொந்தமான படிமங்களாயின், அவற்றை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்வதற்கு எவருடைய அனுமதியும் தேவையில்லையாயினும், அவற்றை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்த பின்னர், அவற்றை எந்த ஒருவரும் பயன்படுத்த அனுமதியளிக்கிறீர்கள் என்பதை அறிந்து வைத்திருங்கள். படிமங்கள் உங்களுடைய சொந்தப் படிமங்களாக இருக்காதவிடத்து, படிமங்களுக்கு உரியவர்களிடம் முறைப்படி அனுமதி பெற்று அந்த அனுமதிபற்றிய விபரத்தை permissions-commons@wikimedia.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படியல்லாவிடின், நீங்கள் தரவேற்றும் படிமங்கள் விக்கிப்பீடியாவிலிருந்து அகற்றப்படலாம். பொதுவாக இணையத் தளங்களில் கிடைக்கப்பெறும் படிமங்கள் காப்புரிமை கொண்டவை என்பதையும், முறையான அனுமதியின்றி அவற்றை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்ய முடியாதென்பதையும் அறிந்து வைத்திருங்கள்.

படிமமொன்றை தரவேற்றம் செய்வதற்கான படிமுறைகள்

காப்புரிமை பற்றி தீர்மானித்தல்

காப்புரிமை அற்றவை

ஒரு படிமமானது தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது விக்கிமீடியா பொதுமம் (Wikimedia Commons) தளத்திலோ இருந்தால் அந்த படிமத்தின்மீது அழுத்தி, அப்படிமத்தின் விவரணப் பக்கத்திற்கு சென்று படிமம்பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். பொதுவாக விக்கிப்பீடியாவில் காணப்படும் படிமங்கள் யாவும் காப்புரிமைக்கு உட்படாதவை (Free License Images). ஆதலால், அங்கிருக்கும் படங்களை அனுமதியெதுவுமின்றி எவரும் பயன்படுத்த முடியும். விக்கிமீடியா பொதுமம் தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும் படிமங்கள், மிக இலகுவாக தமிழ் உட்பட, எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும், விக்கிப்பீடியாவின் இணைத் திட்டங்களிலும் எடுத்துப் கையாளப்படக் கூடியவையாக இருக்கும். விக்கிப்பீடியா காமன்ஸ் என்பது அனைத்துமொழி விக்கிப்பீடியாக்களுக்கும் பொதுவான படிமங்களின் சேமிப்புக் கிடங்கு. ஆதலால் படிமம் ஒன்றை புதிதாக தரவேற்றம் செய்யும்போது, அதனை விக்கிமீடியா பொதுமம் தளத்தில் தரவேற்றம் செய்தல் சிறந்த முறையாகும். உங்கள் சொந்தப் படிமமொன்றை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது விக்கிமீடியா பொதுமம் தளத்திலோ தரவேற்றம் செய்யும்போது, அதை காப்புரிமை அற்றதாகச் செய்வீர்கள்.

காப்புரிமை உள்ளவை

படிமமானது ஏதாவதொரு இணையதளத்தில் இருக்கின்றதாயின், அவ்விணையத் தளத்தில் காப்புரிமைபற்றி ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கலாம். அப்படி எதையும் பார்க்க முடியாதவிடத்து, படிமத்தின் காப்புரிமை பற்றி அதனை உருவாக்கியவரை தொடர்பு கொண்டு பெறவேண்டும். அனேகமாக பக்கத்தை உருவாக்கியவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியதாக இருக்கும்.

காப்புரிமை உள்ள படிமங்களை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது விக்கிமீடியா பொதுமம் தளத்திலோ தரவேற்றம் செய்ய விரும்பினால், உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அப்படிமத்தை பயன்படுத்துவதற்கான முறையான அனுமதியைப் பெற வேண்டும். அத்துடன், உரிமையாளரிடம், நீங்கள் அந்தப் படிமத்தை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யும்போது, அது காப்புரிமை அற்றதாக்கப்படும் என்பதையும் எடுத்துக் கூறி அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதிபற்றிய விபரத்தை permissions-commons@wikimedia.org க்கு, குறிப்பிட்ட படிமத்தையும் இணைத்து மின்னஞ்சல் செய்ய வேண்டும்.

