ஆத்திரேலியத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 157: வரிசை 157:
===வானொலி சேவைகள்===
===வானொலி சேவைகள்===
அவுஸ்திரேலியாவில் பல [[வானொலி]] நிலையங்களைப் பயன்படுத்தித் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தமிழ் அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் ஒலிபரப்புகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் பல [[வானொலி]] நிலையங்களைப் பயன்படுத்தித் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தமிழ் அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் ஒலிபரப்புகின்றனர்.
* [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை (ஆஸ்திரேலியா)|சிறப்பு ஒலிபரப்புச் சேவை]] - (''SBS - Special Broadcasting Service'') அவுஸ்திரேலியாவில் முதன் முதலில் தமிழ் ஒலிபரப்பை மேற்கொண்டது. இவ்வொலிபரப்பு [[1978]] இல் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினரால் தொடங்கப்பட்டது.
* [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]] - (''SBS - Special Broadcasting Service'') அவுஸ்திரேலியாவில் முதன் முதலில் தமிழ் ஒலிபரப்பை மேற்கொண்டது. இவ்வொலிபரப்பு [[1978]] இல் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினரால் தொடங்கப்பட்டது.
* [[இன்பத் தமிழ் ஒலி]] - முதன்முதலில் இவ்வானொலி நிலையமே தினமும் 24மணி நேரமும் தமிழ் நிகழ்ச்சிகளை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதும் [[1996]] முதல் [[சிட்னி]]யிலிருந்து ஒலிபரப்பத் தொடங்கியது. இதுவே உலகின் இரண்டாவது 24மணி நேர தமிழ் வானொலியாகும். தனக்கென தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ளது.
* [[இன்பத் தமிழ் ஒலி]] - முதன்முதலில் இவ்வானொலி நிலையமே தினமும் 24மணி நேரமும் தமிழ் நிகழ்ச்சிகளை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதும் [[1996]] முதல் [[சிட்னி]]யிலிருந்து ஒலிபரப்பத் தொடங்கியது. இதுவே உலகின் இரண்டாவது 24மணி நேர தமிழ் வானொலியாகும். தனக்கென தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ளது.



09:54, 13 மார்ச்சு 2009 இல் நிலவும் திருத்தம்

ஆஸ்திரேலியத் தமிழர் (அல்லது அவுஸ்திரேலியத் தமிழர், தமிழ் அவுஸ்திரேலியர்கள்) எனப்படுவோர் தமிழ் பின்புலத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள். 1970 ஆம் ஆண்டில் இருந்தே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்னர் தொழில் அநுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார நோக்கிலும் குடிபெயர்தல் அதிகரித்தமையின் விளைவாகவும் 1983 இலிருந்து பெருமளவில் தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.

தமிழரின் குடித்தொகை

தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின்படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது.

அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் தமிழரின் குடித்தொகை விபரத்தை பின்வரும் அட்டவணையில் காணலாம்:

மாநிலம்/மண்டலம்

1991 1996 2001 2006[1]
நியூ சவுத் வேல்ஸ் 4,994 9,072 12,087
விக்ரோறியா 4,042 6,251 7,968
மேற்கு அவுஸ்திரேலியா 823 1,110 1,368
குயின்ஸ்லாந்து 499 895 1,149
தெற்கு அவுஸ்திரேலியா 415 502 536
அவுஸ்திரேலியத் தலைநகர் மண்டலம் 381 618 751
வட மண்டலம் 154 158 126
தாஸ்மானியா 68 74 82

மொத்தம்

11,376 18,690 24,067[2]

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை கலாநிதி ஆ. கந்தையா குறிப்பிடுகிறார்:

  • வாழ்வதற்கு உகந்த தட்ப-வெப்ப நிலை.
  • வேலை வாய்ப்பு மிகுந்த மாநிலம்.

பிறந்த நாடுகள் அடிப்படையில்

அரசின் குடித்தொகை பதிப்புகள், அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிறந்த நாடுகளையும் எண்ணிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளன:

பிறந்த நாடு

1996 2001 2006[1]
அவுஸ்திரேலியா 1,772 2,420
இலங்கை 10,504 12,901
இந்தியா 3,721 5266
மலேசியா 1,309 1,381
சிங்கப்பூர் 599 788
பிரித்தானியா 198 176
தென் ஆபிரிக்கா 102 00
ஐரோப்பிய நாடுகள் 59 105
நியூசீலாந்து 36 121
பீஜி 24 27
அமெரிக்கா/கனடா 26 53

முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள்

1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது.

கலாநிதி ஆ. கந்தையா அவர்களின் ஆய்வின் படி, முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். இவர் இலங்கைப் பின்னணியைக் கொண்ட மலேசியத் தமிழர். 1953இல் தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டுக்கு உயர்கல்வி பெற வந்தவர். மேற்கத்திய இசையில் உலகப்புகழ் பெற்ற கலைஞர். இப்போது சிட்னியில் வாழ்ந்து வருகிறார்.

தமிழ் அமைப்புகள்

தமிழ் பள்ளிகள்

எதிர்ப்புப் போராட்டங்கள்

பாக்க: பெப்ரவரி 5, 2009 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழர் பேரணி

தமிழ் ஊடகங்கள்

தொலைக்காட்சி சேவைகள்

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதற்குமாக 24 மணி நேர தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள் இரண்டு சிட்னியிலிருந்து ஒளிபரப்பாகின்றன.

