டி. ஆர். ராஜகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி date of death
வரிசை 1: வரிசை 1:
[[Image:ராஜகுமாரி.jpg|thumb|right|170px|ராஜகுமாரி]]
[[Image:ராஜகுமாரி.jpg|thumb|right|170px|ராஜகுமாரி]]
'''டி.ஆர் ராஜகுமாரி''' (பி. [[மே 5]], [[1922]]) [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரையுலகின்]] முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.
'''டி.ஆர் ராஜகுமாரி''' (பி. [[மே 5]], [[1922]]. - இ. செப்டம்பர் 20, 1999) [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரையுலகின்]] முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==

06:05, 14 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

படிமம்:ராஜகுமாரி.jpg
ராஜகுமாரி

டி.ஆர் ராஜகுமாரி (பி. மே 5, 1922. - இ. செப்டம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ் பெற்ற இசை (சங்கீத) மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரைப் பறிகொடுத்தவர்.

திரைப்படத்துறையில்

1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மந்தாரவதி, சூர்யபுத்ரி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது. பல புகழ் பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். பி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

  • குமார குலோத்துங்கன்
  • மந்தாரவதி
  • சூர்யபுத்ரி
  • சதி சுகன்யா
  • மனோன்மணி
  • சிவகவி
  • குபேர குசேலா
  • சாலிவாஹன்
  • பிரபாவதி
  • ஹரிதாஸ்
  • வால்மீகி
  • விஸ்வாமித்ரா
  • பங்கஜவல்லி
  • விகடயோகி
  • சந்திரலேகா
  • கிருஷணபக்தி
  • பவளக்கொடி
  • விஜயகுமாரி
  • இதயகீதம்
  • வனசுந்தரி
  • தங்கமலை ரகசியம்
  • மனோகரா

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._ராஜகுமாரி&oldid=494824" இலிருந்து மீள்விக்கப்பட்டது