திசம்பர் 27: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கிஇணைப்பு: mhr |
||
வரிசை 123: | வரிசை 123: | ||
[[lt:Gruodžio 27]] |
[[lt:Gruodžio 27]] |
||
[[lv:27. decembris]] |
[[lv:27. decembris]] |
||
[[mhr:27 чатлама]] |
|||
[[mk:27 декември]] |
[[mk:27 декември]] |
||
[[ml:ഡിസംബര് 27]] |
[[ml:ഡിസംബര് 27]] |
05:49, 14 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
டிசம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 361வது நாளாகும். நெட்டாண்டுகளில் 362வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 4 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 537 - ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.
- 1703 - இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கு ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.
- 1831 - சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
- 1836 - இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் இடம்பெற்றது. 8 பேர் கொல்லப்பட்டனர்.
- 1845 - பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
- 1864 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1918 - ஜேர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.
- 1922 - ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது.
- 1923 - ஜப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்.
- 1934 - பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.
- 1939 - துருக்கியில் ஏர்சின்கன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1945 - 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது.
- 1949 - இந்தோனீசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
- 1956 - தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- 1968 - சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
- 1978 - ஸ்பெயின் 40வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.
- 1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.
- 1985 - ரோம் மற்றிம் வியன்னா விமானநிலையங்களில் பாலஸ்தீன தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
- 1996 - தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.
- 1997 - வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2000 - யாழ்ப்பாணம், தென்மராட்சி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற எட்டு பொதுமக்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 2002 - செச்சினியாவில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.
- 2007 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
பிறப்புகள்
- 1571 - ஜொஹான்னெஸ் கெப்லர், ஜேர்மானிய அறிவியலாளர் (இ. 1630)
- 1654 - ஜேக்கப் பெர்னோலி, சுவிஸ் கணிதவியலாளர் (இ. 1705)
- 1796 - மிர்சா காலிப், உருதுக் கவிஞர் (இ. 1869)
- 1822 - லூயி பாஸ்டர், பிரெஞ்சு அறிவியலாளர் (இ. 1895)
- 1901 - மர்லீன் டீட்ரிக், அமெரிக்க நடிகை, பாடகி (இ. 1992)
- 1965 - சல்மான் கான், இந்தி நடிகர்
இறப்புகள்
- 1922 - தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பாளி அறிஞர் (பி. 1843)
- 1923 - அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர் (பி. 1832)
- 1979 - ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் (பி. 1929)
- 2007 - பெனசீர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் (பி. 1953)