மொத்த உள்நாட்டு உற்பத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gd:Làn-thoradh Dùthchail
சி தானியங்கிஇணைப்பு: yo:Gbogbo Ìpawó Orílẹ̀-èdè
வரிசை 78: வரிசை 78:
[[vec:PIL]]
[[vec:PIL]]
[[vi:Tổng sản phẩm nội địa]]
[[vi:Tổng sản phẩm nội địa]]
[[yo:Gbogbo Ìpawó Orílẹ̀-èdè]]
[[zh:国内生产总值]]
[[zh:国内生产总值]]

02:02, 21 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

ஒரு நிலப்பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது மொத்த தேசிய உற்பத்தி (Gross Domestic Product அல்லது GDP) என்பது, அப்பகுதியின் பொருளாதாரத்தின் அளவை அறிய உதவும் அளவைகளுள் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியுள், ஒரு ஒரு நிலப்பகுதியின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்களினதும், சேவைகளினதும் சந்தைப் பெறுமதியே மொத்த உள்நாட்டு உற்பத்தி என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளப்பதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பொதுவாகப் பயன்படுவது செலவின முறையாகும் (expenditure method).

மொ.உ.உ = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி)

இதனுள் மூலதனப் பண்டங்களின் தேய்வும் சேந்திருப்பதன் காரணமாக மொத்த உற்பத்தி என்று குறிப்பிடப் படுகின்றது. இச் சமன்பாட்டில் நுகர்வும், முதலீடும் முற்றுப்பெற்ற பொருட்களினதும், சேவைகளினதும் மீதான செலவினங்களாகும்.

தற்காலத்தில் பொருளியலாளர்கள் நுகர்வை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கருதுகிறார்கள். அவை தனியார் நுகர்வு, பொதுத்துறைச் செலவினம் என்பனவாகும்.