உருவக அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "அணி இலக்கணம்" (using HotCat)
english wiki link
வரிசை 33: வரிசை 33:


[[பகுப்பு:அணி இலக்கணம்]]
[[பகுப்பு:அணி இலக்கணம்]]
[[en:Metaphor]]

11:21, 9 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

உருவக அணி என்பது அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது. உவமை அணியின் மறுதலை.


எடுத்துக்காட்டு

இதுதான் அது.

அவளின் முகம்தான் சந்திரன்.

  • பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.
  • மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி

இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.


எடுத்துக் காட்டுகள்

  • உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
  • உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)
  • உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
  • உருவக அணி - புலி வந்தான்
  • உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
  • உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)
  • உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
  • உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருவக_அணி&oldid=446673" இலிருந்து மீள்விக்கப்பட்டது