யோவான் நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: th:พระวรสารนักบุญยอห์น
வரிசை 104: வரிசை 104:
[[sv:Johannesevangeliet]]
[[sv:Johannesevangeliet]]
[[sw:Injili ya Yohane]]
[[sw:Injili ya Yohane]]
[[th:พระวรสารนักบุญจอห์น]]
[[th:พระวรสารนักบุญยอห์น]]
[[tl:Ebanghelyo ni Juan]]
[[tl:Ebanghelyo ni Juan]]
[[tr:Yuhanna İncili]]
[[tr:Yuhanna İncili]]

11:20, 27 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

புனித யோவான்,
புனித ஈசாக்கு தேவாலயம் பீற்றஸ்பேக், இரசியா

யோவான் நற்செய்தி கிறிஸ்தவ விவிலியத்தின் நான்காவது நூலாகும். மேலும் நான்கு நற்செய்தி நூல்களில் கடையானதுமாகும். இது முன்னைய மூன்று நற்செய்திகளைப் போலவே இயேசுவின் சரிதத்தை கூறினாலும் அமைப்பில் வேறுபட்டிருக்கிறது. இதில் வேத்தாந்த கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய உள்ளடக்கம்

யோவன் நற்செய்தியில் குற்ப்பிடப்ட்டுள்ள இயேசுவின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்.

  • கானாவூர் கல்யாணம்
  • இது என் செப வீடு…
  • 5000 பேருக்கு உணவளித்தல்
  • இயேசு நீரின் மேல் நடத்தல்
  • நல்ல ஆயன் உவமை
  • இயேசு இலாசறசை உயிர்பித்தல்
  • கோதுமை மணி
  • திராட்சச்செடி
  • வெற்றுக் கல்லரை
  • இயேசுவின் உயிர்ப்பும் சீட்ருக்கு காட்சி கொடுத்தலும்
  • பின்னுரை

எழுத்தாளர்

இந் நற்செய்தியில் இயேசுவின் பிரியமான சீடரால் எழுதப்பட்டது என குறிப்பிடப் பட்டுள்ளது. இயேசுவின் பிரியமான சீடர் என அழைக்கப்பட்டவர் அப்போஸ்தலரான யோவான் என்பது சம்பிரதாயமான வழக்கமாகும். யோவான் நற்செய்தி கிறிஸ்தவ விவிலியத்திலுள்ள நான்கு நற்செய்திகளில் கடைசியாக எழுதப்பட்டதாகும்.

யோவான் நற்செய்தியானது வேறு நபர்களால் எழுதப்பட்டதென பல ஆய்வாளர் கோரிய்ருக்கின்றனர்.எனினும் றேமன் கே. ஜுசினோ (Ramon K. Jusino) எனபவரால் 1998 இல் மொமொழியப்பட்ட தத்துவம் மிகவும் மிகப்பிரசித்தமானதும் சர்சைக்குறியதுமாகும்.இவர் யோவான் நற்செய்தி மர்தலேன் மரியாளால் எழுதப்பட்டது என்ற வாதத்தை முன்வைத்தார். இயேசுவல் மரணத்திலிருந்து உயிர்பிக்க பட்டதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள இலாசரஸ் இந்நூலை எழுதினார் என்பதுவும் இன்னுமொரு வாதமாகும்.

நாள்

இது கி.பி. 65-85 இடையான காலப்பகுதியில் எழுதப்பட்டதாக மிதவாத ஆய்வாளரின் கருத்தாகும். எனினும் இது கி.பி. 90-120 இடயிலேயெ எழுதப்பட்டதாக முன்னோடி ஆய்வள்ரின் கருத்தாகும்.

மற்றைய நற்செய்திகளுடன் ஒப்பீடு

மற்றைய மூன்று விவிலிய நற்செய்திகளிருந்து யோவான் மைகவும் வேறுப்ட்டு காணப்படுகிறது. சில வேறுபாடுகளாவன

  • கடவுளின் இராச்சியம் என்ற பிரயோகம் இருமுறை மட்டுமே பயண்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய நற்செதிகளில் இது பலமுகள் பயண்படுத்தப்பட்டுள்ளது.
  • “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்ற இயேசுவின் வாய்மொழி வசனம் காண்ப்படவில்லை.
  • இயேசுவி உவமைகள் காணப்படவிலலை.
  • இயேசு பேய்களை ஓட்டினார் என மற்றைய மூன்று நற்செதிகளான மத்தேயு, மாற்கு, லூக்காவில் குறிப்பிடப் பட்டிருந்தாலும் யோவான் நற்செய்தியில் இது குறிப்பிடப்படவில்லை.
  • இயேசு செய்த்தாக மற்றைய மூன்று நற்செதிகளிலும் குறிப்பிடப் பட்டிருக்கும் புதுமைகள் பல யோவான் நற்செய்தியில் காணப்படுவதில்லை. மாறாக ஒரு சில புதுமைகள் மிக நீளமாக விவரிக்கப்படுள்ளது.
  • இயேசுவின் முக்கிய போதனையாக கருதப்படும் மலைப் பிரசங்கம் காணப்படவில்லை.
  • இயேசுவின் வாய்மொழிகள் தொடர்பில், மத்தேயு மாற்கு லூக்கா நற்செய்திகள் தோமயாரின் நற்செய்தியுடன் (இது விவிலியதில் சேர்க்கப்படாத நற்செய்தி நூலாகும்) சமாந்தர கருத்துகளை கொண்டிருந்தாலும் யோவான் நற்செய்தி முற்றாக இணங்கா நிலையை காட்டுகிறது.
  • இயேசு ஆலயத்தில் வியாபாரிகளை விரட்டும் சம்வம் மத்தேயு மாற்கு லூக்கா நற்செய்திகளில் இயேசுவின் மரணத்துக்கு அண்மித்த சம்பவமாக குறிப்பிடபட்டுள்ளது. இது யோவான் நற்செய்தியில் இயேசு தனது பகிரங்க வாழ்வை தொடங்கியபோது (மரணத்துக்கு 3 வருடம் முன்) நடந்த்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோவான்_நற்செய்தி&oldid=442605" இலிருந்து மீள்விக்கப்பட்டது