சத்தியேந்திர நாத் போசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: et:Satyendranath Bose
சி தானியங்கிஇணைப்பு: tr:Satyendra Nath Bose
வரிசை 61: வரிசை 61:
[[sl:Satjendra Nat Bose]]
[[sl:Satjendra Nat Bose]]
[[sv:Satyendra Nath Bose]]
[[sv:Satyendra Nath Bose]]
[[tr:Satyendra Nath Bose]]
[[uk:Шатьєндранат Бозе]]
[[uk:Шатьєндранат Бозе]]
[[zh:薩特延德拉·納特·玻色]]
[[zh:薩特延德拉·納特·玻色]]

09:46, 12 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

சத்தியேந்திர நாத் போசு
சத்தியேந்திர நாத் போசு
பிறப்பு(1894-01-01)1 சனவரி 1894
கோல்கத்தா, இந்தியா
இறப்பு4 பெப்ரவரி 1974(1974-02-04) (அகவை 80)
கோல்கத்தா, இந்தியா
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கோல்கத்தா பல்கலைக்கழகம்
தாக்கா பல்கலைக்கழகம்
அறிவியல் பல்கலைக்கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்பிரசிடென்சி கல்லூரி
அறியப்படுவதுபோசு-ஐன்ஸ்டைன் செறிபொருள், போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல், போசு வளிமம்

சத்தியேந்திர நாத் போசு (Satyendra Nath Bose, வங்காளம்: সত্যেন্দ্র নাথ বসু, ஜனவரி 1, 1894 - பெப்ரவரி 4, 1974) இந்திய இயற்பியலாளர் ஆவார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர் கணித இயற்பியலில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். இவர் 1920களில் குவாண்டம் பொறிமுறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும் அதன் மூலம் போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள், போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். போசோன் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.

போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் உருவான வரலாறு

மட்டுவ இயற்பியல் (குவாண்டம் இயற்பியல்) உருவாகக் காரணமாயிருந்த பிளாங்கின் 'தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங்' என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்கு ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார்.

உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே என்ற குறிக்கோள் கொண்டிருந்த சத்யேந்திரநாத்தால் பிளாங்கின் வழிமுறையை ஏற்க முடியவில்லை. உடனே அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் பிறந்தது தான் போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல். இதைச் செய்தபோது போசுக்கு வயது முப்பது.

கல்லூரி ஆசிரியராக

1916ல் சத்யேந்திரநாத் 'அறிவியல் பல்கலைக்கல்லூரி'யில் ஆசிரியராக சேர்ந்தபோது அவருடன் ஆசிரியப்பணியில் சேர்ந்தவர் மேக்நாத் சாகா. அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் பழைய இயற்பியலையே கற்பித்துக் கொண்டிருந்த நிலையில் இவ்விருவரும் நடப்பு இயற்பியலில் ஏற்பட்டுக் கொண்டிருந்த புரட்சிகரமான புதிய தத்துவங்களைப் பற்றி அறிவதிலும் அவற்றைக் கற்பிப்பதிலும் ஆர்வம் செலுத்தினர்.

செர்மன் கற்றல்

ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வுக்கட்டுரையை பெரும் சிரமத்திற்குப் பின்னர் பெற்றனர் சத்யேந்திரநாத்தும் சாகாவும். (முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அல்லவா!) பின்னர் தான் தெரிந்தது, கட்டுரை செர்மன் மொழியில் இருந்தது என்று. போசு மனம் தளராதவர் அல்லவா! தானும் கற்று, சாகாவிற்கும் செர்மன் மொழியைக் கற்றுத்தந்து, பின்னர் அந்த ஆய்வுக்கட்டுரையை இருவரும் படித்தனர்!! அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர். ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் தத்துவம் ஆய்வுக்கட்டுரையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் என்ற பெருமையை அடைந்தனர்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியேந்திர_நாத்_போசு&oldid=470900" இலிருந்து மீள்விக்கப்பட்டது