செலினா பர்வின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பணிகள்: சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 35: வரிசை 35:
==பணிகள்==
==பணிகள்==
செலினா பர்வின் அவர்கள் 1957 ஆம் ஆண்டு மிடாபோர்டு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். சிறிது காலம் ரோகியா அரங்கில் செவிலியராக 1959 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்
செலினா பர்வின் அவர்கள் 1957 ஆம் ஆண்டு மிடாபோர்டு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். சிறிது காலம் ரோகியா அரங்கில் செவிலியராக 1959 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்
அஜிம்பூர் குழந்தைகள் இல்லத்தின் ஆசிரியராக 1960 முதல் 1965 வரையில் செயல்பட்டார். சலிமுல்லா ஆதரவற்றோர் இல்லத்தில் 1965 முதல் 1966 வரை வேலை செய்தார். பின்நாளில் பேகம் வார பத்திரிகையின் ஆசிரிய செயலராக 1966 முதல் 1967 வரையிலும் லாலானா வார பத்திரிகையின் பத்திரிகையாளராக 1967 முதல் 1971 வரையிலும் பணியாற்றி வந்தார்.
அஜிம்பூர் குழந்தைகள் இல்லத்தின் ஆசிரியராக 1960 முதல் 1965 வரையில் செயல்பட்டார். சலிமுல்லா ஆதரவற்றோர் இல்லத்தில் 1965 முதல் 1966 வரை வேலை செய்தார். பின்நாளில் பேகம் வார பத்திரிகையின் ஆசிரிய செயலராக 1966 முதல் 1967 வரையிலும் லாலானா வார பத்திரிகையின் பத்திரிகையாளராக 1967 முதல் 1971 வரையிலும் பணியாற்றி வந்தார். பின்நாளில் இவர் ஒரு அரசியல்வாதியை திருமணம் செய்து கொண்டார். இவர் தொடர்ந்து தனது சுயமரியாதை விடுதலை உணர்வை கருப்பொருள்களாக கொண்டு பத்திரிகைகளை வெளியிட்டார்.pro-liberation<ref name=DS-Tamanna/> மேலும் கல்வெட்டு என்ற வங்காள மொழி பத்திரிகையிலுமா அவ்வபோது வெளியிட்டார்.<ref name=academy/>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

08:24, 5 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

செலினா பர்வின்
பிறப்பு31 மார்ச் 1931
சோட்டா கல்யாண் நகர், ராம்கஞ்சு வட்டம், நவகாளி மாவட்டம் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதய வங்காள தேசம்)
இறப்பு14 டிசம்பர் 1971 (40வது அகவையில்)
ராயர்பசார் புத்தபூமி, தாக்கா மாவட்டம், பாகிஸ்தான் (தற்போதய வங்காள தேசம்)
இறப்பிற்கான
காரணம்
அல்-பாதரின் துப்பாக்கிச்சூடு
தேசியம்1931 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்தியர், 1947 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானியர்.
மற்ற பெயர்கள்மன்வாரா பேகம்
பணிபத்திரிகையாளர்
செயற்பாட்டுக்
காலம்
ரோகியா அரங்கின் செவிலியராக (1959 முதல் 1960 வரை)

அஜிம்பூர் குழந்தைகள் இல்லத்தின் ஆசிரியராக ( 1960 முதல் 1965 வரை)

சலிமுல்லா ஆதரவற்றோர் இல்ல பணி (1965 முதல் 1966 வரை)

பேகம் வார பத்திரிகையின் ஆசிரிய செயலராக (1966 முதல் 1967 வரை)

லாலானா வார பத்திரிகையின் பத்திரிகையாளராக (1967 முதல் 1971 வரை)
பெற்றோர்மௌல்வி அபிதர் ரகுமான் (தந்தை), மொசமாத் சஜிதா காதூன் (தாய்)

