பேச்சு:பெண்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: இந்தக் கட்டுரையின் நோக்கம் சரியானதன்று. இக்கட்டுரையில் உள்...
(வேறுபாடு ஏதுமில்லை)

12:37, 8 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

இந்தக் கட்டுரையின் நோக்கம் சரியானதன்று. இக்கட்டுரையில் உள்ள வரியொன்றை முதலில் குறிப்பிடுகிறேன்.

"இந்நிலையில் இச்சொல்லுக்கு மேற்காண்கின்ற தவறான இழிவான பொருட்களைக் கூற எப்படித் துணிந்தனர் அகராதி இயற்றியோர்?"

உடலின் பாகங்களில் ஒன்றை இழிவானதாகக் கருதும் குறுகிய மனப்பான்மை பழந்தமிழ்ப் புலவர்களுக்கு இருந்ததில்லை.

ஒரு தமிழ்ச் சொல்லுக்கு பல பொருள்கள் இருப்பது இயல்பே. தாங்கள் மேற்கோள் காட்டியிருப்பதற்கு நிகராகவும் அதற்கு அதிகமாகவும் சங்க இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் 'அல்குல்' எனும் சொல் 'பெண்குறி' எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளது.
(எ‍.கா)
சிலம்பு (அந்திமாலைச் சிறப்புசெய் காதை, அடிகள் 29,30)

செந்துகிர்க் கோவை சென்றேந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த
....

மேகலை என்பது இடுப்புப் பகுதியில் அணியப்படும் அணி என்பதால் 'அல்குல்' எனும் சொல்லின் பொருளை உய்த்தறிக. அடியார்க்கு நல்லார் உரையிலும் அரும்பத உரையிலும் இவ்வாறே குறிப்பிட்டிருப்பதை ஆராய்க.

இதைப் போல் பல எடுத்துக்காட்டுகள் இருப்பதின் காரணத்தால், இக்கட்டுரையை நீக்கக் கோருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெண்குறி&oldid=492356" இலிருந்து மீள்விக்கப்பட்டது