திசம்பர் 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கிஇணைப்பு: mhr |
||
வரிசை 124: | வரிசை 124: | ||
[[lt:Gruodžio 8]] |
[[lt:Gruodžio 8]] |
||
[[lv:8. decembris]] |
[[lv:8. decembris]] |
||
[[mhr:8 чатлама]] |
|||
[[mk:8 декември]] |
[[mk:8 декември]] |
||
[[ml:ഡിസംബര് 8]] |
[[ml:ഡിസംബര് 8]] |
02:05, 14 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
டிசம்பர் 8 கிரிகோரியன் ஆண்டின் 342வது நாளாகும். நெட்டாண்டுகளில் 343வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 23 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1609 - இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்.
- 1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
- 1881 - ஆஸ்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர்.
- 1912 - அல்பேனியாவின் "கோர்சே" நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹொங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர்.
- 1941 - பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா ஜப்பான் மீது போரை அறிவித்தது.
- 1941 - பசிபிக் போர்: சீனக் குடியரசு ஜப்பான் மீது போரை அறிவித்தது.
- 1941 - பசிபிக் போர்: சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு ஜப்பான் மற்றும் ஜெர்மனி மீது 1910 இல் இருந்து ஜப்பான் வசமிருந்த கொரிய மக்கள் சார்பாக போரை அறிவித்தது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: வேக் தீவு மீது ஜப்பான் முதற்தடவையாக போர் தொடுத்தது.
- 1941 - பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.
- 1942 - பெரும் இன அழிப்பு: உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.
- 1949 - சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது.
- 1953 - அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
- 1963 - மேரிலாதில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் கொல்லப்பட்டனர்.
- 1966 - கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில் உள்ள ஆயிஜியன் கடலில் மூழ்கியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
- 1969 - கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
- 1972 - சிக்காகோவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
- 1980 - பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1982 - சுரினாமில் இராணுவ ஆட்சிக்கெதிரான பலர் கொல்லப்பட்டனர்.
- 1982 - சூரினாமில் இராணுவ ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.
- 1985 - சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
- 1987 - பெருவின் தலைநகர் லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணஞ்செய்த பெருவின் உதைபந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர்.
- 1991 - சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.
- 1998 - அல்ஜீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புக்கள்
- கிமு 65 - ஹோராஸ், அகஸ்டசின் காலத்தில் வாழ்ந்த ஒரு முன்னணி இத்தாலியக் கவிஞர் (கிமு 8]]
- 1935 - தர்மேந்திரா, இந்திய நடிகர்
- 1946 - சர்மிளா தாகூர், இந்திய நடிகை
- 1947 - தாமஸ் சிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
- 1976 - நிருபமா வைத்தியநாதன், இந்திய டென்னிஸ் வீராங்கனை
- 1985 - டுவைட் ஹவர்ட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
- 1980 - ஜான் லெனன், ஆங்கிலப் பாடலாசிரியர், இசையமைப்பாளர் (பி. 1940
சிறப்பு நாள்
- ருமேனியா - அரசியல் சாசன நாள்
- பல்கேரியா - மாணவர் நாள்
- ஆஸ்திரியா - பொது விடுமுறை
- மோல்டா - பொது விடுமுறை
- பனாமா - தாயார் தினம்