வானொலி சேவைகள்

அவுஸ்திரேலியாவில் பல வானொலி நிலையங்களைப் பயன்படுத்தித் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தமிழ் அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் ஒலிபரப்புகின்றனர்.

  • சிறப்பு ஒலிபரப்புச் சேவை - (SBS - Special Broadcasting Service) அவுஸ்திரேலியாவில் முதன் முதலில் தமிழ் ஒலிபரப்பை மேற்கொண்டது. இவ்வொலிபரப்பு 1978 இல் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினரால் தொடங்கப்பட்டது.
  • இன்பத் தமிழ் ஒலி - முதன்முதலில் இவ்வானொலி நிலையமே தினமும் 24மணி நேரமும் தமிழ் நிகழ்ச்சிகளை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதும் 1996 முதல் சிட்னியிலிருந்து ஒலிபரப்பத் தொடங்கியது. இதுவே உலகின் இரண்டாவது 24மணி நேர தமிழ் வானொலியாகும். தனக்கென தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ளது.
  • தமிழ் முழக்கம் - சிட்னியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு மட்டும் 1992 முதல் ஈழத் தமிழர் கழகத்தினரால் சனிக்கிழமைகளில் 2 மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
  • தமிழ்க் குரல் - விக்ரோறியா ஈழத் தமிழ்ச் சங்கத்தினரால் 1984 முதல் திங்கள் தோறும் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகின்றது.
  • தமிழ் ஓசை - விக்ரோறியா இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினரால் 1987 முதல் வியாழன் தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
  • சங்கநாதம் - விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரச் சங்கத்தினரால் 1993 முதல் வாரம் ஒரு முறை ஒலிபரப்பப்படுகின்றது.
  • தமிழ்ப் பூங்கா - மெல்பர்ணிலிருந்து 2001 முதல் வாரம் இரு மணி நேரம் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி இலங்கை, இந்தியா மட்டுமன்றி அனைத்து நாடுகளிலுமிருந்து விக்ரோறியா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தமிழரை இலக்காகக் கொண்டு ஒலிபரப்படுகின்றது.
  • வடமண்டலத் தமிழ் வானொலி - வட மண்டலத்திலிருந்து வாரம் இரு முறை ஒரு மணி நேரம் ஒலிபரப்படும் இந்நிகழ்ச்சி 1982 ஆம் ஆண்டில் கர்நாடக சங்கீத சபை ஆதரவில் தொடங்கப்பட்டது. பின்னர் வட மண்டலத் தமிழ்ச் சங்க ஆதரவில் ஒலிபரப்பப்படுகின்றது.
  • பிறிஸ்பன் தமிழ் ஒலி - பிறிஸ்பனில் இருந்து 1986 முதல் ஞாயிறு தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பாகின்றது.
  • தமிழ் ஒலி - பேர்த்தில் இருந்து 1981 முதல் திங்கள் தோறும் அரை மணி நேரம் ஒலிபரப்பாகின்றது.
  • தமிழ்ச் சோலை - பேர்த்தில் இருந்து 1996 முதல் வெள்ளி தோறும் ஒலிபரப்பாகின்றது. இது மேற்கு அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தினரால் நடத்தப்படுகின்றது.
  • தமிழ்ச் சங்க வானொலி - கன்பரா தமிழ்ச் சங்கம் 1987 தொடக்கம் வியாழன் தோறும் ஒர் மணிநேரம் இந்நிகழ்ச்சியினை நடத்துகின்றது.

செய்திப் பத்திரிகைகள்

அவுஸ்திரேலியாவில் இரண்டு தமிழ் செய்திப் பத்திரிகைகள் வெளிவருகின்றன.

இவை இரண்டும் மெல்பர்ணில் இருந்து வெளிவருகின்றன. இரண்டுமே அவுஸ்திரேலியா முழுவதும் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

சஞ்சிகைகள்

தமிழ் நூலகங்கள்

தமிழர் அதிக எண்ணிக்கையில் வாழும் உள்ளூராட்சிப் பகுதிகளிலுள்ள பொது நூலகங்களில் தமிழ் நூல்களை இடம்பெறச் செய்வதற்கு அரசாங்கம் நிதி உதவி செய்கின்றது. அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள், தமது மாநிலங்களில் தமிழ் நூலகங்களை நிறுவுவதற்கும் முயன்று வருகின்றனர்.

  • தமிழ் அறிவகம் சிட்னியில் 1991 முதல் இயங்கி வருகின்றது. இது கிட்டத்தட்ட 7,000 தமிழ் நூல்களையும், அறிக்கைகளையும், ஆய்வு நூல்களையும் கொண்டுள்ளது. தமிழ்ப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இங்கு பார்வைக்கு உள்ளன.
  • கன்பரா தமிழர் ஏடகம் 1999 முதல் கன்பராவில் இயங்கி வருகின்றது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. 1.0 1.1 2006 ஆம் ஆண்டு அரசாங்கக் குடிசன மதிப்பீட்டு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை
  2. வீட்டில் பேசும் மொழி (AUSTRALIAN BUREAU OF STATISTICS 2001)

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திரேலியத்_தமிழர்&oldid=352052" இலிருந்து மீள்விக்கப்பட்டது