செலினா பர்வின் (Selina Parvin) (31 மார்ச் 1931 - 14 டிசம்பர் 1971) அவர்கள் வங்காள தேசத்தை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் மற்றும் கவிஞர் ஆவார்.[1] 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் ஒரு இராணுவ பிரிவான அல்-பாதர் கிழக்கு பாகிஸ்தான் படையினரால் வங்கதேச அறிவாளிகள் படுகொலை ஒன்றை நடத்தப்பட்டது. ஒன்பது மாதம் நடைபெற்ற வங்கதேச சுதந்திர வெற்றி போரின் முடிவுக்கு சற்று முன்பே டிசம்பர் மாதம் 14 ஆம் நாள் அல்-பாதர் இராணுவத்தால் செலினா பர்வின் படுகொலை செய்யப்பட்டார்.[2] இவர் பேகம் வார பத்திரிகை, லாலானா வார பத்திரிகை மற்றும் கல்வெட்டு முதலிய வங்காள மொழி பத்திரிகைகளில் பணியாற்றினார்.[1] இவரது உடல் அஜிம்பூர் நகரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.[3]

இளமை பருவம்

செலினா அவர்கள் நவகாளி மாவட்டத்தில் முன்பு இருந்த ராம்கஞ்சு வட்டத்தில் பிறந்தார்.[1][3] இவரின் தந்தை மௌல்வி அபிதர் ரகுமான் ஒரு ஆசிரியர் ஆவார். இரண்டாம் உலக போரின் முடிவில் பெனி மாவட்டத்தில் உள்ள இவர்களது இல்லம் கைப்பற்றப்பட்டது. எனவே இவர் தன் குடும்பத்துடன் கிராமத்தில் குடியேறினர். செலினா பர்வின் தனது பனிரெண்டாம் அகவையில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே கட்டுரை எழுதுதல் மற்றும் கவிதை எழுதுதல் முதலியவற்றை கற்று தேர்ந்தார். அந்த காலங்களில் நிலவிய பாரம்பரிய பழமைவாத கிராமப்புற சூழல் காரணமாக பள்ளிப்படிப்பை இவர் நிறுத்த வேண்டியிருந்தது. தனது பதினான்காம் அகவையில் இவரின் ஒப்புதல் இல்லாமலேயே இவருக்கு குழந்தை திருமணம் நடைபெற்றது. விரும்பமின்மையால் தன் கணவருடன் சேர்ந்து வாழ எதிர்ப்பு தெரிவித்தார். இவர் மேலும் படிக்க விரும்பினாலும் பள்ளி தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. பத்து ஆண்டுகளுக்கு பின் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.[4]

பணிகள்

செலினா பர்வின் அவர்கள் 1957 ஆம் ஆண்டு மிடாபோர்டு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். சிறிது காலம் ரோகியா அரங்கில் செவிலியராக 1959 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின் அஜிம்பூர் குழந்தைகள் இல்லத்தின் ஆசிரியராக 1960 முதல் 1965 வரையில் செயல்பட்டார். சலிமுல்லா ஆதரவற்றோர் இல்லத்தில் 1965 முதல் 1966 வரை வேலை செய்தார். பின்நாளில் பேகம் வார பத்திரிகையின் ஆசிரிய செயலராக 1966 முதல் 1967 வரையிலும் லாலானா வார பத்திரிகையின் பத்திரிகையாளராக 1967 முதல் 1971 வரையிலும் பணியாற்றி வந்தார். பின்நாளில் இவர் ஒரு அரசியல்வாதியை திருமணம் செய்து கொண்டார். இவர் தொடர்ந்து தனது சுயமரியாதை விடுதலை உணர்வை கருப்பொருள்களாக கொண்டு பத்திரிகைகளை வெளியிட்டார்.pro-liberation[2] மேலும் கல்வெட்டு என்ற வங்காள மொழி பத்திரிகையிலுமா அவ்வபோது வெளியிட்டார்.[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Profiles of martyred intellectuals". The Daily Star. 14 December 2006. http://archive.thedailystar.net/suppliments/2006/december/december14th/intellectuals.htm. பார்த்த நாள்: 7 November 2013. 
  2. 2.0 2.1 Khan, Tamanna (4 November 2013). "It was matricide". The Daily Star. http://www.thedailystar.net/beta2/news/it-was-matricide/. பார்த்த நாள்: 7 November 2013. 
  3. 3.0 3.1 Hossain, Selina (2012). "Parvin, Selina". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Parvin,_Selina. 
  4. 4.0 4.1 স্মৃতি: ১৯৭১, Volume 4, Page 98, Bangla Academy, ISBN 984-07-3351-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலினா_பர்வின்&oldid=3273282" இலிருந்து மீள்விக்கப்பட்டது