யால்ட்டா மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: de:Konferenz von Jalta
சி தானியங்கி இணைப்பு: fy:Konferinsje fan Jalta
வரிசை 56: வரிசை 56:
[[fi:Jaltan konferenssi]]
[[fi:Jaltan konferenssi]]
[[fr:Conférence de Yalta]]
[[fr:Conférence de Yalta]]
[[fy:Konferinsje fan Jalta]]
[[gl:Conferencia de Yalta]]
[[gl:Conferencia de Yalta]]
[[he:ועידת יאלטה]]
[[he:ועידת יאלטה]]

23:43, 25 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

யால்ட்டா மாநாட்டில் நேச நாடுகள் மூன்று முக்கிய தலைவர்கள்: வின்ஸ்டன் சேர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட், ஜோசப் ஸ்டாலின் (அமர்ந்திருப்பவர்கள்)

யால்ட்டா மாநாடு (Yalta Conference), என்பது இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையே பெப்ரவரி 4, 1945 முதல் பெப்ரவரி 11, 1945 வரையில் இடம்பெற்ற உச்சி மாநாடு ஆகும். இது கிறைமியா மாநாடு (Crimea Conference) அல்லது ஆர்கோனோ மாநாடு (Argonaut Conference) எனவும் அழைக்கப்பட்டது.

மாநாட்டில் பங்குபற்றிய தலைவர்கள்

மாநாடு

மாநாடு பெப்ரவரி 4, 1945 இல் சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனில் கிறைமியா குடியரசில் யால்ட்டா என்ற நகரில் நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்களுக்கிடையில் ஆரம்பமானது. இது இரந்தாம் உலகப் போர்க் காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது உச்சி மாநாடாகும். முதலாவது டெஹ்ரான் மாநாடு 1943 இல் இடம்பெற்றது. மூன்றாவது பொட்ஸ்டாம் மாநாடு ஜெர்மனியில் இடம்பெற்றது. மூன்றாம் மாநாட்டில் காலஞ்சென்ற பிராங்கிளின் ரூஸ்வெல்ட்க்குப் பதிலாக ஹரி ட்ரூமன் கலந்து கொண்டார்.

முக்கிய தீர்மானங்கள்

  • நாசி ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரண் முக்கிய தீர்மானமாக எடுக்கப்பட்டது. போரின் பின்னர் ஜெர்மனி மூன்று கைப்பற்றப்பட்ட பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு பேர்லின் நகரம் மூன்று பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிப்பது.
  • பிரிக்கப்பட்ட ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் பிரான்சுக்கும் ஒரு பகுதி கொடுக்கப்படலாம் என ஸ்டாலின் ஒப்புக்கொண்டார்.
  • ஜேர்மனிய இராணுவமற்ற மற்றும் நாசிகளற்ற நாடாக ஆக்குவது.
  • ஜேர்மனியின் போர்க்கால செப்பனிடல் கட்டாயத் தொழில் மூலம் அமுல் படுத்துவதில்லை.
  • போலந்து பற்றியும் விவாதிக்கப்பட்டது. அக்காலத்தில் போலந்து செம்படையினால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தமையினால் போலந்தின் கம்யூனிச அரசை திருத்தியமைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.
  • ஐநாவில் ஸ்டாலின் இணைவாதற்கு ஸ்டாலினின் ஒப்புதல் எடுக்கப்பட்டது. ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கொடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
  • ஜெர்மனியைத் தோற்கடித்த பின்னர் 90 நாட்களில் ஜப்பானுக்கு எதிராகப் போரில் இறங்க ஸ்டாலின் ஒப்புக் கொண்டார்.
  • ஜேர்மனியின் பிரிப்பு பற்றி ஆராய்வதற்காக கமிட்டி ஒன்று அமைப்பது. பிரிக்கப்படவிருக்கும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு சில உதாரணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன:

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யால்ட்டா_மாநாடு&oldid=331952" இலிருந்து மீள்விக்கப்பட்டது