படிமங்களை கட்டுரையில் தரவேற்றும் முறை

படிமம் ஏற்கனவே உள்ளதா என அறிதல்

வேறு இணையத்தளங்களிலிருந்து பெறப்படும் ஒரு படிவமாயின், அது ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ளதா என்பதை பெயர்களைக் கொடுத்து தேடிப் பார்க்கலாம். அல்லது, தரவேற்றம் செய்யப்பட்டுள்ள படிமங்களின் பட்டியலை (தமிழ் விக்கிப்பீடியாவில் இந்தப் பட்டியல் உள்ளதா என்று தெரியவில்லை) சென்று பார்வையிடலாம்.

படிமங்களை விக்கிப்பீடியாவில் தரவேற்றல்

  • பயனர் கணக்கை வைத்திருக்கும் ஒருவரின் கணக்கானது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர் தனது கணக்கில் புகுபதிகை செய்த பின்னர் படிமத்தை தரவேற்றம் செய்ய முடியும்.
  • முதலில் படிமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்ய விரும்புகின்றீர்களாயின், தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில், வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், கோப்பைப் பதிவேற்று இணைப்பை சொடுக்கிச் செல்லுங்கள். விக்கிமீடியா பொதுமத்தில் தரவேற்றம் செய்ய விரும்பின், Wikimedia Commons இல் வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், Upload file இணைப்பைச் சொடுக்கிச் செல்லுங்கள்.
  • அங்கே காணப்படும் படிவத்தில் தேவையான விபரங்களை நிரப்புங்கள்.
  • உங்கள் கணினியிலுள்ள படிமக்கோப்பை (மூலக் கோப்பின் பெயர்) அதற்குரிய இடத்தில் தெரிவு செய்து, அதற்கான இலக்கு கோப்பின் பெயரையும் (தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் கொடுக்க விரும்பும் பெயர்) கொடுங்கள்.
  • ‘சுருக்கம்' என்ற இடத்தில் கோப்பைப் பற்றி சுருக்கமாக விபரம் கொடுங்கள். இது குறிப்பிட்ட கோப்புபற்றிய தேடலுக்கும், பயன்பாட்டிற்கும் பின்னாளில் உதவும்.
  • அனுமதி என்ற இடத்தில் படிமத்திற்கான பொருத்தமான காப்புரிமையை தெரிவு செய்ய வேண்டும். நீங்களே எடுத்த நிழற்படமோ, வரைந்த சித்திரமோ எனில் GNU விதிகள்படி அனைத்து உரிமைகளையும் துறக்கிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டும். அல்லாதுவிடின், பொருத்தமான காப்புரிமை வகையைத் தெரிவு செய்யும்போது, காப்புரிமை விதிகள் எதையும் நீங்கள் மீறாமல் இருக்க வேண்டும்.
  • பின்னர் 'கோப்பைப் பதிவேற்று' என்ற விசையை அழுத்தினால், உங்களது படிமம் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்டுவிடும்.

கட்டுரையில் படிமத்தை தரவேற்றம் செய்தல்

  • நீங்கள் தரவேற்றம் செய்த படிமத்தின் பெயரை, உங்கள் கட்டுரையின் தொகுப்பில் இட வேண்டும். உதாரணத்திற்கு படிமம்:நுங்கு1.JPG என்ற படிமமானது, பனம்பழம் என்ற கட்டுரையின் தொகுப்பில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டு, உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

படிமம்:நுங்கு1.JPG|rightt|thumb|150px|குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு

இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட பெயர் நுங்கு1.JPG என்பதாகவும், கட்டுரையில் குறிப்பிட்ட படிமத்திற்கு வழங்கப்பட்ட பெயர், குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு என்று இருப்பதையும் காணலாம். அத்துடன், கட்டுரையில் படம் அமந்திருக்கும் இடம், படிமத்தின் அளவு என்பனவும் குறிப்பிட்ட வார்ப்புருவில் மாற்றியமைக்கப் படலாம்.

மேலும் பார்க்க