சாதனை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Manual revert கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{Infobox film
{{Infobox film
| name = சாதனை
| name = சாதனை
| image = 480px-hqdefault(1).jpg
| image =
| caption = Poster
| caption = Poster
| director = [[ஏ. எஸ். பிரகாசம்]]
| director = [[ஏ. எஸ். பிரகாசம்]]

12:40, 30 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

சாதனை
இயக்கம்ஏ. எஸ். பிரகாசம்
தயாரிப்புஎம். ஆர். எம். ஜவகர்
இமயம் பிரகாசம்
கதைஏ. எஸ். பிரகாசம்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
பிரபு கணேசன்
கே. ஆர். விஜயா
நளினி
புவனி
ஒளிப்பதிவுஜி. ஆர். நாதன்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
கலையகம்பிரகாஷ் புரொடைக்சன்ஸ்
வெளியீடு10 சனவரி 1986 (1986-01-10)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாதனை (Saadhanai) என்பது 1986 ஆண்டையத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன், அவரது மகன் பிரபு கணேசன், கே. ஆர். விஜயா, நளினி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, ஏ. எஸ். பிரகாசம் இயக்கிய திரைப்படம் ஆகும்.

கதைச்சுருக்கம்

சிவாஜி ஒரு திரைப்பட இயக்குநர் ஆவார். சலீம், அனார்கலியின் காதல் கதையை படமாக்குவதே இவரது கனவுத் திட்டம். அனார்கலியின் பாத்திரத்திற்கு பொருந்தக்கூடிய ஒரு பெண்ணைத் நீண்டகாலம் தேடுகிறார். இறுதியில் ஒரு பிச்சைக்காரியை (நளினி) அந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமானவளாக கண்டடைகிறார். இதன்பிறகு நளினியை அனார்கலி பாத்திரத்தில் நடிக்கவைத்து படத்தைத் தொடங்குகிறார். சிவாஜியின் மனைவி கே. ஆர். விஜயா, சிவாஜி, நளினியின் உறவை சந்தேகிக்கத் தொடங்குகிறார். இதனால் அவர்களது குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படுகிறது. இதை அறிந்த நளினி, தன்னால், தன் வழிகாட்டியின் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படக்கூடாது என்று நினைக்கிறார். இதனால் நளினி யாருக்கும் சொல்லாமல் சென்றுவிடுகிறார். இதனால் சிவாஜி படத்தயாரிப்பை கைவிடுகிறார். ஆண்டுகள் கடந்து செல்கின்றன. . . சிவாஜியின் மகன் பிரபு ஆன்மீகத்தில் ஈடுபடு கொண்டவராக இருக்கிறார். . . இதனால் பிரபு, பிரம்மசரிய வாழ்க்கையை வாழ விரும்புகிறார். சிவாஜி ஒரு சந்தர்ப்பத்தில், பவானியின் நடனத்தைப் பார்க்கிறார். இந்த பவானி அனாரகலி வேடத்துக்கு பொருத்தமாக இருப்பாள் என்று நினைக்கிறார். நடனமாடிய பெண் வேறு யாருமல்ல நளினியின் மகள் என்பது அவருக்குத் தெரியவருகிறது. இப்போது நளினியின் மகள் (பவானி) அனார்கலியாகவும், பிரபு சலீமாகவும் நடிக்க தேர்வு செய்யப்படுகின்றனர். நிஜ வாழ்க்கையில் பிரபுவும் பவனியும் காதலிக்கின்றனர். இந்த விசயம் வெளிவருகிறது. காதலுக்கு எதிர்ப்பு தோன்றுகிறது. படத்தின் இறுதிக் காடசி படமாக்கும்போது பிரபுவும், பவானியும் நஞ்சருந்தி இறந்துவிடுகினறனர்.

நடிகர்கள்

இசை

இப்படத்தில் இடம்பெற்ற ஏழு பாடல்களுக்கு, இளையராஜா இசையமைத்தார். [1] [2] இளையராஜாவும் படத்தில் தோன்றுகிறார்.

  1. "அன்பே அன்பே" - எஸ். ஜானகி
  2. "அத்தி மரப் பூவிது" - எஸ். ஜானகி
  3. "இங்கே நான் கண்டேன்" - மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம்
  4. "ஓ வானம்பாடி" - எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  5. "ராஜ மோகினி" - எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமண்யம்
  6. "வாடி என் ருக்கு" - மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
  7. "வாழ்வே வா" - எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமண்யம்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதனை_(திரைப்படம்)&oldid=3266618" இலிருந்து மீள்விக்கப்பட்டது