தௌசா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°54′00″N 76°19′48″E / 26.90000°N 76.33000°E / 26.90000; 76.33000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 41: வரிசை 41:


{{coord|26|54|00|N|76|19|48|E|region:IN-RJ_type:adm2nd_source:kolossus-nowiki|display=title}}
{{coord|26|54|00|N|76|19|48|E|region:IN-RJ_type:adm2nd_source:kolossus-nowiki|display=title}}
[[பகுப்பு:இராஜஸ்தான் மாவட்டங்கள்]]
{{Rajasthan}}
{{Rajasthan}}
[[பகுப்பு:தௌசா மாவட்டம்]]
[[பகுப்பு:இராஜஸ்தான் மாவட்டங்கள்]]

16:01, 2 திசம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

இராஜஸ்தான் மாநிலத்தில் தௌசா மாவட்ட அமைவிடம்

தௌசா மாவட்டம் (Dausa District) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இராஜஸ்தானில் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகவும் சிறிய மாவட்டமாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் தௌசா ஆகும். தௌசா நகரம் ஜெய்பூரிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்த இம்மாவட்டம் ஜெய்ப்பூர் கோட்டத்தில் உள்ளது.

அமைவிடம்

தௌசா மாவட்டத்தின் வடக்கில் அல்வார் மாவட்டம், வடகிழக்கில் பரத்பூர் மாவட்டம், தென்கிழக்கில் கரௌலி மாவட்டம், தெற்கில் சவாய் மாதோபூர் மாவட்டம், மேற்கில் ஜெய்ப்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தௌசா மாவட்டம் தௌசா, நாகல் ராஜாவதன், லால்சோத், சிக்ராய், மக்வா, லவன், பஸ்வா என ஏழு வருவாய் வட்டங்களையும்; பண்டிக்குய், தௌசா, லால்சோத், சிக்கிராய், மாக்வா மற்றும் லவன் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,634,409 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 87.65% மக்களும்; நகரப்புறங்களில் 12.35% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 24.09% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 857,787 ஆண்களும்; 776,622 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 905 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 3,432 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 476 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 68.16% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 82.98% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 51.93% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 258,144 ஆக உள்ளது. [1]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,582,335 (96.81 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 45,488 (2.78 %) ஆகவும்; சமண சமய, சீக்கிய சமய, கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்



"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌசா_மாவட்டம்&oldid=3327273" இலிருந்து மீள்விக்கப்பட்டது