வண்ணாத்தி மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39: வரிசை 39:


{{DEFAULTSORT:Moorish Idol}}
{{DEFAULTSORT:Moorish Idol}}

[[பகுப்பு:மீன்கள்]]

14:52, 27 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Zanclus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
வண்ணாத்தி மீன்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Zanclus
இனம்:
இருசொற் பெயரீடு
Zanclus cornutus
(லின்னேயஸ், 1758)

வண்ணாத்தி மீன் (Moorish idol) என்பது ஒரு பெருங்கடல் மீன் இனமாகும். இது பேர்சிஃபார்மீசு வரிசையில் ஜான்க்லிடே குடும்பத்தின் தற்கால உயிரினங்களில் ஒரே பிரதிநிதி ஆகும். இவை வெப்ப மண்டலத்திலிருந்து துணை வெப்பமண்டல பவளப் பாறைகளை சார்ந்த பகுதிகள் மற்றும் கடற்காயல்களில் வசிக்கும் ஒரு பொதுவான மீன் ஆகும். இவை இந்தோ பசிபிக் முழுவதும் பரவலாக பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல பட்டாம்பூச்சி மீன்கள் ( பேரினம் ) வண்ணாத்தி மீன்களை ஒத்திருக்கிறது. இது மான்டே போல்காவின் மத்திய ஈசீனி இயோசின் காலத்தில் இருந்து அழிந்துபோன ஈசான்க்லஸ் பிரெவிரோஸ்ட்ரிஸின் நேரடி வழித்தோன்றலுடன் நெருங்கிய தொடர்புடையது.

வண்ணாத்தி மீனுக்கான ஆங்கிலப் பெயரில் உள்ள மூரிஷ் என்பது ஆப்பிரிக்காவின் மூர்ஸ் என்பதிலிருந்து வந்தது. அவர்கள் மீன் மகிழ்ச்சியைத் தருவதாக நம்பினர். வண்ணாதி மீன்கள் நீர்வாழ் உயிரின காட்சி சாலைகளில் மிகவும் விரும்பப்படும் மீன்களில் ஒன்று ஆகும். ஆனால் இவற்றை வளர்க்க பரந்த வாழ்விடங்களை உருவாக்கினாலும், இவற்றுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இவை பவளப் பாறைகளையும், கடற் பாசிகளையும் உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளதால், இவை கடலில் வாழும் சூழலை செயற்கை வாழிடங்களில் நகலெடுப்பது சிரமமான செயலாக உள்ளது.[சான்று தேவை]

விளக்கம்

இந்த மீன்களானது தட்டையான வட்டு போன்ற உடலமைப்பைபுடன் உள்ளது. வண்ணாத்தி மீன்களின் உடலானது கருப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்களுடன் மாறுபட்ட வரிகளுடன் தனித்து தோன்றுகின்றன. இதன் முகத்திலும், நடுபகுதியிலும், வாலிலும் மூன்று கரும் பட்டைகளைக் கொண்டது. இதன் கரும்பட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மஞ்சளும், வெள்ளையுமாக திகழும். இது மீன் காட்சியக பராமரிப்பாளர்களை கவர்ந்திழுக்கிறது. இந்த மீன்கள் ஒப்பீட்டளவில் சிறிய துடுப்புகளைக் கொண்டுள்ளன. வெள்ளையாக காணப்படும் முதுகுத் துடுப்பு வியத்தகு முறையில் நீண்டு இருக்கும். கீழ்பக்க வால் பக்கது துடுப்பும் பின்னோக்கி அரிவாள் போன்று வளைந்து காணப்படும். வண்ணாத்தி மீன்களின் வாய் நீண்ட, குழாய் போன்று துருத்தியபடி சிறிய முனையுடைய வாயாக இருக்கும். இதன் வாயில் நீண்ட முட்கள் போன்ற பற்கள் வரிசையாக இருக்கும். வண்ணாத்தி மீன் பட்டாம்பூச்சி மீனில் இருந்து ஒரு முக்கிய வேறுபாடாக கருப்பு பட்டை கொண்ட, குதத் துடுப்பு உள்ளது.

இந்த மீன்களில் கண்களுக்கு மேலே கொம்பு போன்ற ஒரு உறுப்பு நீட்டியபடி இருக்கும். குத துடுப்பில் இரண்டு அல்லது மூன்று முட்கள் இருக்கலாம். வண்ணாத்தி மீன்கள் அதிகபட்சமாக 23 cm (9.1 அங்) நீளம் வரை எட்டும். முதுகுத் துடுப்பில் உள்ள அரிவாள் போன்ற முதுகுத்தண்டுகள் வயதுக்கு ஏற்ப சுருங்கும். 

பரவலும் வாழ்விடமும்

வண்ணாத்தி மீன்கள் பொதுவாக தட்டையான பவழப்பாறைகள் உள்ள ஆழமற்ற நீர்நிலைகளை விரும்புகின்றன.இந்த மீன்கள் 0.3 முதல் 180 மீ (1 அடி 0 முதல் 590 அடி 7 அங்குலம் வரை) ஆழத்தில் இருண்ட மற்றும் தெளிவான நீருள்ள பகுதியில் காணப்படலாம். இவை காணப்படும் பகுதிகளில் கிழக்கு ஆபிரிக்கா, இந்தியப் பெருங்கடல், பாரசீக வளைகுடா , டூசி தீவுகள் ஆகியவை அடங்கும் ; ஹவாய், தெற்கு யப்பான் மற்றும் மைக்ரோனேஷியா முழுவதுமும், தெற்கு கலிபோர்னியா வளைகுடாவிலிருந்து தெற்கே பெரு வரை காணப்படுகின்றன.

உணவு

வண்ணாத்திகளின் உணவில் கடற்பாசிகள், பவளப் பூச்சிகள், கடற்குடுவை, மற்றும் பிற முதுகெலும்பிலி கடல் உயிரினங்கள் உள்ளன.[சான்று தேவை]

நடத்தை

இந்த மீன்கள் பெரும்பாலும் தனியாக காணப்படும். என்றாலும் வண்ணாத்தி மீன்கள் சோடிகளாக அல்லது எப்போதாவது சிறிய கூட்டமாகவும் திரியும். இவை ஒரு பகலாடி ஆகும். இரவில் பவளப் பாறைகளின் அடியில் மறைந்திருக்கும். பட்டாம்பூச்சி மீன்களைப் போல, இவை வாழ்நாள் முழுவதும் இணையுடன் வாழும். வயது வந்த ஆண் மீன்கள் ஒன்றின்மீது ஒன்று ஆக்கிரமிப்பைக் காட்டுவனவக உள்ளன.

குறிப்புகள்

  1. NatureServe (2013). "Zanclus cornutus". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/69741115/0. பார்த்த நாள்: 15 December 2014. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணாத்தி_மீன்&oldid=3305370" இலிருந்து மீள்விக்கப்பட்டது