சோ. ராமேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14: வரிசை 14:
* ''முகவரியைத் தேடுகிறார்கள்''
* ''முகவரியைத் தேடுகிறார்கள்''
* ''போராட்டம்''
* ''போராட்டம்''
* ''கானல் நீர் கங்கையாகிறது''


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

11:00, 20 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

சோ.ராமேஸ்வரன் (மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடி, இலங்கை) ஈழத்து எழுத்தாளர். இவர் எஸ்.ராமேஷ், ஆத்தியடியூரான், புஷ்பா தங்கராஜா, ஆர்.பிரசன்னா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். தற்சமயம் கொழும்பில் வாழ்கிறார்.

எழுத்துலக வாழ்வு

இவர் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், விமர்சனக்கட்டுரைகள், பேட்டிக்கட்டுரைகள் போன்றவற்றை எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது படைப்புக்கள் இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.

தொழில்

வீரகேசரி நிறுவனத்தின் உதவி ஆசிரியர், விவரண ஆசிரியர் ஆகிய பதவிகளை 1974-1980 காலப்பகுதியில் வகித்தார். 1980 முதல் கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் தகவல் வெளியீட்டு உத்தியோகத்தராகக் கடமையாற்றுகிறார். கமலநலம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்குகிறார்.

வெளிவந்த நூல்கள்

  • சுதந்திரக் காற்று (1994)சிறுகதைகள்
  • யோகராணி கொழும்புக்குப் போகிறாள் (1992)நாவல்
  • இவர்களும் வாழ்கிறார்கள் (1993)நாவல்
  • இலட்சியப் பயணம் (1994) நாவல்
  • முகவரியைத் தேடுகிறார்கள்
  • போராட்டம்
  • கானல் நீர் கங்கையாகிறது

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._ராமேஸ்வரன்&oldid=473738" இலிருந்து மீள்விக்கப்பட்டது