1 கிளமெண்ட் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9: வரிசை 9:


[[Category:Articles containing Ancient Greek (to 1453)-language text]]
[[Category:Articles containing Ancient Greek (to 1453)-language text]]
[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]

02:55, 5 பெப்பிரவரி 2022 இல் நிலவும் திருத்தம்

1 கிளமெண்ட் என்பது கொரிந்து நகரத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு முதலாம் கிளமெண்ட் எழுதிய திருமுகமாகும். சான்றுகளின் அடிப்படையில் சில அறிஞர்கள் இக்கடிதம் கி.பி. 70க்கு முன்பு எழுதப்பட்டதாக மதிப்பிடுகிறார்கள்.[1] கிளமெண்ட் என்ற பெயரில் வேறொரு நூலும் உள்ளதால் இது 1 கிளமெண்ட் என்றழைக்கப்படுகிறது. எனினும் மற்றொரு நூலானது வேறொரு ஆசிரியரின் பிற்காலப் படைப்பாகும்.

இத்திருமுகமானது தொடக்கக்கால திருத்தந்தையர் தொகுப்பில் இடம்பெற்றிருந்தது.[2] கோப்திக் மரபுவழித் திருச்சபை இத்திருமுகத்தை புதிய ஏற்பாட்டு திருமுறையின் பகுதியாக ஏற்கின்றது.[3] கொரிந்து திருச்சபையில் நடந்த நிகழ்வுகளுக்கு மறுமொழியாக இத்திருமுகம் எழுதப்பட்டுள்ளது. அப்போது சபையின் சில மூப்பர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். எனவே சபையினர் மனந்திரும்பவும், மூப்பர்களை மீண்டும் பதவியில் அமர்த்தவும், மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படியவும் திருமுகத்தின் ஆசிரியர் அழைப்பு விடுத்தார். மேலும் திருத்தூதர்களே திருச்சபையின் தலைமையை நியமித்ததாகவும், ஊழியத்தை எவ்வாறு நிலைநிறுத்துவது என்று அவர்களுக்கு வழிகாட்டியதாகவும் கூறினார்.

உரோமைத் தலைமைக்குருவான கிளெமென்ட் I இத்திருமுகத்தை எழுதிய ஆசிரியர் என்று கருதப்படுகிறது. கொரிந்து சபையில், இக்கடிதம் காலங்காலமாக சத்தத்துடன் வாசிக்கப்பட்டது. இந்நடைமுறை மற்ற திருச்சபைகளுக்கும் பரவியது, மேலும் கிறிஸ்தவர்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இத்திருமுகத்தை லத்தீன், சிரியாக் மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்த்தனர். சில தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் இத்திருமுகத்தை இறை வார்த்தையாகக் கருதினர். இத்திருமுகம் பல நூற்றாண்டுகளாக காணாமல் போயிருந்தது, ஆனால் 1600 களில் இருந்து பல்வேறு பிரதிகள் அல்லது துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இது தொடக்கக்காலத் திருச்சபையின் கட்டமைப்பைப் பற்றிய மதிப்புமிக்க சான்றுகளை வழங்கியுள்ளது.

மேற்கோள்கள்

  1. Harris p. 363
  2. "CHURCH FATHERS: The Apostolic Canons". www.newadvent.org. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
  3. "Theological Perspectives". web.archive.org. 2012-05-26. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1_கிளமெண்ட்_(நூல்)&oldid=3384529" இலிருந்து மீள்விக்கப்பட்டது