மத்தேயு நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: es:Evangelio de Mateo
சி தானியங்கிஅழிப்பு: ka:მათეს სახარება
வரிசை 66: வரிசை 66:
[[ja:マタイによる福音書]]
[[ja:マタイによる福音書]]
[[jv:Injil Matius]]
[[jv:Injil Matius]]
[[ka:მათეს სახარება]]
[[ko:마태오 복음서]]
[[ko:마태오 복음서]]
[[la:Evangelium secundum Matthaeum]]
[[la:Evangelium secundum Matthaeum]]

09:39, 2 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

புனித மத்தேயு,
புனித ஈசாக்கு தேவாலயம் பீட்டர்ஸ்பர்க்,இரசியா

மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டின் முதலாவது நூலாகும்.இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது கேள்விக்குரியதே. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்கப்பட்ட கருத்தாகும். மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு,லூக்கா என்பவற்றுடன் பொதுவான வசன எடுத்தாள்கையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.

அமைப்பு

இந்நூல் மொத்தம் 28 அதிகாரங்களை கொண்டுள்ளது. இந்நூலை பொதுவாக 4 பெரும் பிரிவுகளாக பிரித்து நோக்கலாம். ஒவ்வொன்றும் இயேசுவின் வாழ்கையின் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கிறது.

  1. இயேசுவின் வம்ச வரலாறு, பிறப்பு, குழந்தை பருவம் (அதிகாரம் 1-2)
  2. ஸ்நாபக யோவானின் பகிரங்க வாழ்வும் இயேசுவின் ஞானஸ்நானமும் (அதிகாரம் 3; 4:11)
  3. கலிலேயாவில் இயேசுவின் பகிரங்க வாழ்க்கை (4:12–26:1)
    1. மலைச் சொற்பொழிவு (அதிகாரம் 5-7)
    2. மறைபரப்பு பணிக்கு சீடரை பணிக்கிறார் (10-11:1)
    3. உவமைகள் (அதிகாரம் 13)
    4. கிறிஸ்தவரிடயேயான தொடர்புகள் (அதி 18-19:1)
    5. இரண்டாம் வருகை பற்றிய முன்னறிவித்தல் (அதிகாரம் 24-26:1)
  4. இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, மறை பரப்பு பணிப்பு (28:16–20)

இந்நூலின் முதன்மை நோக்கம் நாசரேத்தூர் இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா என்பதை வலியுறுத்துவது ஆகும். மேலும் இந்நூல், இயேசு பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களை நிறைவு செய்ய வந்தார் என்பதை முன்னிறுத்துகிறது. இதற்காக குறைந்தது 65 சூழல்களில் பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டுகிறது. இந்நூலின் அடிப்படை நோக்கத்தை பின்வரும் வசனம் நன்கு விளக்குகிறது.

(இயேசு:)"நியாயப் பிரமாணத்தையோ தீர்க்கதரிசனங்களையோ அழிக்க வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள் அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்"(5:17)

சில தகவல்கள்

புனித மத்தேயு எபிரேய (அரமய்க்) மொழியில் ஒரு நற்செய்தி எழுதியதாகவும் அது அழிந்து போனதாகவும் கருதப்படுகிறது. பிறகு அந்நூலின் கிரேக்க மொழிபெயர்ப்பு அல்லது மூல நூலுடன் பழக்கப்பட்ட ஒருவர் தொகுத்த விடயங்கள் புனித மத்தேயுவின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இது எழுதப்பட்ட காலம் குறித்த ஒருமித்த கருத்து கிடயாது. பொதுவாக கி.பி. 50-100 இடையிலான காலப்பகுதி எனக் கருதப்படுகிறது.

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தேயு_நற்செய்தி&oldid=454729" இலிருந்து மீள்விக்கப்பட்டது